நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அனைத்து துறைகளிலும் பல மாற்றங்களைக் கொண்டு வரும் நிலையில் மின்சாரத் திருத்த மசோதா-வை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்ய உள்ளது.
இந்த மசோதா மூலம் மின்சாரப் பகிர்மான துறையில் பல முக்கியமான மாற்றங்கள் கொண்ட வரப்படும் காரணத்தால் முக்கியமானதாகவும் மட்டும் அல்லாமல் இப்பிரிவு ஊழியர்கள் கடுமையாக எதிர்க்கும் நிலை உருவாகியுள்ளது.
இந்திய மின்சாரத் துறையில் பலவீனமான இணைப்பாக இருக்கும் மின் பகிர்மான துறையை மேம்படுத்தப் போட்டியைச் செயல்படுத்துதல், கட்டண பாதுகாப்பை வலுப்படுத்துதல் மற்றும் ஒழுங்குமுறை தரகுத்தொகைகளுக்கு அதிக அனுமதியைக் கொடுப்பது தொடர்பான பல மாற்றங்கள் இந்த Electricity Amendment Bill வாயிலாகக் கொண்டு வர மோடி அரசு திட்டமிட்டு உள்ளது.
மின்சார விநியோக துறை
மின்சாரத் துறையில் பலவீனமான இணைப்பாக இருக்கும் மின்சார விநியோக துறையை மேம்படுத்தும் வேண்டும் என்ற பெயரில் மின்சார (திருத்த) மசோதா 2022-ஐ அவசர அவசரமாக நுகர்வோர், பணியாளர்கள் மற்றும் விவசாயிகள் போன்று இப்பிரிவுக்குத் தொடர்புடையவர்களைக் கலந்தாலோசிக்காமல் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்க மத்திய அரசு விரைகிறது எனக் குற்றம்சாட்டுகிறது AIPEF அமைப்பு.
AIPEF அமைப்பு
அகில இந்திய மின் பொறியாளர்கள் கூட்டமைப்பு அதாவது AIPEF அமைப்பு மத்திய அரசின் இந்த மின்சார (திருத்த) மசோதா 2022-ஐ எதிர்த்துத் திங்கட்கிழமை தனது உறுப்பினர்களைப் போராட்டத்திற்கு அழைத்த நிலையில் சுமார் மோடி அரசின் மசோதா-வை எதிர்த்து 27 லட்சம் மின்துறை ஊழியர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
கேம் சேஞ்சர்
மின் விநியோகத் துறையின் கேம் சேஞ்சராகக் கருதப்படும் இந்த மசோதா, மாநிலங்கள் எழுப்பிய பல கருத்துக்களைக் கொண்டு பல முறை திருத்தம் செய்யப்பட்டு உள்ளது. இந்த மசோதா மூலம் மக்கள் தங்களுக்கான மின் வினியோகஸ்தர்-ஐ தேர்வு செய்யும் வாய்ப்புப் பெறுவார்கள், இதனால் மாநில அரசின் ஒற்றை ஆதிக்கம் நீக்கப்பட வாய்ப்பு உள்ளது.
குறுக்கு மானியங்கள்
AIPEF கூட்டமைப்பு தலைவர் ஷைலேந்திர துபே கூறுகையில், மசோதாவின் விதிகள் குறுக்கு மானியங்களை ரத்து செய்யும் அதிகாரத்தை அளிக்கிறது, இதனால் விவசாயிகள் மற்றும் நுகர்வோரை கடுமையாகப் பாதிக்கும்.
விவசாயி
உதாரணமாக இந்த மசோதா மூலம் விவசாயிகளுக்கு அளிக்கப்படும் இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டால் ஒரு 7.5 ஹெச்பி பம்பை ஆறு மணி நேரம் இயங்கும் விவசாயி ஒரு மாதத்திற்கு 10-12,000 ரூபாய் பில் செலுத்த வேண்டும். வீட்டு உபயோகிப்பாளர்களும் தங்கள் மின் கட்டணம் உயர்வதைக் காண்பார்கள்.
ஆலோசனை
விவசாயிகளுடன் விவாதிக்காமல் இந்த மின் திருத்த மசோதாவை அறிமுகப்படுத்த மாட்டோம் என்று கடந்த ஆண்டு விவசாயிகள் அமைப்புக்கு மத்திய அரசு கடிதம் எழுதியிருந்தது, ஆனால் அதைச் செய்யவில்லை என ஷைலேந்திர துபே கூறியுள்ளார்.
மாநிலங்களின் அதிகாரங்கள்
மேலும் AIPEF கூட்டமைப்பு ஊழியர்களின் முக்கியக் கவலை என்னவென்றால், தற்போதைய வடிவத்தில் இந்த மசோதா அறிமுகமானால் மாநிலங்களின் அதிகாரங்களை ஆக்கிரமிக்கும் வகையில் அமையும் என்று ஷைலேந்திர துபே தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!



Click it and Unblock the Notifications