Microsoft சிஇஓ சத்ய நாடெல்லா-க்கு பத்ம பூஷன் விருது.. விருது வாங்கிய பின் என்ன சொன்னார் தெரியுமா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகின் முன்னணி டெக்னாலஜி நிறுவனமான மைக்ரோசாப்ட் ஆரம்பம் முதல் அதன் நிறுவனர்களான பில் கேட்ஸ் மற்றும் ஸ்டீவ் பால்மர் ஆகியோர் தலைமையில் மட்டுமே நிர்வாகம் செய்யப்பட்டு வந்த நிலையில், 2014ல் மைக்ரோசாப்ட் நிர்வாகம் மிகவும் முக்கியமான முடிவை எடுத்தது.

 

பில் கேட்ஸ் மற்றும் ஸ்டீவ் பால்மர் நேரடி நிர்வாகப் பணியில் இருந்து வெளியேறிய நிலையில் புதிதாக ஒருவரை நியமிக்க வேண்டிய கட்டாயம் உருவானது, இதன் வாயிலாக 2014 பிப்ரவரி மாத துவக்கத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓ-வாக நியமிக்கப்பட்டார்.

அன்று முதல் இன்று வரையில் மைக்ரோசாப்ட் வளர்ச்சி பிரம்மாண்டமாக உள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷன் விருதை சத்ய நாடெல்லாவுக்கு வழங்கப்பட்டு உள்ளது.

1000 பேரை பணிநீக்கம் செய்த மைக்ரோசாப்ட்.. ஊழியர்கள் அதிர்ச்சி..! 1000 பேரை பணிநீக்கம் செய்த மைக்ரோசாப்ட்.. ஊழியர்கள் அதிர்ச்சி..!

மைக்ரோசாப்ட் சிஇஓ

மைக்ரோசாப்ட் சிஇஓ


மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓ-வான சத்ய நாடெல்லா இந்தியாவின் 3வது உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றுள்ளார். இந்த விருதை சான் பிரான்சிஸ்கோ-வின் இந்திய கவுன்சில் ஜெனரல் டாக்டர் டி.வி.நாகேந்திர பிரசாத் கையில் இருந்து பெற்றுள்ளார் சத்ய நாடெல்லா.

சத்ய நாடெல்லா

சத்ய நாடெல்லா

ஜனவரி மாதம் இந்தியா வர திட்டமிட்டு இருக்கும் சத்ய நாடெல்லா, விருது பெற்ற பின்பு விருதை பெற்ற பின்பு தான் பெருமை அடைவதாகவும், இந்தியாவில் அனைத்துத் தரப்பு மக்களுடன் பணியாற்ற விரும்புவதாகவும், டெக் உதவியுடன் இன்னும் வளர்ச்சி அடைய உதவ உறுதி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார் சத்ய நாடெல்லா.

பத்ம பூஷன் விருது
 

பத்ம பூஷன் விருது

இந்த வருடம் விருதுக்கு அறிவிக்கப்பட்ட 17 பேரில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓ-வான சத்ய நாடெல்லா-வும் ஒருவர். மேலும் குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் இந்திய மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் கூறியுள்ளார் சத்ய நாடெல்லா.

டிஜிட்டல் தொழில்நுட்பம்

டிஜிட்டல் தொழில்நுட்பம்

பொருளாதாரம், சமூக மற்றும் தொழில்நுட்ப என அனைத்திலும் வரலாறு காணாத வகையில் மாற்றத்தை எதிர்கொண்டு இருக்கிறது. மேலும் அடுத்த 10 வருடம் டிஜிட்டல் தொழில்நுட்பம் அனைத்துத் துறைகளில் முக்கியமானதாக இருக்கப் போகிறது. இந்தியாவில் பெரும் தொழிற்துறை முதல் சிறு தொழிற்துறை வரையில் அனைத்திலும் டிஜிட்டல் சேவை மாற்றங்கள் இருக்கும் எனச் சத்ய நாடெல்லா தெரிவித்துள்ளார்.

மைக்ரோசாப்ட் முதலீடு

மைக்ரோசாப்ட் முதலீடு

மைக்ரோசாப்ட் இந்திய வர்த்தகச் சந்தையை மையமாக வைத்து ஆசிய சந்தையில் தனது வர்த்தகத்தைப் பல வகையில் விரிவாக்கம் செய்து வருகிறது. குறிப்பாகக் கிளவுட் சேவைகள், டெக் சேவைகள், டேட்டா சென்டர் போன்றவற்றில் அதிகப்படியான தொகையை முதலீடு செய்து வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Microsoft CEO Satya Nadella receives Padma Bhushan in USA from India's Consul General in San Francisco

Microsoft CEO Satya Nadella receives Padma Bhushan in USA from India's Consul General in San Francisco
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X