ஆட்டம் இனிமேதான் ஆரம்பம்.. கூகுளின் குரோம் vs பிங்.. ஓபன்ஏஐ உடன் கைகோர்த்த மைக்ரோசாஃப்ட்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: மைக்ரோசாஃப்டின் பிங் (Bing) தேடுதளத்தில் ChatGPTஐ இணைத்திருப்பது பயனர்களிடையே வரவேற்பை பெற்றிருப்பதாகவும், இது கூகுளுக்கு போட்டியாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.

இன்டர்நெட் பயன்பாட்டுக்கு வந்தது முதல் சர்ச் என்ஜின்கள் எனப்படும் பிரவுசர்கள் வரத் தொடங்கிவிட்டன. இப்படி வந்த பல பிரவுசர்கள் மூத்த குடிதான் இன்டர்நெட் எக்ஸ்புளோரர். 1990ம் ஆண்டு முதல் முதலாக பிரவுசர்கள் பயன்பாட்டுக்கு வந்தன. இந்நிலையில் 5 ஆண்டுகள் கழித்து மைக்ரோஃசாப்ட் நிறுவனத்தின் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் -1 பயன்பாட்டுக்கு வந்தது.

அதுவரை பிரவுசர்களில் சில அடிப்படை அம்சங்களை மட்டும் பயன்படுத்தி வந்த பயனாளர்களுக்கு இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தடாலடி மாற்றத்தை கொண்டு வந்த மிகவும் மேம்பட்ட பிரவுசரை போன்று தெரிந்தது. இதுமட்டுமல்லாது பயன்படுத்துவதற்கு மிகவும் பாதுகாப்பானது என்பதால் அரசு துறைகளில் இதனை பயன்படுத்த தொடங்கினர். என்னதான் பாதுகாப்பானது என்று சொன்னாலும், போட்டி என்று வரும்போது வேகம்தான் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

ஆட்டம் இனிமேதான் ஆரம்பம்.. கூகுளின் குரோம் vs பிங்.. ஓபன்ஏஐ உடன் கைகோர்த்த மைக்ரோசாஃப்ட்

அப்படி வந்ததுதான் firefox. வேகம், மற்றும் பல்வேறு தளங்களிலிருந்து தரவுகளை எடுத்துக்கொடுப்பது போன்றவை காரணமாக இன்டர்நெட் எக்ஸ்புளோரர் -1லிருந்து கொஞ்சம் பேர் firefox பக்கம் நகர தொடங்கினர். ஆனால் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் -1க்கு போட்டியாக வந்தது வெறும் FireFox மட்டுமல்ல, Brave எனும் பிரசவுசரும் கூடதான். இதில் என்ன ஸ்பெஷல் எனில் விளம்பரங்கள் எதுவும் வெப்சைட்டில் குறுக்கிடாது. இதனையடுத்து Opera உள்ளிட்ட பிரவுசரும் வரத்தொடங்கியது.

இப்படியாக மைக்ரோசாஃப்டின் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் -1 வந்த பின்னர் 13 ஆண்டுகள் கழித்து வந்ததுதான் கூகுள் குரோம். அந்த ஆண்டில் குரோம் மட்டுமல்லாது Maxthon 2.0, Mozilla Firefox 3, Opera 9.5,Apple Safari 3.1, Konqueror 4, Amaya 10.0, Flock 2, Amaya 11.0 என பிரவுசர்கள் குவியத் தொடங்கின. இதனையடுத்து இன்டர்நெட் எக்ஸ்புளோரர் -1 கொஞ்சம் கொஞ்சமாக ஆட்டம் காண தொடங்கியது. ஒரு கட்டத்தில் மொத்த கேமும் கூகுளின் குரோம் கையில் செல்ல இன்டர்நெட் எக்ஸ்புளோரர் -1 விழிபிதுங்கியது.

