வீட்டு வாடகை உயர்வு.. மோடி அரசு-க்கு வந்த புதிய பிரச்சனை.. மக்கள் சுமையைத் தீர்க்குமா..?!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் பெரு நகரங்களில் அதிகரித்து வரும் புதிய வீடுகளின் விலைகள் மற்றும் வீட்டு வாடகைகள் மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் பணவீக்கத்திற்கு எதிரான போராட்டத்தில் புதிய சவாலாக மாறியுள்ளது.

 

நுகர்வோர் விலை பணவீக்கம் தனது உச்ச அளவில் இருந்து சரிந்திருந்தாலும், சந்தை ஆய்வாளர்கள் புதிய வீடுகளின் விலை மற்றும் வீட்டு வாடகையில் ஏற்பட்ட உயர்வு பணவீக்கத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளனர்.

வீட்டு வாடகைகள் மற்றும் அதன் துணை செலவுகள் இந்தியாவின் நுகர்வோர் விலை பணவீக்கக் குறியீட்டில் 10.07% மதிப்பீட்டைக் கொண்டுள்ளது. இதனால் இதில் ஏற்படும் மாற்றங்கள் விலைவாசியில் பெரும் தாக்கத்தைக் கட்டாயம் ஏற்படுத்தும்.

இதுதான் இந்தியா.. 1% பணக்காரர்களிடம் 40% செல்வம்.. ஆக்ஸ்பாம் அதிர்ச்சி ரிப்போர்ட்..! இதுதான் இந்தியா.. 1% பணக்காரர்களிடம் 40% செல்வம்.. ஆக்ஸ்பாம் அதிர்ச்சி ரிப்போர்ட்..!

மெட்ரோ நகரங்கள்

மெட்ரோ நகரங்கள்

இந்தியாவின் ஏழு பெரிய மெட்ரோ நகரங்களில், தொற்றுநோய்க்கு முந்தைய நிலைகளிலிருந்து 2022 ஆம் ஆண்டில் வாடகைகள் சராசரியாக 20%-25% உயர்ந்துள்ளன. மேலும் சில பிரபலமான மற்றும் பெரிய ஹவுசிங் அமைப்பில் 30% க்கும் அதிகமான உயர்வைப் பதிவு செய்துள்ளன என்று ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான அனரோக் தெரிவித்துள்ளது.

ஹைப்ரிட் கலாச்சாரம்

ஹைப்ரிட் கலாச்சாரம்

இந்தியா முழுவதும் அனைத்துத் துறை நிறுவனத்திலும் ஹைப்ரிட் கலாச்சாரம் நடைமுறைக்கு வந்த நிலையில் பெரு நகரங்களில் வசதியான மற்றும் பெரிய வீடுகளுக்கான டிமாண்ட் மிகவும் அதிகமாக உள்ளது. இதனாலேயே வீட்டு வாடகைகள் அதிகரித்துள்ளது.

வீட்டு விலைக் குறியீடு
 

வீட்டு விலைக் குறியீடு

வீடு விற்பனை அளவுகள் மற்றும் எண்ணிக்கையைத் திரட்டுவதற்கு ரிசர்வ் வங்கியால் தொகுக்கப்பட்ட வீட்டு விலைக் குறியீடு (Housing Price Index), கடந்த ஆண்டுச் செப்டம்பர் உடன் முடிவடைந்த காலாண்டில் 10 வருடத்தில் அதிகபட்ச உயர்வை பதிவு செய்துள்ளது.

வீடுகளின் விலை

வீடுகளின் விலை

இந்தியாவின் டாப் ஏழு நகரங்களான NCR, கொல்கத்தா, மும்பை பெருநகரப் பகுதி, புனே, ஹைதராபாத், சென்னை மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களில் சராசரி வீடுகளின் விலை 4%-7% அதிகரித்துள்ளது என்று அனரோக் தெரிவித்துள்ளது.

 ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி

இந்திய ரிசர்வ் வங்கி ஏற்கனவே ஒரு வருட உயர்வில் இருக்கும் உணவு விலை பணவீக்கத்தைப் போராடி வரும் நிலையில் தற்போது 3 வருட உயர்வில் இருக்கும் வீட்டு வாடகைகள் மற்றும் அதன் துணை செலவுகள் பெரும் தலைவலியாக ரிசர்வ் வங்கிக்கு மாறியுள்ளது.

இரண்டாம் வரிசை விளைவுகள்

இரண்டாம் வரிசை விளைவுகள்

இந்திய ரிசர்வ் வங்கியின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், வீட்டுவசதி விலை உயர்வு என்பது இரண்டாம் வரிசை விளைவுகளாக இருக்கும் வேலையில் இதன் பாதிப்புகள் மற்றும் சந்தை போக்கை உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.

நகர்ப்புற வீட்டுப் பணவீக்கம்

நகர்ப்புற வீட்டுப் பணவீக்கம்

நகர்ப்புற வீட்டுப் பணவீக்கம் (Urban housing inflation) 2022 டிசம்பரில் 4.47 சதவீதம் உயர்ந்துள்ளது, ஒரு வருடத்திற்கு முன்பு இதே காலகட்டத்தில் 3.61 சதவீதமாக இருந்தது. 2020 டிசம்பரில் இது 3.21% ஆக உயர்ந்துள்ளது என்று புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தரவுகள் கூறுகிறது.

3 வருட உச்சம்

3 வருட உச்சம்

அக்டோபர் 2022ல் நகர்ப்புற வீட்டுப் பணவீக்கம் 4.58% ஆக இருந்த நிலையில் நவம்பர் மற்றும் டிசம்பரில் சிறிதளவு குறைந்தாலும், 2019 க்குப் பிறகு அதன் அதிகபட்ச அளவுகளை நெருங்கியுள்ளது முக்கியமானதாக விளங்குகிறது.

சில்லறை பணவீக்கம்

சில்லறை பணவீக்கம்

இந்தியாவின் சில்லறை பணவீக்கம் டிசம்பர் மாதம் 5.72% ஆகக் குறைந்துள்ளது, கடந்த ஆண்டின் முதல் 10 மாதங்களுக்குத் தொடர்ந்து ரிசர்வ் வங்கியின் 2-6 சதவீத இலக்கிற்கு மேல் இருந்த நிலையில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் 6 சதவீதத்திற்குக் கீழ் இருந்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Modi Govt facing new inflation problem; Rising home rent and home prices cause dent in CPI

Modi Govt facing new inflation problem; Rising home rent and home prices cause dent in CPI
Story first published: Tuesday, January 17, 2023, 18:23 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X