மொபைல் கேமிங் வளர்ச்சி கடந்த சில ஆண்டுகளாக விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் 2022ஆம் ஆண்டில் மொபைல் கேமிங் ஒட்டுமொத்த சார்ந்த 222 பில்லியன் அமெரிக்க டாலர்களை தாண்டும் என்று சர்வதேச மொபைல் கேமிங் டேட்டா கழகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஒட்டுமொத்த கேம் சந்தையில் 61% மொபைல் கேமிங் தான் இடம்பெற்றுள்ளது என்றும் 2022 ஆம் ஆண்டில் ஜனவரி முதல் மார்ச் வரை 136 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு மொபைல் சந்தையில் வர்த்தகம் ஆகி உள்ளது என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஆண்டு மொபைல் கேமிங் சந்தை மிகப்பெரிய வளர்ச்சி அடையும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
மும்பையில் புதிய வேலைவாய்ப்பு 41% வளர்ச்சி.. சம்பள உயர்வு எவ்வளவு தெரியுமா? அப்போ சென்னை..?

மொபைல் கேம்
2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் வாரத்துக்கு 1.1 பில்லியன் மொபைல் கேம்களை உலகம் முழுவதும் பொதுமக்கள் டவுன்லோட் செய்துள்ளனர். இது கொரோனா வைரஸ் ஊரடங்கு காலத்தில் இருந்த டவுன்லோடை விட 45 சதவீதம் அதிகம் என்று டேட்டா கூறுகின்றன.

டவுன்லோட்
இளம் தலைமுறைகள் மட்டுமின்றி நடுத்தர வயதினரும் தற்போது மொபைல் கேம் டவுன்லோட் செய்ய ஆரம்பித்து விட்டனர் என்றும் அதனால் கேமிங் தன்மைகளில் பல்வேறு மாற்றங்களை செய்ய கேமிங் துறை முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

1.6 பில்லியன் டாலர்
2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஐஓஎஸ் மற்றும் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து மட்டும் மொபைல் கேம்கள் வாரத்திற்கு 1.6 பில்லியன் டாலர்களை பொதுமக்கள் செலவு செய்துள்ளனர். இந்த தொகை ஊரடங்கு காலத்தில் செலவு செய்த தொகையை விட 30 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

மொபைல் கேம் வளர்ச்சி
குறிப்பாக மொபைல் கேமிங் வளர்ச்சி ஐரோப்பிய நாடுகளைவிட ஆசிய நாடுகளில் மிகப்பெரிய அளவில் ஏற்றம் கண்டுள்ளது என்றும் இது குறித்து எடுக்கப்பட்ட டேட்டாக்களில் இருந்து தெரிய வருகிறது.

ஸ்டுடியோக்கள்
புதிது புதிதாக மொபைல் கேமிங் உருவாக்குவதற்காகவே ஸ்டூடியோக்கள் மற்றும் குழுக்கள் அமைக்கப்பட்டு வருவதாக வருவதாகவும் குறிப்பாக மொபைல் கேம் வாடிக்கையாளர்களை முழு அளவில் திருப்திப்படுத்துவதற்காக ஒவ்வொரு மொபைல் நிறுவனம் தீவிர ஆலோசனை செய்து வருகின்றது என்றும் கூறப்படுகிறது.

மொபைல் கேமிங்கில் பெண்கள்
அமெரிக்காவில் மொபைல் கேமிங்கில் நேரத்தை செலவு செய்வதில் 50 சதவீதம் பெண்கள் என்ற தகவல் மிகப் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மொபைல் கேமிங் துறை மிகப்பெரிய அளவில் அசுர வளர்ச்சி அடைந்து விட்டது என்றும் எதிர்காலத்தில் அதன் வளர்ச்சி இன்னும் மிகப் பெரியதாக இருக்கும் என்றும் மொபைல் கேமிங் டேட்டா கழகம் தெரிவித்துள்ளது.