ஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. இந்திய ஐடி நிறுவனங்களின் அடுத்த டார்கெட் மத்திய கிழக்கு நாடுகள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய ஐடி துறைக்கு அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளுக்கு இணையாக மத்திய கிழக்கு நாடுகள் முக்கிய வர்த்தகப் பகுதியாக மாறியுள்ளது.

இது மட்டும் அல்லாமல் அமெரிக்காவிற்கு விசா வாங்க வரிசை கட்டி நிற்பது போல் மத்திய கிழக்கு நாடுகளுக்கு விசா வாங்க ஐடி ஊழியர்கள் காத்திருக்கும் நிலை விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் ஐடி ஊழியர்கள் இனி வேலைவாய்ப்புக்காகச் சற்றுக் கவலைப்படத் தேவையில்லை, கொட்டிக்கிடக்கிறதாம்..

மத்திய கிழக்கு நாடுகள்

மத்திய கிழக்கு நாடுகள்

மத்திய கிழக்கு நாடுகள் தற்போது கச்சா எண்ணெய் தாண்டி பிற துறையில் வேகமாக வளர்ச்சி அடைய வேண்டும் என்பதில் உறுதியாகவும் தீவிரமாகவும் உள்ளது. இதே சாத்தியப்படுத்த அனைத்துத் துறை, பிரிவுகளிலும் டிஜிட்டல் சேவைகளை அதிகளவில் பயன்பாட்டுக்குக் கொண்ட வர முடிவு செய்துள்ளது.

சவுதி அரேபியா

சவுதி அரேபியா

இதன் மூலம் மத்திய கிழக்கு நாடுகள் உடன் நட்புறவில் இருக்கும் இந்தியாவின் ஐடி சேவை நிறுவனங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு உருவாகியுள்ளது. இந்திய ஐடி நிறுவனங்களுக்குச் சவுதி அரேபியாவில் மட்டும் சுமார் 500 பில்லியன் டாலர் மதிப்பிலான ஐடி சேவை வர்த்தக வாய்ப்புகளைக் கொண்டுள்ளது.

டிசிஎஸ், விப்ரோ, ஹெச்சிஎல், இன்போசிஸ்

டிசிஎஸ், விப்ரோ, ஹெச்சிஎல், இன்போசிஸ்

இத்திட்டங்களைக் கைப்பற்ற வேண்டும் என்பதற்காகப் பல இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் வளைகுடா நாடுகளின் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதில் டிசிஎஸ், விப்ரோ, ஹெச்சிஎல், இன்போசிஸ் ஆகிய இந்தியாவின் 4 முன்னணி நிறுவனங்களும் அடக்கம்

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்

இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் ஏற்கனவே இப்பகுதியில் சேவை அளிக்கத் துவங்கியுள்ளது மட்டும் அல்லாமல் பல அரசு மற்றும் தனியார் சேவை நிறுவனங்களின் திட்டங்களைக் கைப்பற்றி இயங்கி வருகிறது.

1000 பெண் ஊழியர்கள்

1000 பெண் ஊழியர்கள்

சவுதி அரேபியாவின் தலைநகரான ரியாத் நகரத்தில் 1000 பெண் ஊழியர்கள் கொண்ட டெக் சென்டரை (All Women center) இயக்கி வருகிறது டாடா கன்சல்டன்சி சர்வீசஸ். இதன் மூலம் அந்நாட்டின் பெண்கள் அதிகளவில் வேலைக்குச் செல்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

வளைகுடா நாடுகள்

வளைகுடா நாடுகள்

வளைகுடா நாடுகளில் தற்போது செயற்கை நுண்ணறிவு, ரோபோடிக்ஸ், கிளவுட், சைபர் செக்யூரிட்டி, டேட்டா அனலிட்டிக்ஸ் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப சேவைகளுக்கு டிமாண்ட் அதிகமாக உள்ளது.

சவுதி விஷன் 2030

சவுதி விஷன் 2030

சவுதி அரேபியா அரசு கச்சா எண்ணெய், எரிவாயு தாண்டி பிற துறையில் முதலீடு செய்ய வேண்டும் என்பதற்காகச் சவுதி விஷன் 2030 என்னும் திட்டத்தின் கீழ் பெரிய தொகையை முதலீடு செய்து வருகிறது.

NEOM திட்டம்

NEOM திட்டம்

இதில் ஐடி துறை மிகவும் முக்கியமான இடத்தையும், அதைவிட முக்கியமான இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் அதிகப்படியான திட்டங்களைப் பெறுகிறது கவனிக்க வேண்டிய ஒன்றாக உள்ளது. சமீபத்தில் சவுதி அரேபியா புதிய டெக்னாலஜி உதவியுடன் இயங்க கூடிய ஸ்மார்ட் சிட்டியை சுமார் 500 பில்லியன் டாலர் முதலீட்டில் உருவாக்கி வருகிறது. இந்தத் திட்டத்தின் பெயர் Project NEOM.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Middle East will be next America for Indian IT companies; big opportunity IT employees

Middle East will be next America for Indian IT companies; big opportunity IT employees Middle East will be next America for Indian IT companies; big opportunity IT employees ஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. இந்திய ஐடி நிறுவனங்களின் அடுத்த டார்கெட் மத்திய கிழக்கு நாடுகள்..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X