மோடி-யின் புதிய அமைச்சர்கள் "வேற லெவல்".. ஐஏஎஸ் முதல் எம்பிஏ பட்டதாரிகள் வரை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டு 12 அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர், புதிதாக 43 அமைச்சர்கள் பதவி ஏற்று உள்ளனர். இதில் 15 பேர் அமைச்சர்களாகவும், 28 பேர் இணை அமைச்சர்களாகவும் பதவி ஏற்று உள்ளனர்.

கொரோனா தொற்றில் இருந்து வேகமாக இந்தியப் பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் மேம்பட்டு வரும் நிலையில் இந்த அமைச்சரவை மாற்றம் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தும் சில முக்கியமான அமைச்சர் நியமனத்தைத் தான் இப்போது பார்க்கப்போகிறோம்.

 நாராயண் ரானே

நாராயண் ரானே

1971 முதல் 1984 வரையில் வருமான வரித் துறையில் பணியாற்றிய நாராயண் ரானே 35 வருடமாக அரசியலில் இருக்கும் மகாராஷ்டிர அரசில் பல முக்கியப் பதவிகளில் இருந்துள்ளார். இந்நிலையில் முதல் முறையாக மத்திய அமைச்சராகும் இவர் நாட்டின் வளர்ச்சிக்கு மிக முக்கியக் காரணியாக இருக்கும் MSME துறை அமைச்சராகப் பதவியேற்க உள்ளார்.

 சர்பானந்த சோனோவால்

சர்பானந்த சோனோவால்

இந்தியாவில் ஏற்றுமதி மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்துவதிலும், நாட்டின் போக்குவரத்தை மேம்படுத்தும் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழி துறை அமைச்சராகப் பொறுப்பேற்க உள்ளார். இத்துறையுடன் கூடுதலாக ஆயுஷ் (ஆயுர்வேதம், யோகா, இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா, சோவா-ரிக்பா மற்றும் ஹோமியோபதி) அமைச்சக பதவியையும் ஏற்க உள்ளார்.

2016 முதல் 21 வரையில் இவர் அசாம் மாநிலத்தின் முதல்வராக இருந்தவர்.

 

 ஜோதிராதித்ய எம் சிந்தியா

ஜோதிராதித்ய எம் சிந்தியா

5வது முறையாக மத்திய அமைச்சராகப் பதியேற்றுக்கும் ஜோதிராதித்ய எம் சிந்தியா சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பிஜேபி-யில் இணைந்தவர். அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் எம்பிஏ மற்றும் ஹார்வோர்டு பல்கலைக்கழகத்தில் பிஏ பட்டப்படிப்பை முடித்த ஜோதிராதித்ய எம் சிந்தியா நாட்டின் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

 ராமசந்திர பிரசாத் சிங்

ராமசந்திர பிரசாத் சிங்

1984 ஆண்டு ஐஏஎஸ் பேட்ச் அதிகாரியான ராமசந்திர பிரசாத் சிங் 25 வருடம் பல துறையில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இப்புதிய அமைச்சரவையில் ஸ்டீல் துறையில் அமைச்சராகப் பதவியேற்றுள்ளார்.

 அஷ்வினி வைஷ்ணவ்

அஷ்வினி வைஷ்ணவ்

ஐஐடி கான்பூர்-ல் எம்டெக், வார்டன் ஸ்கூலில் எம்பிஏ பட்டம் பெற்ற அஷ்வினி வைஷ்ணவ் 1994 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியும் ஆவார். இந்தியாவின் PPP வரைமுறையில் முக்கிய பங்காற்றிய இவர் தற்போது மத்திய ரயில்வே துறை அமைச்சராகப் பதவியேற்றுள்ளார்.

 ஹார்தீப் சிங் பூரி

ஹார்தீப் சிங் பூரி

இந்தியாவில் தற்போது பெட்ரோல் விலை தாறுமாறாக உயர்ந்துள்ள நிலையில் முன்னாள் விமானப் போக்குவரது துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சரான ஹார்தீப் சிங் பூரி புதிய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ளார். வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற பிரிவு இவர் கட்டுப்பாட்டில் தொடர்கிறது.

 தர்மேந்திர பிரதான்

தர்மேந்திர பிரதான்

பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான்-க்குத் தற்போது கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை வழங்கப்பட்டு உள்ளது.

 

பிற முக்கிய அமைச்சர்கள்

பிற முக்கிய அமைச்சர்கள்

பிரகலாத் ஜோஷி - நாடாளுமன்ற விவகாரங்கள், நிலக்கரி மற்றும் சுங்கத்துறை

புபேந்தர் யாதவ் - வேலைவாய்ப்புத் துறை சுற்றுச் ஊழல், வனம், காலநிலை மாற்றம் மற்றும் தொழிலாளர்.

மகேந்திரநாத் பாண்டே- கனரகத் தொழில்கள் துறை.

பர்ஷோத்தம் ருபாலா- மீன்வளத்துறை, கால்நடை நலத்துறை, பால்வளத்துறை.

ஜி கிஷன் ரெட்டி- கலாசாரத்துறை, சுற்றுலா துறை, வடகிழக்கு இந்திய மேம்பாடு.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Modi's New ministers fit to create impact in economy, business and jobs

Modi's New ministers fit to create impact in economy, business and jobs many were experienced, IAS officers, MBA graduates
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X