15 வருடம் தான்.. வளைகுடா நாடுகள் முடிந்தது.. மாபெரும் எச்சரிக்கை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆடம்பரத்திலும், செல்வத்திலும் திளைத்திருக்கும் வளைகுடா நாடுகள் இன்னும் 15 வருடத்தில் ஏழை நாடாக மாறிவிடும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா..? நிச்சயம் யாராலும் நம்ப முடியாது. ஆனால் அதுதான் உண்மை எனச் சர்வதேச நாணய அமைப்பு தெரிவித்துள்ளது.

 

வளைகுடா நாடுகளின் 2 டிரில்லியன் சாம்ராஜ்ஜியம் இன்னும் 15 வருடத்தில் பணமும் வர்த்தகமும் இல்லாமல் தவிக்கப்போகிறது எனச் சர்வதேச நாணய அமைப்பு எனப்படும் ஐஎம்எப் தெரிவித்துள்ளது.

 இது மாருதி தர்பார்.. ஜனவரியில் சாதனை..! இது மாருதி தர்பார்.. ஜனவரியில் சாதனை..!

மாற்று எரிபொருள்

மாற்று எரிபொருள்

உலகளவில் கச்சா எண்ணெய்-யின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது வரலாறு காணாத அளவிற்கு உற்பத்தி அளவுகள் அதிகரித்துள்ளது. அதேபோல் மறுபுறம் கச்சா எண்ணெய் தேவையைக் குறைக்கும் வகையில் அனைத்து நாடுகளும் மாற்றும் எரிபொருள் பயன்படுத்தும் தளங்களையும் உருவாக்கி வருகிறது.

2 பிரச்சனை

2 பிரச்சனை

இதனால் வளைகுடா நாடுகளுக்கு இரண்டு மாறுபட்ட பிரச்சனைகள் உருவாகும், கச்சா எண்ணெய் உற்பத்தி செய்ய வளங்கள் இல்லாமல் போகலாம் அல்லது உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய்க்குத் தேவை இல்லாமல் போகலாம். இது இரண்டுமே வளைகுடா நாடுகளில் கஜானாவிற்குப் பிரச்சனை தான்.

15 வருடக் கணக்கு
 

15 வருடக் கணக்கு

இப்படியிருக்கும் சூழ்நிலையில் வளைகுடா நாடுகள் இன்னமும் எண்ணெய் வளத்தை மட்டுமே நம்பி தனது பொருளாதாரத்தை நகர்த்தினால் 2034ஆம் ஆண்டுக்குள் கையில் இருக்கும் மொத்த பணம் காலியாகிவிடும், அடுத்த 10 வருடத்திற்குள் எண்ணெய் வளம் அல்லாத மற்ற சொத்து மற்றும் முதலீடுகளும் மறைந்து விடும் என ஐஎம்எப் தெரிவித்துள்ளது.

மாற்று வழி

மாற்று வழி

வளைகுடா நாடுகள் புதிய வர்த்தகம், புதிய முதலீடுகள், புதிய திட்டம் என நீண்ட கால அடிப்படையில் கொள்கைகளை உருவாக்கி பொருளாதாரத்தை மாற்றுப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும். இதன் மூலம் எண்ணெய் தேவையில் பிரச்சனை வந்தாலும் மாற்று நிதி ஈட்டும் வழியைப் பெற முடியும் என ஐஎம்எப் தெரிவித்துள்ளது.

வாசகர்கள் ஆகிய நீங்கள் என்ன சொல்றீங்க 15 வருடங்களுக்குப் பின் வளைகுடா நாடுகள் வீழ்ந்துவிடுமா..?

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Middle East’s $2 trillion wealth could just vanish in 15 years

The Arab monarchies of the Persian Gulf face a budget reckoning and risk squandering their $2 trillion in financial wealth within 15 years as oil demand nears peak levels. Global oil demand may start falling sooner than expected, putting a strain on the finances of the six-member Gulf Cooperation Council, which accounts for a fifth of the world’s crude production.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X