கடுமையான சவால்களுக்கு மத்தியில் வாகன துறை.. டாடா மோட்டார்ஸ் மதிப்பீடு குறைப்பு.. மூடீஸ்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : ஆட்டோமொபைல் துறையில் நீடித்து வரும் மந்த நிலை, பொருளாதார மந்தம், பணப்புழக்கம் உள்ளிட்ட பிரச்சனைகளால் டாடா மோட்டார்ஸ் கடுமையான சவால்களை மேற்கொண்டு வருவதாக மூடிஸ் தெரிவித்துள்ளது.

டாடா சன்ஸ் நிறுவனத்திடமிருந்து, இந்த நிறுவனம் 6,542 கோடி ரூபாய் மதிப்புள்ள ஊக்கத் தொகையினை பெற உள்ளதாக கூறப்படும் நிலையில், அதன் கடன் விகிதம் குறையும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

எனினும் இந்த நிறுவனம் கடுமையான சவால்களை மேற்கொள்கிறது என்று மூடீஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது

வராத வரி வருவாய், நிறையாத கஜானா..! வருத்தத்தில் அரசு தரப்பு..!வராத வரி வருவாய், நிறையாத கஜானா..! வருத்தத்தில் அரசு தரப்பு..!

கடுமையான சவால்களை சந்தித்து வருகிறது

கடுமையான சவால்களை சந்தித்து வருகிறது

அதிலும் நாட்டில் நிலவி வரும் மந்த நிலையில், மிகப்பெரிய வாகன உற்பத்தியாளரான டாடா மோட்டார்ஸ் நிறுவனம், பலவீனமான பொருளாதார வளர்ச்சி, பலவீனமான பொருளாதார புழக்கம் மற்றும் மிக கடுமையான நிதி விதிமுறைகள் போன்ற கடுமையான சவால்களை வாகனத்துறை கண்டு வருவதாகவும் மூடீஸ் தெரிவித்துள்ளது.

டாடா மோட்டார்ஸூக்கு எதிர்மறையான மதிப்பீடு

டாடா மோட்டார்ஸூக்கு எதிர்மறையான மதிப்பீடு

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு மூடிஸ் மதிப்பீட்டு நிறுவனம் Ba3 என்ற மதிப்பீட்டை வழங்கியுள்ளது. மேலும் இந்த மதிப்பீடானது மிக எதிர்மறையானது என்றும் மூடிஸ் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் முன்னணி வர்த்தக வாகன சந்தையில் உள்ளது. இதே சொகுசு கார் உற்பத்தியாளரான ஜாகுவார் லேண்ட் ரோவர் கார் உரிமையும் டாடா சன்ஸிடமே உள்ளது.

கடுமையான சவால்களை எதிர்கொள்கிறது
 

கடுமையான சவால்களை எதிர்கொள்கிறது

ஜாகுவார் லேண்ட் ரோவர் தவிர, டாடா மோட்டார்ஸின் வர்த்தக வாகனம் மற்றும் பயணிகள் வாகன விற்பனை கடுமையான சவால்களை எதிர்கொள்கின்றன. மந்தமான பொருளாதார வளர்ச்சி, பலவீனமான பொருளாதார பணப்புழக்கம், இறுக்கமான நிதி விதிமுறைகள், குறைந்த கிராமப்புற வருமானம் ஆகியவை நுகர்வோர் உணர்வை எதிர்மறையாக பாதிக்கின்றன என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

டாடா மோட்டார்ஸ் விற்பனை சரிவு

டாடா மோட்டார்ஸ் விற்பனை சரிவு

குறிப்பாக டாடா மோட்டார்ஸின் பயணிகள் வாகன விற்பனை அளவு 41 சதவிகிதம் அளவுக்கு 2019 - 2020ம் ஆண்டின் முதல் பாதியில் சரிந்துள்ளது. இதே நேரத்தில் வர்த்தக வாகன விற்பனை 29.5 சதவிகிதம் குறைந்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் டாடா மோட்டார்ஸின் நிலையான மதிப்பு, எதிர்மறையாக மாற்றியுள்ளது. இது நாட்டில் பொருளாதார வளர்ச்சி கடந்த காலங்களை விட பொருளாதார ரீதியாக குறைவாகவே இருக்கும் அபாயங்களை பிரதிபலிக்கிறது.

வரும் மாதங்களில் மேம்படலாம்

வரும் மாதங்களில் மேம்படலாம்

தற்போது இந்தியாவில் பொருளாதாரத்தை அதிகரிப்பதற்கான அரசு நடவடிக்கைகள், இந்தியாவின் மந்த நிலையில் உள்ள வளர்ச்சியின் ஆழத்தையும் கால அளவையும் குறைக்க உதவ வேண்டும். குறிப்பாக கிராமப்புற குடும்பங்களுக்கிடையே நீடித்த நிதி அழுத்தங்கள், பலவீனமான வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கிடையே கடன் நெருக்கடி அதிகரித்துள்ளது. அரசின் தொடர் நடவடிக்கையால் இது வரும் மாதங்களில் மேம்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இழப்பு

இழப்பு

நடப்பு நிதியாண்டின் பிற்பாதியில் சற்று தேவை அதிகரிக்கும் போது, சற்று சிறந்த அளவை வழங்கும் என்றாலும், வாகன தொழிலுக்கு குறுகிய கால அரசாங்க தூண்டுதல் நடவடிக்கைகளின் தாக்கம், நீண்டகாலத்திற்கு இருக்குமா என்பது குறித்து மூடீஸ் சந்தேகம் கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளது. குறிப்பாக பயணிகள் வாகன பயன்பாடு குறைந்ததையடுத்து, விற்பனையும் சரிந்துள்ளது. இதனால் நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் இந்த பிரிவில் 21.4 சதவிகித இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுவே கடுமையான மதிப்பீட்டு கவலையை ஏற்படுத்தியுள்ளதாக மூடிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Moody's says Tata motors India faces some critical problems

Moody's says Tata motors India faces some critical problems, and its assigned a Ba3 rating to Tata Motors and this rating outlook is negative, says moody's
Story first published: Wednesday, November 13, 2019, 15:01 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X