8 வருடம்.. 4 லட்சம் கோடி.. மோடி அரசு செய்ததை பார்த்தீங்களா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2014 ஆம் ஆண்டு மோடி அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து அரசின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தவும், அதற்காக போதுமான நிதியை உருவாகவும் அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் சொத்துக்கள், நிறுவனங்கள், பங்கு இருப்புகளை விற்பனை செய்தது மூலம் நிதி திரட்டி வருகிறது.

இதுமட்டும் அல்லாமல் அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் சொத்துக்களை பணமாக்கவும், அதை அதிகளவில் பயன்படுத்து தனியாருக்கு குத்தகைக்கு விடவும் மோடி தலைமையிலான அரசு NMP திட்டத்தை வகுத்துள்ளது.

இந்த நிலையில் மோடி தலைமையிலான அரசு 2 முறை ஆட்சியில் இருக்கும் நிலையில், இதுவரையில் அரசு சொத்துக்களின் விற்பனை மூலம் எவ்வளவு நிதி திரட்டியுள்ளது தெரியுமா..?

மோடி அரசு எடுக்கப்போகும் முக்கிய 'வரி' முடிவு.. பயமுறுத்தும் 2023.. ரெசிஷன் வருகிறதா..? மோடி அரசு எடுக்கப்போகும் முக்கிய 'வரி' முடிவு.. பயமுறுத்தும் 2023.. ரெசிஷன் வருகிறதா..?

 4.04 லட்சம் கோடி ரூபாய்

4.04 லட்சம் கோடி ரூபாய்

இந்த மாபெரும் நிதி திரட்டல் திட்டத்தில் சுமார் 59 முறை ஆஃபர் ஃபார் சேல் மூலம் மொத்தம் 1.07 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை மத்திய அரசு நிதி திரட்டியுள்ளது. இதைத் தொடர்ந்து எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்ட் (ETF) மூலம் 10 தவணைகளில் பங்குகள் விற்பனை செய்தது மூலம் னது, மொத்தம் 98,949 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளது.

10 நிறுவனங்கள் விற்பனை

10 நிறுவனங்கள் விற்பனை

ஏர் இந்தியா உட்பட 10 நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்தது மூலம் கடந்த 8 ஆண்டுகளில் மத்திய அரசின் கஜானாவுக்கு சுமார் 69,412 கோடி ரூபாய் அளவிலான நிதி ஆதாரம் கிடைத்துள்ளது. இதை தொடர்ந்து 45 கேஸ்களில் அரசின் பைபேக் திட்டம் மூலம் சுமார் 45,104 கோடி ரூபாயை மத்திய அரசு ஈட்டியுள்ளது.

ஐபிஓ

ஐபிஓ

2014-15 ஆம் நிதியாண்டில் இருந்து சுமார் 17 மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் நிறுவனங்களை பங்குச்சந்தையில் ஐபிஓ மூலம் பட்டியலிடப்பட்டு உள்ளது. இதன் மூலம் மத்திய அரசுக்கு சுமார் 50,386 கோடி ரூபாய் அளவிலான நிதி ஆதாரம் கிடைத்துள்ளது.

லைப் இன்சூரன்ஸ் கார்ப்ரேஷன் ஆப் இந்தியா

லைப் இன்சூரன்ஸ் கார்ப்ரேஷன் ஆப் இந்தியா

ஐபிஓ மூலம் மத்திய அரசு ஈட்டிய முதலீட்டில் பெரும் பகுதி நாட்டின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு சேவை அளிக்கும் நிறுவனமான லைப் இன்சூரன்ஸ் கார்ப்ரேஷன் ஆப் இந்தியா-வின் ஆரம்ப பொதுப் பங்கீடு (ஐபிஓ) மூலம் மட்டும் 20,516 கோடி ரூபாய் திரட்டியுள்ளது.

7.31 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பு

7.31 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பு

மேலும் இந்த புதிய 17 நிறுவனங்களின் ஐபிஓ மூலம் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் நிறுவனங்களின் சந்தை மூலதன மதிப்பு 7.31 லட்சம் கோடி ரூபாய் அளவீட்டை எட்டியுள்ளது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முக்கிய பங்கு விற்பனை

முக்கிய பங்கு விற்பனை

இது தவிர, மத்திய அரசு பரதீப் பாஸ்பேட் லிமிடெட் நிறுவனத்தின் 472 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்தது. இதேபோல் ஐபிசிஎல் பங்குகளை 219 கோடி ரூபாய்க்கும், டாடா கம்யூனிகேஷன் நிறுவன பங்குகளை 8,847 கோடி ரூயாக்கும் விற்றுள்ளது.

சரியா..? தவறா..?

சரியா..? தவறா..?

இப்படி மத்திய அரசு பல வகையில் அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் சொத்துக்களை விற்பனை செய்து 4.04 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் நிதி திரட்டியுள்ளது. இந்த நடைமுறையை மக்களாகிய நீங்கள் எப்படி பார்கிறீர்கள்..? இது சரியா..? தவறா..? மற்றக்காமல் கமெண்ட் பண்ணுங்க..

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Modi Govt sold 4 lakh crore worth of public sector companies asserts in 8 years

Modi Govt sold 4 lakh crore worth of public sector companies asserts in 8 years
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X