unknown நம்பர்-க்கு முற்றுப்புள்ளி.. மோடி அரசின் புதிய திட்டம்.. ஷாக்கான Truecaller..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாயில் டெலிகாம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் மக்களுக்குப் பாதுகாப்பான சேவைகளை அளிக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது.

சமீபத்தில் மத்திய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கடந்த வாரம் டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பு மசோதா 2022 இன் வரைவை வெளியிட்டார். இதற்கு முன்பு வெளியிட்ட மசோதா அதிகப்படியான எதிர்ப்புகளை எதிர்கொண்ட நிலையில் மீண்டும் கொண்டு வரப்பட்டு உள்ளது.

இந்த வரைவின் முக்கியச் சிறப்பம்சங்களில் ஒன்று டேட்டா மேலாண்மை நிறுவனங்கள் சரியான செக்யூரிட்டி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் இல்லையெனில் 250 கோடி ரூபாய் வரையில் அபராதம் விதிக்கப்படும் அளவிற்கு விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடி அரசு முக்கியமான சேவையை அறிமுகம் செய்ய உள்ளது.

இன்று 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம்.. போருக்கு தயாராகும் டெலிகாம் நிறுவனங்கள்! இன்று 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம்.. போருக்கு தயாராகும் டெலிகாம் நிறுவனங்கள்!

மத்திய அரசு

மத்திய அரசு

மத்திய அரசு Truecaller ஆப் போலப் புதிய சேவையைக் கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளது, இந்த ஆப் மூலம் காலர் (Caller) பெயர் காட்டுவது மட்டும் அல்லாமல் டெலிகாம் வாடிக்கையாளர்களுக்குப் பல வகையில் உதவ உள்ளது.

unknown நம்பர்-க்கு முற்றுப்புள்ளி

unknown நம்பர்-க்கு முற்றுப்புள்ளி

இந்தச் செயலி மூலம் இனி unknown நம்பர் என்பதே இருக்காது, இத்தகைய சேவை மக்களுக்கு அரசின் நம்பகமான சேவையை அளிக்க முடியும், இதேபோல் டெலிகாம் கட்டுப்பாட்டு ஆணையமான டிராய், வாடிக்கையாளரின் KYC அடிப்படையிலான caller identification முறையைக் கொண்டு வரும் காரணத்தால் 100 சதவீத நம்பக தன்மை உடன் இயங்கும் தளமாக இருக்கும், மேலும் அடுத்த 3 வாரத்தில் இச்சேவை அறிமுகம் செய்யப்படலாம்.

டிராய் அமைப்பு

டிராய் அமைப்பு

டிராய் அமைப்பின் தலைவரான P.D. Vaghela டெலிகாம் வாடிக்கையாளர்களின் என்கேஜ்மென்ட் பிரிவில் அதிகப்படியான சேவைகள் உள்ளது. இந்த நிலையில் டிராய் உருவாக்கி வரும் ட்ரூகாலர் போன்ற caller identification சேவையை அடுத்த 2-3 வாரத்தில் மக்களின் பயன்பாட்டுக்காகக் கொண்டு வரப்பட உள்ளது எனத் தெரிவித்தார்.

ஸ்வீடன் - ட்ரூகாலர் செயலி

ஸ்வீடன் - ட்ரூகாலர் செயலி

ஸ்வீடன் நாட்டின் ஸ்டார்ட்அப் நிறுவனமான ட்ரூகாலர் செயலி அதன் வாடிக்கையாளர்களுக்கு caller identification மட்டும் அல்லாமல் கால் பிளாக்கிங், பிளாஷ் மெசேஜிங், கால் ரெக்கார்டிங், சாட், வாய்ஸ் சேவைகள் எனப் பலவற்றை வழங்கி வருகிறது. இந்தச் சேவையைப் பெற வேண்டும் என்றால் முதலில் யூசர் அவர்களின் மொபைல் நம்பரை அளிக்க வேண்டும். இந்தச் செயலி ஆண்டுராய்டு மற்றும் ஐஓஎஸ் தளத்தில் அளிக்கப்படுகிறது.

டெலிகாம் கட்டுப்பாட்டு ஆணையம்

டெலிகாம் கட்டுப்பாட்டு ஆணையம்

செப்டம்பர் மாதம் டெலிகாம் கட்டுப்பாட்டு ஆணையமான டிராய் அமைப்பின் செயலாளர் வி.ரகுநந்தன் கூறுகையில் டிராய் அமைப்பு தொடர்ந்து spam காலர்களை ஆய்வு செய்யும் பணியில் இறங்கியுள்ள காரணத்தால் புதிய சேவையை, அறிமுகம் செய்ய உள்ளோம். ஒருவர் தங்கள் போனில் அழைப்பை பெறும்போது எதிர் முனையில் இருப்பவரின் பெயர் kyc அடிப்படையில் காட்டப்படும் புதிய மற்றும் சொந்த முயற்சியை டெலிகாம் துறை செய்து வருவதாகத் தெரிவித்தார்.

 நம்பகத்தன்மை

நம்பகத்தன்மை

மக்கள் அதிகம் பயன்படுத்தும் இத்தகையைச் சேவைகளை அரசே கொடுக்கும் போது தனிநபர்களின் தரவுகள் திருடப்படுவதைக் குறைப்பது மட்டும் அல்லாமல் இத்தகைய சேவை நம்பகத்தன்மை உடன் மக்கள் பயன்படுத்த முடியும்.

UPI தளம்

UPI தளம்

எப்படி மத்திய அரசு UPI தளத்தை உருவாக்கி ஒட்டுமொத்த பேமெண்ட் சந்தையைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டதோ அதேபோல் இந்தச் சேவையும் மக்கள் மத்தியில் அதிகளவிலான வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Modi govt to launch own Truecaller-like app to put end of unknown callers; Trai will release in 3 weeks

Modi govt to launch own Truecaller-like app reliable method of caller identification based on the user's KYC to put end of unknown callers; Trai will release in 3 weeks
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X