5 லட்சம் வரை வருமான வரி ரத்து.. பட்ஜெட் 2023ல் இதுதான் மாஸ்டர் ஸ்ட்ரோக்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான 2வது ஆட்சிக் காலத்தின் முழுப் பட்ஜெட் அறிக்கை பிப்ரவரி 1, 2023ல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

 

2024ல் பொதுத் தேர்தல் நடக்கும் நிலையில் மத்திய அரசால் முழுப் பட்ஜெட் அறிக்கையை வெளியிட முடியாது. இதனால் இந்தப் பட்ஜெட் மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது.

பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட் அறிக்கையில் சாமானிய மக்களுக்கு நேரடியாகப் பலன் அளிக்கும் வகையில் பல திட்டம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹெச்1பி விசா ஊழியர்களுக்குப் புதிய பிரச்சனை.. ஐடி ஊழியர்களே உஷார்..! ஹெச்1பி விசா ஊழியர்களுக்குப் புதிய பிரச்சனை.. ஐடி ஊழியர்களே உஷார்..!

முக்கிய அறிவிப்புகள்

முக்கிய அறிவிப்புகள்

பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட் 2023 அறிக்கையில் முக்கியமாகப் பெட்ரோல், டீசல் விலை, தனிநபர் வருமான வரி, பல்வேறு நல திட்டங்களின் கால விரிவாக்கம் ஆகியவை அடங்கும் எனக் கருத்து நிலவுகிறது. இந்த நிலையில் தற்போது வருமான வரிக் குறைப்பு குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது.

தனிநபர் வருமான வரி

தனிநபர் வருமான வரி

மத்திய நிதியமைச்சகம் பட்ஜெட் 2023 குறித்த ஆலோசனைக் கூட்டத்தைச் சில நாட்களுக்கு முன்பே துவங்கிய வருமான வரி விதிப்பு குறித்த பேச்சுவார்த்தை துவங்கியுள்ளது. இந்தப் பட்ஜெட் அறிக்கையில் தனிநபர் வருமான வரி விதிப்பை தற்போது இருக்கும் 2.5 லட்சம் ரூபாய் அளவை 5 லட்சமாகப் புதிய வரி விதிப்புப் பிரிவில் உயர்த்தும் திட்டம் குறித்த விவாதம் துவங்கியுள்ளது.

புதிய தனிநபர் வருமான விதிப்பு முறை
 

புதிய தனிநபர் வருமான விதிப்பு முறை

மோடி அரசு புதிய தனிநபர் வருமான விதிப்பு முறையைக் கொண்டு வந்த 2 வருடம் ஆன நிலையில், இதை மக்கள் அதிகமாகப் பயன்படுத்துவது இல்லை. இதேபோல் பழைய மற்றும் புதிய வரி விதிப்பு முறையிலும் 2.5 லட்சம் ரூபாய் வரையில் வருமான வரித் தளர்வு அளிக்கப்படுகிறது.

பணவீக்கம்

பணவீக்கம்

இந்தியாவில் cost of living பெரிய அளவு அதிகரித்துள்ள நிலையில், பணவீக்கத்தைச் சமாளிக்கப் பல வருடமாக இருக்கும் 2.5 லட்சம் ரூபாய் வருமான வரித் தளர்வு அளவை அதிகரிக்க வேண்டும் எனப் பல நிதியியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

மக்கள்

மக்கள்

இந்த அளவீட்டை அதிகரிப்பது மூலம் மக்கள் கையில் அதிகப்படியான பணம் கிடைக்கும், இதன் மூலம் மக்களின் முதலீட்டு அளவு அதிகரிக்கும். அதேபோல் செலவு செய்ய அதிகப்படியான பணம் கிடைக்கும் காரணத்தால் இந்தியாவில் சரிந்துள்ள டிமாண்ட் அளவை எளிதாக அதிகரிக்க முடியும்.

 பழைய வரி விதிப்பு முறை

பழைய வரி விதிப்பு முறை

இதேபோல் தற்போது பெரும்பாலான மக்கள் பழைய வரி விதிப்பு முறையைப் பின்பற்றி வருகின்றனர், இதற்கு முக்கியக் காரணம் இரு வரி விதிப்பு முறையிலும் 2.5 லட்சம் ரூபாய் வரி விலக்கு, புதிய வரி விதிப்பில் சில வரி விதிப்பு அளவுகள் மாறுபட்டாலும், பழைய வரி விதிப்பில் 80சி மற்றும் 80டி வரி சலுகையைப் பயன்படுத்தினால் கட்டாயம் பழைய வரி விதிப்பு முறையில் தான் லாபம்.

முக்கிய அறிவிப்புகள்

முக்கிய அறிவிப்புகள்

இந்த நிலையில் புதிய வரி விதிப்பு முறையில் எவ்விதமான deductions இல்லாத நிலையிலும் 2.5 - 5 லட்சம் வரையில் டாக்ஸ் ரிபேட் கிடைக்கும் நிலையில் இதைக் கவர்ச்சிகரமான திட்டமாக மாற்ற முக்கிய அறிவிப்புகள் இந்தப் பட்ஜெட் அறிக்கையில் வெளியாக வாய்ப்பு உள்ளது.

5 லட்சம் ரூபாய்

5 லட்சம் ரூபாய்

இந்த வேளையில் வரி விதிப்பு குறித்த விவாதம் அடுத்த வாரம் தான் நடக்க உள்ளது. இதேபோல் 5 லட்சம் ரூபாய் வரையிலான தரவுகள் மூலம் அரசுக்கு எவ்வளவு வருமானம் பாதிக்கும் என்பதைக் கணக்கிட்ட பின்பே அரசு முடிவு எடுக்க முடியும்.

இனி 1, 2 சிகரெட் வாங்க முடியாது, வாங்கினா பெட்டி தான்.. மத்திய அரசு விரைவில் உத்தரவு..! இனி 1, 2 சிகரெட் வாங்க முடியாது, வாங்கினா பெட்டி தான்.. மத்திய அரசு விரைவில் உத்தரவு..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Modi Govt might increase tax free limit to Rs 5 lakh in Budget 2023

Modi Govt might increase tax free limit to Rs 5 lakh in Budget 2023
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X