மோடி அரசு அதிரடி.. 138 பெட்டிங் ஆப், சீன தொடர்புடைய 94 கடன் செயலிகள் தடை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) இன்று 138 பெட்டிங் ஆப் மற்றும் சீன நிறுவனம் அல்லது சீன நபர்கள் உடன் தொடர்புடைய 94 கடன் வழங்கும் செயலிகளைத் தடை செய்யும் பணிகளைத் தொடங்கியுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் பாதுகாப்புக் காரணங்களுக்காக நூற்றுக்கணக்கான சீன செயலிகளை இந்தியா ஏற்கனவே தடுத்துள்ள வேளையில் தற்போது 232 செயலிகளைத் தடை செய்யும் மிகப்பெரிய நடவடிக்கையை எடுத்துள்ளது.

கொரோனா தொற்று முன்பே இந்திய அரசு சீன செயலிகள் மீதான நடவடிக்கைகளை எடுத்து அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தது. முதலில் பொழுதுபோக்கு, கேம் செயலிகளைத் தடை செய்த நிலையில், இன்று பெட்டிங் மற்றும் கடன் சேவைகளை அளிக்கும் செயலிகளைத் தடை செய்ய உத்தரவிட்டு உள்ளது.

ஆன்லைன் லோன் ஆப் மூலம் கடன் வாங்குபவரா நீங்க.. எச்சரிக்கையா இருங்க.. இப்படி கூட நடக்கலாம்..! ஆன்லைன் லோன் ஆப் மூலம் கடன் வாங்குபவரா நீங்க.. எச்சரிக்கையா இருங்க.. இப்படி கூட நடக்கலாம்..!

உள்துறை அமைச்சகம்

உள்துறை அமைச்சகம்

உள்துறை அமைச்சகத்தின் உத்தரவுகளைத் தொடர்ந்து மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) "urgent" மற்றும் "emergency" அடிப்படையில் சீனா நிறுவனம் அல்லது சீன நபர்கள் உடன் தொடர்பு கொண்ட செயலிகளைத் தடை செய்யும் செயல்முறையைத் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு

இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு

இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்குப் பாதகம் இருப்பதால், இந்தச் செயலிகளைத் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 69 கீழ் தடை செய்யும் நடவடிக்கையைத் தொடங்கப்பட்டு உள்ளது.

பெட்டிங் மற்றும் சூதாட்டம்

பெட்டிங் மற்றும் சூதாட்டம்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பெட்டிங் மற்றும் சூதாட்டம் சட்டவிரோதமானது என்பதால், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019, கேபிள் டிவி நெட்வொர்க் ஒழுங்குமுறை சட்டம் 1995 மற்றும் தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021 ஆகியவற்றின் விதிகளின்படி, இந்தப் பெட்டிங் தளங்களின் விளம்பரங்களும் சட்டவிரோதமானது எனத் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் (MIB) கூறுகிறது.

கடன் வலை

கடன் வலை

இந்தப் பெட்டிங் ஆப் மற்றும் கடன் செயலிகள் மக்களை மோசமான கடன் வலையில் சிக்க வைத்து அவர்களிடம் பணத்தைக் கொள்ளையடிக்கும் வழக்கத்தைக் கொண்டு உள்ளது. இந்திய குடிமக்களின் தரவுகளுக்குப் பாதுகாப்பு ஆபத்தை ஏற்படுத்துவதைத் தவிர, உளவு மற்றும் தவறான கருத்து பிரச்சாரத்திற்கான கருவிகளாகவும் பயன்படுத்தப்படலாம் எனக் கூறப்படுகிறது.

250 சீன செயலிகள் தடை

250 சீன செயலிகள் தடை

கடந்த சில ஆண்டுகளில் மத்திய அரசு இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, இந்தியாவின் பாதுகாப்பு, மாநிலத்தின் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு பாதகம் எனக் கூறி சுமார் 250 சீன செயலிகளைத் தடை செய்தது.

டிக்டாக்

டிக்டாக்

இந்தியாவில் அதிகப்படியான மக்களால் பயன்படுத்தப்பட்ட மற்றும் மில்லியன் கணக்கான டவுன்லோடுகளைக் கொண்ட டிக்டாக், எக்ஸ்ண்டர், ஷீன், கேம்ஸ்கேனர் போன்ற செயலிகளை அரசு இதுவரை தடை செய்துள்ளது. இன்று இன்று 138 பெட்டிங் ஆப் மற்றும் சீனா நிறுவனம் அல்லது சீன நபர்கள் உடன் தொடர்புடைய 94 கடன் வழங்கும் செயலிகளைத் தடை செய்யும் பணிகளைத் தொடங்கியுள்ளது.

மத்திய அரசு

மத்திய அரசு

மத்திய அரசு ஜூன் 2020 இல் 59 மொபைல் செயலிகளைத் தடை செய்தது. இதே வருடம் செப்டம்பர் மாதம் மேலும் 118 பயன்பாடுகளை ஐடி சட்டத்தின் பிரிவு 69A இன் கீழ் தடை செய்தது.

நவம்பர் 2020

நவம்பர் 2020

நவம்பர் 2020 இல், PUBG Mobile, TikTok, Weibo, WeChat, AliExpress உள்ளிட்ட 43 மொபைல் செயலிகளைப் பயன்படுத்த IT சட்டத்தின் 69A பிரிவின் கீழ் மத்திய அரசு தடை உத்தரவுகளைப் பிறப்பித்தது.

2021 பிப்ரவரி

2021 பிப்ரவரி

கடந்த ஆண்டுப் பிப்ரவரி மாதத்தில் கூட, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) இந்தியாவில் 54 சீன செயலிகளின் செயல்பாடுகளைத் தடை செய்யும் அறிவிப்பை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. இந்தப் பட்டியலில் சீன நிறுவனம் அல்லது சீன நபர்கள் உடன் தொடர்புடைய 94 கடன் வழங்கும் செயலிகளும் சேர்ந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Modi Govt bans 138 betting apps, 94 loan apps with Chinese links

Modi Govt bans 138 betting apps, 94 loan apps with Chinese links
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X