Microsoft செய்வது அநியாயம்.. 40000 பேரை சேர்த்து விட்டு 10000 பேரை பணிநீக்கம் செய்வது ஏன்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சர்வதேச டெக் ஊழியர்களைப் பீதியில் வைத்திருக்கும் பணிநீக்க அறிவிப்பில் முக்கியத் திருப்பமாக,மைக்ரோசாப்ட் தனது ஊழியர்களுக்

கும் செய்யும் அநியாயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தற்போது பணிநீக்கம் செய்துவரும் பெரும்பாலான நிறுவனங்கள் பொருளாதார மந்த நிலையைக் காரணம் காட்டியும், செலவுகளைக் குறைக்க வேண்டும் என்பதற்காகவும் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக அறிவித்தாலும், உண்மையில் நிறுவனங்கள் சந்தையில் இருக்கும் டிமாண்ட்-ஐ சரியாகக் கணிக்காமல் அளவுக்கு அதிகமாக ஊழியர்களைப் பணியில் சேர்த்துள்ளது.

இதைச் சமாளிக்கவே தற்போது அதிகளவிலான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது. இது எந்த நிறுவனத்திற்குப் பொருந்துகிறதோ இல்லையோ மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு நன்றாகப் பொருந்துகிறது.

தினமும் 1600 பேர் பணிநீக்கம்.. டெக் ஊழியர்களைப் பயமுறுத்தும் ரிப்போர்ட்..! தினமும் 1600 பேர் பணிநீக்கம்.. டெக் ஊழியர்களைப் பயமுறுத்தும் ரிப்போர்ட்..!

சத்ய நாடெல்லா

சத்ய நாடெல்லா

உலகின் பெஸ்ட் சிஇஓ-வாக அங்கிகாரம் பெற்றுள்ள சத்ய நாடெல்லா தலைமையிலான மைக்ரோசாப்ட் 2வது ரவுண்டு பணிநீக்க அறிவிப்பில் சுமார் 11000 ஊழியர்களை இன்ஜினியரிங் மற்றும் HR பிரிவில் இருந்து பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

 லின்கிடுஇன் தளம்

லின்கிடுஇன் தளம்

இந்த அறிவிப்பு வெளியான நாளில் இருந்து லின்கிடுஇன் தளம் முழுவதும் கண்ணீருடன் வெளியேறும் மைக்ரோசாப்ட் ஊழியர்களின் பதவிகள் நிறைந்துள்ளது.

மைக்ரோசாப்ட் பணிநீக்கம்

மைக்ரோசாப்ட் பணிநீக்கம்

மைக்ரோசாப்ட் தற்போது பணிநீக்கம் செய்யப்பட்ட பெரும்பாலானவர்கள் அதிக வயதுடையவர்கள், அதிகம் அனுபவம் கொண்டவர்கள், அதிகச் சம்பளம் வாங்கும் பதவியில் இருப்பவர்கள் தான். இந்தக் கண்ணீர் கதை ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் மெல்போர்ன்-ஐ சேர்ந்த ஒரு demographer முக்கியமான புள்ளிவிவரத்தை வெளியிட்டு உள்ளார்.

அதிகப் பணியாளர்கள்

அதிகப் பணியாளர்கள்

மெல்போர்னை சேர்ந்த புள்ளியியல் ஆய்வாளர் என அறியப்படும் சைமன் குயெஸ்டன்மேச்சர் பகிர்ந்துள்ள புள்ளிவிவரங்களின்படி, ஜூன் 2021 முதல் 2022 வரை மைக்ரோசாப்ட் தனது பணியாளர்களின் எண்ணிக்கை 1,81,000 இலிருந்து 2,21,000 ஆக உயர்த்தியுள்ளது.

40,000 ஊழியர்கள்

40,000 ஊழியர்கள்

அதாவது 1.5 வருடத்தில் 40,000 ஊழியர்களைக் கண்மூடித்தனமாக அதிகரித்துள்ளது. ஆனால் அடுத்த வருடமே யாரும் எதிர்பார்க்காத வகையில் தனது முந்தைய நடவடிக்கைக்குச் சற்றும் பொருத்தம் இல்லாமல் 10000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.

வீடியோகேம் இல்லை,

வீடியோகேம் இல்லை,

மைக்ரோசாப்ட் விளையாடுவதற்கு இது வீடியோகேம் இல்லை, நிஜ மக்களின் நிஜமான வாழ்க்கை இதில் அடக்கம். மேலும் Simon Kuestenmacher தனது டிவிட்டர் பதிவில் மைக்ரோசாப்ட் ஓவ்வொரு வருடமும் எத்தனை ஊழியர்களைப் பணியில் சேர்த்துள்ளது, இதன் மூலம் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை எவ்வளவு உயர்ந்துள்ளது என்ற தகவலையும் வெளியிட்டு உள்ளார்.

வரலாற்றுச் சாதனை

வரலாற்றுச் சாதனை

இதில் மைக்ரோசாப்ட் வரலாற்றில் அதிகப்படியான ஊழியர்களைப் பணியில் சேர்த்தது 2022, அதிகப்படியான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது 2023. ஆனால் தற்போது இதில் மாட்டிக்கொண்டு விழிப்பது ஐடி மற்றும் டெக் ஊழியர்கள் தான், அமேசானும் இதேபோன்ற தவறு செய்தது ஆனால் அதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டது. ஆனால் மைக்ரோசாப்ட் இதுக்குறித்து வாயை திறக்கவில்லை.

2 வருடம்

2 வருடம்

மேலும் மைக்ரோசார்ட் சிஇஓ சத்ய நாடெல்லா அடுத்த 2 வருடத்திற்குக் குளோபல் டெக் துறைக்கு மிகவும் கடினமான காலகட்டமாகத் தான் இருக்கும் எனக் கணித்துள்ளார், இதனால் 2023 ஆம் ஆண்டில் ரெசிஷன் பாதிப்பு மிகவும் மோசமாக இருந்தால் கட்டாயம் அடுத்த ரவுண்ட் பணிநீக்கம் வர வாய்ப்பு உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Microsoft Crazy hiring leads 10000 job cuts; Is satya nadella made blunder mistake

Microsoft Crazy hiring leads 10000 job cuts; Is satya nadella made blunder mistake
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X