மத்திய அரசு உத்தரவு.. எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை சரிவு.. 6 நிறுவனங்களுக்கு செக்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்கள் மிகப்பெரிய வர்த்தகத்தை பெற்று வரும் நிலையில் மத்திய அரசின் உத்தரவால் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை டிசம்பர் மாதம் சரிந்துள்ளது.

இதனால் 2023 ஆம் ஆண்டில் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை மந்தமான சூழ்நிலையில் துவங்கியுள்ளது. மத்திய மாநில அரசுகள் மக்களை எலக்ட்ரிக் வாகனங்களை அதிகளவில் பயன்படுத்த ஊக்குவிக்க பல வரி சலுகைகளையும், உற்பத்தியை அதிகரித்த நிறுவனங்களுக்கு அதிகப்படியான மானியங்களையும் அளித்து வருகிறது.

இந்த நிலையில் மத்திய அரசு எடுத்த ஒரு முடிவால் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி குறைந்து விற்பனையும் குறைந்துள்ளது.

துபாய்: ஜனவரி 1 முதல் புதிய விதிமுறை.. மதுபானம் மீதான 30 சதவீத வரி ரத்து..!

எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

Hero Electric மற்றும் Okinawa Autotech என 6 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி நிறுவனங்களுக்கான 1,100 கோடி ரூபாய் அளவிலான மானிய தொகையை வழங்குவதை மத்திய அரசு நிறுத்தியதன் மூலம் இந்நிறுவன தொழிற்சாலையில் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

 விற்பனை சரிவு

விற்பனை சரிவு


இதன் சந்தை வரும் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை வேகமாக சரிந்து இதன் விற்பனை சரிந்துள்ளது. நவம்பர் மாதத்தை ஒப்பிடுகையில் டிசம்பர் மாதத்தில் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை நான்கில் ஒரு பங்கு குறைந்துள்ளது.

 FAME-II மானியம்

FAME-II மானியம்

மத்திய அரசு FAME-II இன் கீழ் மானியம் செலுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியாளர்களும் உள்நாட்டு தயாரிப்புகளை அதிகம் பயன்படுத்த வேண்டும் இல்லையெனில் மானியம் வழங்கப்படமாட்டாது.

 அளவுகோல்

அளவுகோல்

அப்படி உள்ளூர் மதிப்புக் கூட்டல் அளவுகோல்களை மீறியதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில் ஏப்ரல் 2022 முதல் மானிய தொகை செலுத்துவதை மத்திய அரசு நிறுத்தியது. இதில் Hero Electric, Okinawa Autotech, Revolt, Okoye, Ampere மற்றும் Jitendra EV ஆகியவை பாதிக்கப்பட்டது.

 59,554 வாகனங்கள் மட்டுமே விற்பனை

59,554 வாகனங்கள் மட்டுமே விற்பனை

சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் வாகன் போர்ட்டலின் தரவுகளின்படி, இந்திய சந்தையில் நவம்பர் மாதம் 76,162 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை செய்யப்பட்ட நிலையில் டிசம்பர் மாதம் 59,554 வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ஏப்ரல்-டிசம்பர் காலக்கட்டம்

ஏப்ரல்-டிசம்பர் காலக்கட்டம்

2022 ஆம் ஆண்டின் ஏப்ரல்-டிசம்பர் காலக்கட்டத்தில் இந்தியா முழுவதும் சுமார் 5 லட்சம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை செய்யப்பட்ட நிலையில், மார்ச் மாதத்துடன் முடிவடையும் நிதியாண்டில் நிதி ஆயோக்கின் இலக்கான 100 எலக்ட்ரிக் இரு சக்கர வாகன விற்பனையை அடைய முடியாது.

10 லட்சம் வாகன விற்பனை இலக்கு

10 லட்சம் வாகன விற்பனை இலக்கு

10 லட்சம் வாகன விற்பனையில் 20-30 சதவீத விற்பனையை அடைய முடியாது என மூத்த தொழில்துறை நிர்வாகிகள் எதிர்பார்க்கின்றனர். தற்போது மத்திய அரசு Hero Electric மற்றும் Okinawa Autotech என 6 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி நிறுவனங்களுக்கான 1,100 கோடி ரூபாய் அளவிலான மானிய தொகையை வழங்குவதை நிறுத்திய நிலையில் உற்பத்தி குறைந்தால் விற்பனை மேலும் குறையும்.

2023 இலக்கு

2023 இலக்கு


மேலும் வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டதால் பணப்புழக்கம் பாதிக்கப்பட்டு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியாளர்களின் ஆப்ரேஷனஸ் சீர்குலைய தொடங்கியுள்ளதால், உற்பத்தி பாதிப்பு மேலும் மோசமடைய துவங்கியுள்ளது. இதனால் அடுத்த ஆண்டுக்கான 20 லட்ச வாகன விற்பனை இலக்கை அடைய முடியாது.

 நஷ்டம் 2 மடங்கு உயர்வு.. பணிநீக்கம் உறுதி..? அச்சத்தில் ஊழியர்கள்..! நஷ்டம் 2 மடங்கு உயர்வு.. பணிநீக்கம் உறுதி..? அச்சத்தில் ஊழியர்கள்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Modi govt stalled subsidy disbursal of Rs 1,100 crore; 6 EV companies affected sales dropped

Modi govt stalled subsidy disbursal of Rs 1,100 crore; 6 EV companies affected sales dropped
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X