டெல்லி: நாட்டில் நிலவி வரும் பல பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில் நாட்டில் உள்ள பல துறைகளும் வீழ்ச்சி கண்டு வருகின்றது. இதில் மிக பரவலாக பேசப்படும் ஐடி துறையும் ஒன்று.
இதனால் ஐடி துறையில் உள்ள பெரிய பெரிய டெக் ஜாம்பவான்கள் கூட பல பணி நீக்கம் செய்தன. இன்னும் சில நிறுவனங்கள் சம்பள குறைப்பும் செய்து வருகின்றன.
இதற்கிடையில், பல நிறுவனங்கள் புதிய பணியமர்த்தல் என்பது இல்லை என்று கூறி வருகின்றன.
ஐடி ஊழியர்களுக்கே இந்த நிலையா.. அங்கேயும் இனப்பாகுபாடா..!

ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி
இந்த நிலையில் ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில், புதியதாக ஊழியர்களை பணியமர்த்தப் போவதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதுவும் இந்த பணியமர்த்தல் இந்தியாவில் இருக்கும் என்றும் கூறியுள்ளது. அதோடு டிஜிட்டல்மயமாக்கலில் வேகமான வளர்ச்சி மற்றும் கிளவுட் துறையில் வளர்ச்சி காணலாம் என்றும், அதில் புதிய முதலீடுகளும் உள்ளதாகவும் கூறியுள்ளது.

நிறுவனத்தினை விரிவுபடுத்த திட்டம்
இந்தியாவில் உலகளாவிய தரவு மையங்களைக் கொண்ட நிறுவனங்களில் மைக்ரோசாப்ட் நிறுவனமும் உண்டு என்பது கவனிக்கதக்க விஷயம். ஏற்கனவே மூன்று தரவு மையங்கள் இந்தியாவில் உள்ள நிலையில், இன்னும் இதனை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் இதற்காக மைக்ரோசாப்ட் நிறுவனம் தொடர்ந்து முதலீடு செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மைரோசாப்ட் விருப்பம்
மைக்ரோசாப்ட் இந்தியாவின் தலைவர் ஆனந்த் மகேஷ்வரி TOIஐக்கு ஐடி துறை பற்றி அளித்த பேட்டியில், நிறுவனம் புதிய ஊழியர்களை பணியில் அமர்த்துமா என்று கேட்டதற்கு, இன்று நாங்கள் இருக்கிறோம் என்றும், நாங்கள் எங்கள் பணியை தொடருவோம் என்றும் கூறியுள்ளார். அதுமட்டும் அல்ல, மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்தியாவில் தனது பணிகளை பராமரிக்க விரும்புகிறது.

டிஜிட்டல் திறன்
எங்களின் முதலீடுகள் தொடர்ந்து டிஜிட்டல் திறன்களை உருவாக்கும். கண்டுபிடிப்புகளை உருவாக்கும். கிளவுட் மற்றும் தரவு மையங்களைப் பற்றி பேசும்போது இது மூன்று பரந்த அம்சங்களைக் கொண்டது. மேலும் மைக்ரோசாப்ட் நிறுவனம் உள்நாட்டில் அதிக தரவுகளைக் கொண்டது. தற்போது மூன்று தரவுக் மையங்களைக் கொண்டிருந்தாலும், விரிவாக்கம் செய்து வருகிறது.

அத்தியாவசிய தேவை
உண்மையில் நாங்கள் கொரோனா காலத்தில் அதைச் செய்தோம். இது தேவைப்படும் மற்றும் ஒரு அத்தியாவசிய சேவையாகும். மேலும் எதிர்கால தயாரிப்புகளை தொடர்ந்து நாங்கள் தொடர்ந்து மேம்படுத்த வேண்டும். உள்நாட்டில் தரவுகளை மைக்ரோசாப்ட் சேமிக்கிறதா? என்ற கேள்விக்கு அது தங்கள் வாடிக்கையாளர்களின் ஆணையை பொறுத்தது என்றும் கூறியுள்ளார்.

இது மிக நல்ல விஷயம்
மேலும் டிஜிட்டல் வளர்ச்சி அதிகரித்து வரும் அதே சூழலில், ஆன்லைன் மோசடிகளின் அச்சுறுத்தலும் அதிகரிக்கிறது என்றும் மகேஷ்வரி கூறியுள்ளார்.
எது எப்படியோங்க ஐடி தறையினை பொறுத்தவரையில் பல நிறுவனங்கள் ஊழியர்களை பணியினை விட்டு நீக்கி நிலையில், மைக்ரோசாப்ட் அதிலிருந்து மாறுபட்டு, ஊழியர்களை பணியில் அமர்த்துவது என்பது ஊழியர்களுக்கு கிடைக்கும் ஜாக்பாட் தான். அதோடு இன்னும் நிறுவனத்தினை விரிவுபடுத்துவது என்பது இன்னும் பல ஆயிரம் ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பினை கொடுக்கும்.