ரூ.8 லட்சம் கோடி.. மோடி அரசு இதை செய்துவிட்டால் வேற லெவல் தான்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா தொற்று, லாக்டவுன் ஆகியவற்றின் மூலம் இந்தியா அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்ட வரும் நிலையில், இக்காலகட்டத்தில் நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டு உள்ள பாதிப்பு, மக்களின் வருமானத்தில் ஏற்பட்டு உள்ள பாதிப்பு, வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள மக்களின் நிலை ஆகியவற்றைக் கன்ஸ்யூமர் பிரம்மிட் ஹஸ்ஹோல்டு சர்வே, அசிம் பிரேம்ஜி பவுண்டேஷன் மற்றும் பல அமைப்புகள் இணைந்து ஆய்வு செய்துள்ளது.

 

இந்த ஆய்வின் முடிவில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கை அடிப்படையில் கொகோனா தொற்று மூலம் ஏற்பட்டு உள்ள பொருளாதாரப் பாதிப்பிலிருந்து மீண்டு வர குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்கு 8 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரண திட்டம் அறிவிக்க வேண்டும் என அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

 கொரோனா தொற்று

கொரோனா தொற்று

இந்தியாவில் கொரோனா தொற்று மூலம் ஏற்பட்ட வேலைவாய்ப்பு இழப்பு, வருமான இழப்பு ஆகியவற்றின் வாயிலாக தேசிய அளவிலான வறுமைக் கோட்டிற்குக் கீழ் சுமார் 23 கோடி மக்கள் தள்ளப்பட்டு உள்ளதாக CMIE-CPHS தரவுகள் கூறுகிறது. இதேபோல் 2020ஆம் ஆண்டின் முடிவிலும் நாட்டில் சுமார் 1.5 கோடி மக்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்கள் இந்தத் தரவுகள் கூறுகிறது.

 மாத சம்பள வேலை

மாத சம்பள வேலை

இதேபோல் 2019 பிற்பகுதியில் இருந்து 2020 பிற்பகுதி காலகட்டத்தில் மாத சம்பள வேலைகளில் (Formal Salaried work) இருந்த 50 சதவீதம் பேர் நிரந்தமற்ற வருமானம் கிடைக்கும் (inFormal work) வேலைக்கு மாறியுள்ளனர். இதில் 30 சதவீதம் பேர் சுய தொழில், 10 சதவீதம் பேர் சாதாரண வேலைகளுக்கும், 9 சதவீதம் பேர் கூலி தொழில்களுக்கும் சென்றுள்ளனர். இதன் மூலம் இவர்களது வருமானம் பெரிய அளவில் குறைந்துள்ளது.

 வருமானத்தை இழந்த இந்திய குடும்பங்கள்
 

வருமானத்தை இழந்த இந்திய குடும்பங்கள்

மேலும் ஏப்ரல் முதல் மே மாதம் வரையிலான காலகட்டத்தில் சுமார் 20 சதவீத இந்தியக் குடும்பங்கள் தங்களது மாத வருமானத்தை மொத்தமாக இழந்துள்ளனர். ஆனால் பெரும் பணக்காரர்கள் இக்காலகட்டத்தில் வெறும் 25 சதவீத வருமானத்தை மட்டுமே இழந்துள்ளனர் என இந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

 8 லட்சம் கோடி ரூபாய்

8 லட்சம் கோடி ரூபாய்

கொரோனா தாக்கத்தால் ஏற்பட்டு உள்ள இந்தப் பாதிப்பை களைய வேண்டும் என்றால் மத்திய அரசு இப்பிரிவு மக்களின் வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்பை அதிகரிக்கச் சுமார் 8 லட்சம் கோடி ரூபாய் அதாவது இந்தப் பொருளாதாரத்தின் 4.5 சதவீதத்தைச் செலவு செய்தாக வேண்டும்.

 கட்டாயத்தில் மோடி அரசு

கட்டாயத்தில் மோடி அரசு

இது பிற நாடுகளை ஒப்பிடுகையில் சற்று அதிகமாக இருந்தாலும் இந்திய அரசு இதைச் செய்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பேராசியர் அமித் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Modi govt Need to roll out Rs 8 lakh crore package to support lower income people

Modi govt Need to roll out Rs 8 lakh crore package to support lower-income people
Story first published: Thursday, May 6, 2021, 22:28 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X