ஒரு நிறுவனத்திற்கு சிபில் ரேங்க் எவ்வளவு முக்கியம் தெரியுமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா பாதிப்பு நாட்டின் பொருளாதாரத்தில் பெரிய அளவிலான மாற்றங்களை எதிர்கொண்டுள்ளது, குறிப்பாக வர்த்தகங்களும், வர்த்தகர்களும் அதிகளவிலான பாதிப்புகளை இந்த லாக்டவுன் காலத்தில் எதிர்கொண்டு உள்ளனர்.

இந்நிலையில் இந்த மோசமான பொருளாதாரச் சவால் மிகுந்த காலகட்டத்தில் ஊழியர்களைத் தக்க வைக்கவும், லாக்டவுனுக்குப் பின் வர்த்தகத்தைத் துவங்க போதுமான நிதியுதவி கிடைக்காமல் வர்த்தகர்களும், வர்த்தகங்களும் தவித்து வருகின்றது.

பல நிறுவனங்கள் தற்போது கடுமையான நிதிநெருக்கடியால் சிக்கித்தவித்து வரும் சூழ்நிலையில் கடனுக்கு விண்ணப்பம் செய்திருக்கும் நிலையில் திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டு வருகிறது.

ஒரு நிறுவனத்திற்கு சிபில் ரேங்க் எவ்வளவு முக்கியம் தெரியுமா?

போதுமான பினையம் இல்லாத காரணத்தாலும், சிறப்பான நிதிநிலை இல்லாத காரணத்தாலும், அதிக வட்டி காரணமாகவும் MSME நிறுவனங்கள் வங்கிகளில் இருந்து கடன் பெற முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது. MSME நிறுவனங்கள் தொடர்ந்து வர்த்தகத்தை நடத்தவும், ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுப்பதற்கும் நிதி மிகவும் அவசியம்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் வங்கிகளிடம் இருந்து எளிதாகக் கடன் பெறுவதற்குச் சிபில் ரேங்க் மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது.

கடன் பெறுவதில் MSME நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சவால்கள்

1. MSME நிறுவனங்களுக்கு வர்த்தக வங்கிகளிடம் இருந்து கடன் கொடுக்கும் அளவீடுகள் தொடர்ந்து மந்தமாகவே உள்ளது.

2. பொதுவாக MSME நிறுவனங்கள், குறிப்பாக வகைப்படுத்தாத துறையில் இருக்கும் MSME நிறுவனங்களின் நிதிநிலையை ஆராய்வதில் வங்கிகள் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. குறிப்பாக நிறுவனங்களின் வர்த்தகத்தைப் பொறுத்து நிதிநிலையை ஆய்வு செய்வது வங்கிகளுக்கு மிகவும் கடினமாக உள்ளது. இதனால் வங்கிகள் நிறுவனங்களிடம் பிணையம் இல்லாத போது அதிக வட்டிக்குக் கடன் கொடுக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது.

3. அதிக வட்டிக்குக் கடன் பெறும் போது MSME நிறுவனங்களின் இயக்க செலவுகள் அதிகமாகச் சந்தைக்கு இணையாகப் போட்டியை அளிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்படுகிறது.

4. இதேபோல் MSME நிறுவனங்கள் சிறிய அளவிலான வர்த்தகத்தைச் செய்யும் காரணத்தால், ஆபத்து மூலதனத்தைத் திரட்ட முடியாமல் போகிறது.

5. இதேபோல் MSME நிறுவனங்களுக்குப் போதுமான டிஜிட்டல் அடையாளம் மற்றும் டிஜிட்டல் நிலைப்பாடு இல்லாத காரணத்தால் அரசின் பல சலுகைகளின் பலன்களைப் பெற முடியாத நிலையில் உள்ளது.

6. மேலும் MSME நிறுவனங்கள் செய்யும் வர்த்தகத்தில் வாடிக்கையாளர்கள் குறித்த நேரத்தில் பணம் செலுத்தாத காரணத்தால் நிறுவனத்தின் பணப் புழக்கம் மற்றும் வர்த்தகம் தொடர்ந்து இயங்குவதற்கான நிதி இல்லாமல் போகிறது. இவை இரண்டும் MSME நிறுவனங்களின் உற்பத்தி மற்றும் வளர்ச்சியைப் பெரிய அளவில் பாதிக்கிறது.

