ரூ.65000 கோடி எங்கே..? அரசு நிறுவனங்களை விற்க தயாராகும் மத்திய அரசு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டாலர் மதிப்பு உயர்வால் இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை அளவு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மத்திய அரசு புதிய நிதியைத் திரட்ட எடுக்கும் பல முக்கியமான முயற்சிகளில் ஒன்றாகப் பார்க்கப்படும் அரசு நிறுவனங்களைத் தனியார்மயமாக்கும் திட்டத்தைத் தீவிரமாகச் செயல்படுத்த முடிவு செய்துள்ளது.

 

மத்திய அரசு தற்போது IDBI வங்கியின் தனியார்மயமாக்கல் திட்டத்தைச் செயல்படுத்தி வரும் நிலையில் அடுத்தடுத்துத் தனியார்மயமாக்கப்படும் நிறுவனங்களைக் கிட்டதட்ட இறுதியாகத் தேர்வு செய்துள்ளது.

46.5 பில்லியன் டாலர்.. போராடும் எலான் மஸ்க்.. எப்படித் திரட்ட போகிறார்? ரொம்ப ஈசி..! 46.5 பில்லியன் டாலர்.. போராடும் எலான் மஸ்க்.. எப்படித் திரட்ட போகிறார்? ரொம்ப ஈசி..!

65000 கோடி ரூபாய்

65000 கோடி ரூபாய்

மத்திய அரசு 2023 ஆம் நிதியாண்டில் அரசு நிறுவனங்களைத் தனியாருக்கு அளிப்பதன் மூலம் 65000 கோடி ரூபாய் அளவிலான நிதியை திரட்ட இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இதைக் கட்டாயம் எட்டிவிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது மத்திய அரசு, இதனால் அடுத்தடுத்து நிறுவனங்களைத் தனியார்மயமாக்கல் செய்யத் தயாராகி வருகிறது.

IDBI வங்கி

IDBI வங்கி

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு IDBI வங்கியின் பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்த நிலையில், விருப்ப விண்ணப்பங்களைப் பெற துவங்கியுள்ள நிலையில், அதைத் தொடர்ந்து கண்டெய்னர் கார்ப் ஆப் இந்தியா, ஏர் இந்தியாவின் பிற கிளை நிறுவனங்களை அடுத்தடுத்து தனியார்மயமாக்க முடிவு செய்துள்ளது.

ஏர் இந்தியா
 

ஏர் இந்தியா

ஏர் இந்தியாவை டாடா குழுமத்திற்கு விற்பனை செய்வதற்கு முன்பாக இதன் கிளை நிறுவனங்களாக இருந்த Air India Engineering Services Ltd (AIESL), Air India Airport Service Ltd (AIASL), Alliance Air கூட்டணி ஆகியவையும் தற்போது மத்திய அரசு கட்டுப்பாட்டில் தான் உள்ளது. இதைத் தனியார்மயமாக்கும் முயற்சியில் தற்போது மத்திய அரசு இறங்கியுள்ளது.

ஜல் சக்தி அமைச்சகம்

ஜல் சக்தி அமைச்சகம்

இதேவேளையில் மத்திய அரசு புதிய முதலீடுகளைத் திரட்டும் நோக்கில் ஜல் சக்தி அமைச்சகத்தின் இன்ஜினியரிங் கண்சல்டன்சி நிறுவனமான Indian Renewable Energy Development Agency மற்றும் கட்டுமான நிறுவனமான Wapcos Ltd, மற்றும் Export Credit Guarantee Corp. of India Ltd ஆகிய 3 நிறுவனத்தையும் ஐபிஓ வெளியிடத் திட்டமிட்டு வருகிறது. இதில் Wapcos நிறுவனத்திற்கான DRHP அறிக்கையைச் செபியிடம் ஏற்கனவே மத்திய அரசு சார்பில் கொடுக்கப்பட்டு உள்ளது.

IDBI தனியார்மயமாக்கல்

IDBI தனியார்மயமாக்கல்

இந்த ஐபிஓ திட்டம் எதற்காக என்றால் IDBI தனியார்மயமாக்கல் திட்டம் நடப்பு நிதியாண்டின் முடிவுக்குள் நடக்காது என நம்பப்படும் நிலையிலும், Central Electronics Ltd (CEL) வாங்கத் தேர்வு செய்யப்பட்ட நிறுவனத்தின் கோளாறு காரணமாக இது தோல்வி அடைந்தது.

இலக்கு

இலக்கு

மத்திய அரசு 2023 ஆம் நிதியாண்டில் disinvestment மூலம் சுமார் 65000 கோடி ரூபாய் அளவிலான நிதியைத் திரட்ட இலக்கு நிர்ணயம் செய்த நிலையில் இதுவரை 24,544 கோடி ரூபாய் திரட்டியுள்ளது.

கிடைசி வாய்ப்பு

கிடைசி வாய்ப்பு

கடைசி நேரத்தில் டிரம்ப் கார்ட் ஆக இருக்கப்போகிறது Hindustan Zinc, இந்நிறுவனத்தில் மத்திய அரசு வைத்திருக்கும் பங்குகளைத் தற்போதைய சந்தை விலைக்கு விற்பனை செய்தால் 36000 கோடி ரூபாய் திரட்ட முடியும். ஆனால் மத்திய அரசு இதற்கான முடிவை முன்கூட்டியே எடுக்க வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Modi govt's plan to privatisation of Container Corp. of India, Air India subsidiaries

Modi govt plans to privatization of Container Corp. of India, Air India subsidiaries
Story first published: Friday, October 14, 2022, 11:59 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X