ஐடி ஊழியர்களுக்கு இதுவும் சிக்கல் தான்.. மைக்ரோசாப்ட் CEO சத்ய நாதெல்லா அதிரடி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகம் முழுக்க ருத்ர தாண்டவம் ஆடி வரும் கொரோனாவின் தாக்கத்தினை கட்டுப்படுத்த, உலகம் முழுக்க பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்ற பரிந்துரைத்து வருகின்றன.

 

இதன் காரணமாக மக்கள் வெளியே செல்வது குறையும். இதன் மூலம் கொரோனா பரவுவது கட்டுப்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது. ஆக இன்று வரை பெரும்பாலான நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதித்து வருகின்றன.

அதிலும் ஐடி நிறுவனங்களில் சுமார் 90% பேர் வீட்டில் இருந்து தான் பணியாற்றி வருகின்றனர்.

WFH தொழிலாளர் சட்டத்தில் கொண்டு வர வேண்டும்

WFH தொழிலாளர் சட்டத்தில் கொண்டு வர வேண்டும்

கடந்த வாரத்தில் வெளியான அறிக்கை ஒன்றில் தொழிலாளர்கள் சட்டத்தில் வீட்டில் இருந்து பணி புரிவதை (Work from home) புதிய அம்சமாக கொண்டு வர வேண்டும் என்று தகவல் தொழில்நுட்பத்துறை நிறுவனங்கள் சில வேண்டுகோள் விடுத்துள்ளன. இது குறித்து மத்திய அரசு அதிகாரிகளுடன் அண்மையில், தகவல் தொழில்நுட்பத்துறை நிறுவன தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளதாகவும் செய்திகள் வெளியானது.

வீட்டில் இருந்தே பணிபுரியுங்கள்

வீட்டில் இருந்தே பணிபுரியுங்கள்

இதற்கிடையில் டிவிட்டர் மற்றும் கூகுள் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்றும் படி கூறி வருகின்றன. ஏன் சில நிறுவனங்கள் நிரந்தரமாகக் கூட வீட்டில் இருந்து பணிபுரிய பரிந்துரைக்கலாம் என்றும் கூறி வருகின்றன. இப்படி ஒரு புறம் பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.

ஊழியர்களுக்கு தீங்கு தான்
 

ஊழியர்களுக்கு தீங்கு தான்

ஆனால் மறுபுறம் தகவல் தொழில்நுட்ப துறையில் ஜாம்பவான் ஆன, மைக்ரோசாப்ட் நிறுவனம் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிவதும் அவர்களுக்கு தீங்குதான். அது அவர்களின் சமூக தொடர்பு மற்றும் மன ஆரோக்கியத்திற்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் ஊழியர்கள் சந்திப்பினை எதுவும் மாற்ற முடியாது. அதாவது வீடியோ கான்ப்ரன்சிங் கால்கள் கூட மாற்ற முடியாது என்றும் கூறியுள்ளார்.

இதெல்லாம் எப்படி இருக்கும்?

இதெல்லாம் எப்படி இருக்கும்?

தி நியூயார்க் டைம்ஸ் உடனான உரையாடலில், ஊழியர்களின் மன நிலை எப்படி இருக்கும்? சமூக இடைவெளி எப்படி? நான் உணரும் விஷயங்களில் ஒன்று, நாம் எல்லோரும் வீட்டில் இருந்து பணியாற்றும் போது, நாம் கட்டியெழுப்பிய சில சமூக மூலதனத்தினை எரிக்கிறோம் என்றும் சில விஷயங்களை மேற்கோள் காட்டியுள்ளார்.

டிவிட்டர் கருத்து

டிவிட்டர் கருத்து

இந்த கருத்தானது டிவிட்டர் கொரோனா முடிந்த பின்னரும் கூட எப்போதும் தனது ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்றலாம் என்று கூறிய பின்பு, இது வெளி வந்துள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன. பேஸ்புக், கூகுள், ஆல்பாஃபெட் உள்ளிட்ட பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை இந்த ஆண்டின் இறுதி வரையில் வீட்டில் இருந்து பணியாற்ற கூறியுள்ளன. ஆனால் அதையெல்லாம் தாண்டி ஒரு படி மேலே போய் டிவிட்டர் இவ்வாறு கூறியுள்ளது.

மைக்ரோசாப்ட் அக்டோபர் வரையில் அனுமதி

மைக்ரோசாப்ட் அக்டோபர் வரையில் அனுமதி

இதற்கிடையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் அடுத்து வரும் அக்டோபர் வரையில் தனது ஊழியர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இந்த தொழில்நுட்ப நிறுவனத்தின் பங்கு விலையானது 14 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த நிறுவனம் கிட்டதட்ட 140 பில்லியன் தொகையினையும் கொண்டுள்ளதாக லைவ் மிண்ட் செய்திகள் கூறுகின்றன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Microsoft CEO satya nadella said WFH could be harmful for employees

Microsoft CEO satya nadella warned work from home permanent could have serious consequences for social interaction and mental health for workers.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X