7. இந்நிலையில் MSMED சட்டம் 2006 இத்துறை நிறுவனங்களைக் காப்பாற்ற தாமதமாக பேமெண்ட் செலுத்தும் விற்பனையாளர் மீது அபராதம் விதிக்கச் சட்டம் உருவாக்கப்பட்டது. இதனால் MSME நிறுவனங்கள் அதிகளவிலான வர்த்தகத்தை இழக்கும் சூழ்நிலை உருவாகிறது என ரிசர்வ் வங்கி ஆய்வு செய்து வெளியிட்ட ஜூன் 2019 ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

ஒரு நிறுவனத்திற்கு சிபில் ரேங்க் எவ்வளவு முக்கியம் தெரியுமா?

ஒரு நிறுவனத்தின் நிதி ஆதாரத்தின் வலிமை எவ்வளவு முக்கியம்:

வங்கி மற்றும் NBFC நிறுவனங்கள் மட்டும் அல்லாமல் எந்தொரு நிறுவனமாக இருந்தால் கடன் கொடுக்கும் போது ஆபத்துக்களைத் தவிர்ப்பது முதலும் முக்கியமானதாக இருக்கும். இந்நிலையில் வங்கி மற்றும் NBFC நிறுவனங்களுக்குக் கொடுத்த கடன் தொகைக்கான ஈஎம்ஐ அல்லது தொகையைக் குறித்த நேரத்தில் பெற வேண்டும் என்பது மிகலும் முக்கியமான ஒன்றாக உள்ளது.

இந்தச் சூழ்நிலையில் வங்கி மற்றும் NBFC நிறுவனங்கள் ஒரு தனிநபர் அல்லது நிறுவனத்திற்குக் கடன் கொடுக்கும் முன் ஆய்வு செய்வது தத்தம் நிதிநிலையைத் தான். இதை அடிப்படையாக வைத்துத் தான் கடன் அளிக்கலாமா? வேண்டாமா? என்பதை வங்கி மற்றும் NBFC நிறுவனங்கள் முடிவு செய்யும்.

இதனால் MSME நிறுவனங்கள் தங்களது வர்த்தகத்தின் அனைத்துப் பணப் பரிமாற்றத்தையும் தொடர்ந்து பதிவு (கிரெடிட் ரிப்போர்ட்) செய்து வைத்திருக்க வேண்டும். இந்தக் கிரெடிட் ரிப்போர்ட் கண்டிப்பாக நிறுவனங்கள் கடன் பெற நினைக்கும் போது வேகமாகவும், குறைவான வட்டியிலும் கடன் பெற பெரிய அளவில் உதவும்.

இதேபோல் இந்தக் கிரெடிட் ரிப்போர்ட் ஆய்வு செய்ய மிகவும் சுலபமாக இருக்க வேண்டும், ஆய்வு செய்ய அதிக நேரம் எடுத்துக்கொண்டால் கடன் ஒப்புதல் பெறவும் அதிக நேரம் தேவைப்படும். இதேபோல் MSME நிறுவனங்கள் மோசமான நிதிநிலையை வைத்திருந்தால் அதைச் சரி செய்ய அதிகக் காலம் தேவைப்படும், இதேபோல் கடன் பெறுவதிலும் வாய்ப்புகள் குறை

டிரான்ஸ்யூனியன் சிபில் (TransUnion CIBIL) போன்ற கிரெடிட் இன்பார்மேஷன் அமைப்பின் கிரெடிட் ரிப்போர்ட் மூலம் MSME நிறுவனங்கள் தங்களது நிதியியல் வலிமையைத் தொடர்ந்து தெரிந்துகொள்ள முடியும்.

MSME கடனில் பற்றிய கட்டுக்கதைகள்

MSME நிறுவனங்களுக்கான கடனுக்கு நிலையான வட்டி விகிதம், கடன் ஒப்புதல் பெற நீண்ட காலம் தேவைப்படும் என்ற பொதுவாகக் கருத்து உண்டு. இதனால் பல தகுதியான நிறுவனங்களும் வங்கிகள் மற்றும் NBFC-ஐ அணுகுவது இல்லை. இதனால் அதிக வட்டியில் கடன் வாங்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறது.

ஆனால் சிறப்பான கிரெடிட் ரேங் கொண்ட நிறுவனங்கள் வங்கியில் குறைந்த வட்டிக்குக் கடன் வாங்க முடியும். குறிப்பாக வங்கி நிர்வாகத்திடம் வாதிட்டு உங்களுக்கான கடன் மிகவும் குறைந்த வட்டியில் வங்க முடியும்.