இதனையடுத்து 2013ம் ஆண்டு இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தனது 11வது பதிப்பை வெளியிட்டது. இதுதான் இதன் கடைசி பதிப்பு. அதன் பின்னர் அதற்கு மாற்றாக மைக்ரோசாஃப்ட் கொண்டு வந்த பிரவுசர்தான் மைக்ரோசாஃப்ட் எட்ஜ். பின்னர் இறுதியா இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் சேவையை மைக்ரோசாஃப்ட் நிறுத்திக்கொள்வதாக கடந்த ஆண்டு அறிவித்தது.

ஆனால் கேம் இத்துடன் முடிந்துவிடவில்லை. ஆட்டம் இதன் பின்னர்தான் சூடுபிடிக்க தொடங்கியது. அதாவது இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்கு மாற்றாக வந்த Microsoft Edge கூகுளின் குரோம் உடன் போட்டி போட தொடங்கியது. இப்படியான இதன் அடுத்த பரிணாமம்தான் Bing. இந்த போட்டியை தீவிரப்படுத்த முயன்ற Bing பிரவுசர் OpenAI உடன் கைகோர்த்தது. OpenAIன் ChatGPT என்பது இப்போது உலகத்தையே ஒரு கலக்கு கலக்கி வருகிறது. எனவே இந்த கூட்டணி வெற்றியை கொடுக்கும் என மைக்ரோசாஃப்ட் நம்பிக்கொண்டிருக்கிறது.

பொதுவாக கூகுளில் ஒரு விஷயத்தை தேடினால் அந்த விஷயம் தொடர்பான வெப் சைட்டுகளைதான் காட்டும். ஆனால், இந்த ChatGPT நாம் எதைப்பற்றி தேடுகிறோமோ அதையே விரிவாக எடுத்து காட்டும். இப்படி கெத்து காட்டும் ChatGPT-ஐ நம்முடைய Bing-ல் இணைத்தால் என்ன? என்று யோசித்த மைக்ரோசாஃப்ட் தற்போது இதனை சாத்தியப்படுத்தியுள்ளது. சர்வதேச அளவில் பிரவுசர்களில் ChatGPT போன்ற AI தொழில் நுட்பத்தை பயன்டுத்திய முதல் பிரவுசர் என்கிற பெயரை Bing பெற்றிருக்கிறது.

Bing பிரவுசரில் பிரீமியம் வசதி இருக்கிறது. இதில் உறுப்பினராக உள்ளவர்கள் ChatGPT-ஐ இலவசமாக பயன்படுத்திக்கொள்ள முடியும். தற்போது இந்த ChatGPT-ல் 2021ம் ஆண்டு வரை நடந்த சம்பவங்கள் மட்டுமே தரவுகளாக சேமிக்கப்பட்டுள்ளன. எப்படி இருந்தாலும், பிரவுசிங் செய்ய Bingக்கும், அதேபோல விரிவாக தேட ChatGPTயும் ஒரே இடத்தில் கிடைப்பதை இன்டர்நெட் பயணாளர்கள் வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள். எனவே இதன் மூலம் கிளவுட்-கம்ப்யூட்டிங் வணிகத்தை ஈர்க்கவும், கூகுளை வீழ்த்தவும் மைக்ரோசாஃப்ட் திட்டமிட்டுள்ளது.

இதில் கவனிக்க வேண்டிய அம்சம் என்னவெனில் OpenAI தனது படைப்பான ChatGPT-ஐ அடுத்த கட்டத்திற்கு அப்டேட் செய்யும் வரை மைக்ரோசாஃப்ட் காத்திருக்காமல் OpenAI- அடிப்படையிலான செயற்கை நுண்ணறிவு மென்பொருளுடன் இணைந்த புரொகிராம்களை எழுதுவதற்கு Instacart Inc., Redfin Corp., Zillow Group Inc. மற்றும் Kayak Software Corp போன்ற மென்பொருள் நிறுவனங்களை பயன்படுத்தி வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Microsoft's Bing joins hands with Open AI to take on Google

The integration of ChatGPT into Microsoft's Bing search engine is said to be popular among users, and it is said to compete with Google.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X