இந்தியாவின் முன்னணி கடன் தரவு நிறுவனமான டிரான்ஸ்யூனியன் சிபில் (TransUnion CIBIL) அமைப்புச் சிபில் ரேங்கிங் மற்றும் நிறுவன கிரெடிட் ரிப்போர்ட் (CIBIL Rank and Company Credit Report - CCR) வழங்குகிறது. இது கடன் மற்றும் நிதியுதவிகளைப் பெறுவதற்கான CCR அளவீட்டைக் கணக்கிட்டு 1 முதல் 10 என்ற அடிப்படையில் மதிப்பீட்டைக் கொடுக்கிறது. இதில் 1 மதிப்பீடு என்பது சிறப்பான ரேங்க் என்பது பொருள்.

ஒரு நிறுவனத்திற்கு சிபில் ரேங்க் எவ்வளவு முக்கியம் தெரியுமா?

சிபில் ரேங்கிங் மற்றும் நிறுவன கிரெடிட் ரிப்போர்ட் (CCR) MSME-க்கு எப்படி உதவும்..?

1. சிபில் ரேங்கிங் மற்றும் நிறுவன கிரெடிட் ரிப்போர்ட் (Company Credit Report - CCR) என்பது ஒரு நிறுவனத்தின் நிதியியல் நிலைத்தன்மையை உணர்த்தும் ஒரு ஆவணம்.

2. இந்த அறிக்கையுடன் ஒரு நிறுவனம் கடனுக்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும் போது குறைவான வட்டியிலும், வேகமாகவும் கடனை பெற உதவும்.

3. நிறுவனத்தின் நிதி நிலையைச் சிபில் ரேங்கிங் மற்றும் நிறுவன கிரெடிட் ரிப்போர்ட் (Company Credit Report - CCR) கொண்டு தொடர்ந்து ஆய்வு செய்யும் போது MSME நிறுவனங்களுக்கு உடனடியாகக் கடன் பெறும் தகுதியை அடையும்.

தற்போது பாங்க் ஆஃப் பரோடா போன்று பல வங்கிகள் சிபில் ரேங்க் (CIBIL Rank) அடிப்படையில் MSME நிறுவனங்களுக்குச் சிறப்பான வட்டியில் கடனை அளிக்கிறது.

நிறுவன கிரெடிட் ரிப்போர்ட் (Company Credit Report - CCR) என்பது ஒரு நிறுவனத்தின் கிரெடிட் வரலாறு. இந்த அறிக்கையைக் கடன் நிறுவனங்கள் சிபில் அமைப்பில் தகவல்களைச் சமர்ப்பித்துப் பெறப்படும் ஒன்று. கடந்த கால வர்த்தக வரலாறு எதிர்கால வர்த்தகத்தைத் தீர்மானிக்கும். இதன் மூலம் CCR தகவல் என்பது வங்கி மற்றும் NBFC அமைப்புகள் கொடுக்கும் தகவல் வாயிலாகவே கிடைக்கும் ஒன்று. மேலும் இதை அடிப்படையாக வைத்துத் தான் வங்கிகளும் கடன் அளிக்கிறது.

டிரான்யூனியன் சிபில் (TransUnion CIBIL) அமைப்பு, 1 முதல் 4 ரேங்க் மதிப்பீட்டில் கொடுக்கப்பட்ட 70 சதவீத நிறுவனங்கள் வங்கிகள் கடன் கொடுத்துள்ளது.

ஒரு நிறுவனத்திற்கு சிபில் ரேங்க் எவ்வளவு முக்கியம் தெரியுமா?

சிபில் ஸ்கோர் மற்றும் சிபில் ரேங்க்

சிபில் ஸ்கோர் என்பது 3 இலக்கம் கொண்ட நம்பர் தனிநபரின் நிதிநிலையை உணர்த்தும் மதிப்பீடு.

சிபில் ரேங்க் (CIBIL Rank) என்பது 50 கோடி ரூபாய்க்கும் குறைவான கிரெடிட் அளவு கொண்ட நிறுவனங்களின் நிதிநிலையை உணர்ந்தும் மதிப்பீடு.

மேலும் தெரிந்துகொள்ள இணையதளத்திற்குச் செல்லுங்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: cibil bank nbfc சிபில்
English summary

Monitoring CIBIL Rank can help businesses apply for a loan with confidence

Monitoring CIBIL Rank can help businesses apply for a loan with confidence
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X