கொரோனா எதிரொலி.. தற்காலிக பணியமர்த்தல் அதிகரிக்கும்.. நிரந்தர வேலை குறையும்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாட்டில் இன்றும் மக்களை பாடாய்படுத்தி வரும் கொரோனா காரணமாக, கடந்த ஆண்டே வணிகங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது இரண்டாம் கட்ட பரவலும் மிக வேகமாக பரவி வருகின்றது.

 

இதற்கிடையில் தற்போது வரையிலும் கூட போதிய அளவு மீட்பு என்பது இல்லை. இதற்கிடையில் நிறுவனங்கள் தற்போதைக்கு நிரந்தர ஊழியர்களை பணியமர்த்துவதை குறைத்துள்ளன.

சில நிறுவனங்கள் தற்காலிக ஊழியர்களையே பணியமர்த்துகின்றன. நிரந்தர ஊழியர்கள் பணியமர்த்தல் என்பது நிறுத்திவிட்டு, பாதுகாப்பாக அடுத்தடுத்த நடவடிக்கைகளை எடுகின்றன.

கமிஷன் அடிப்படையில் பணி

கமிஷன் அடிப்படையில் பணி

இது குறித்து மேன்பவர் நிறுவனத்தில் மூத்த இயக்குனர் அலோக் குமார், மூத்த தொழில் நுட்ப வல்லுனர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு, குறிப்பிட்ட திட்டங்களுக்கு ஆலோசகர்களாக எடுத்துக் கொள்கின்றனர். மேலும் கமிஷன் வடிவத்தில் இவர்கள் ஊழியமாக பெறுகின்றனர் என கூறுகிறார்.

தற்காலிக பணியமர்த்தல் அதிகரிக்கும்

தற்காலிக பணியமர்த்தல் அதிகரிக்கும்

இதற்கிடையி;ல் 2021ம் ஆண்டில் தற்காலிக பணியமர்த்தல் என்பது, கடந்த 2020ஐ விட இரு மடங்காக அதிகரிக்கும் என்று டீம்லீஷ் நிறுவனத்தின் வணிகத் தலைவரான தேவல் சிங் நம்புவதாக ஒரு அறிக்கையில் கூறியுள்ளார். மேலும் இந்த மாற்றம் நிர்வாகங்கள் தங்கள் வணிக மாதிரிகளை மாற்றியமைப்பதன் விளைவாகும். நிறுவனங்கள் தற்போது வரையில் நிச்சயமற்ற தன்மையை எதிர்கொள்கின்றனர்.

திறன் அடிப்படையில் பணி
 

திறன் அடிப்படையில் பணி

குறிப்பாக செலவுகளை குறைக்க முயற்சித்து வருகின்றன. ஆக தற்காலிக வேலைக்கு அமர்த்தப்படுவதால், அவர்களின் திறமைகளின் ஒரு தொகுப்பை பெறுகிறார்கள். அவர்கள் சோதிக்கப்படலாம். பின்னர் தேவைப்பட்டால் நிரந்தர வேலைகளில் அமர்த்தப்படலாம் என சிங் கூறியுள்ளார். மொத்தத்தில் திறன் உள்ளவர்களாக இருந்தால், நிரந்தர ஊழியர்களாக மாற்றிக் கொள்கின்றன.

பிளெக்ஸிபிள் பணியாளர்

பிளெக்ஸிபிள் பணியாளர்

தற்போதைய நிலையில் நிறுவனங்கள் பிளெக்ஸிபிள் பணியாளர் மாதிரியை எதிர்பார்க்கின்றனர். இது சந்தையின் நிலையை பொறுத்து அவற்றை கூட்டியும் அல்லது குறைத்தும் அளவிட முடியும். கொரோனா வைரஸ் நிறுவனங்களை புதிய வணிக மாதிரிகளை கொண்டு வர மீண்டும் கட்டாயப்படுத்துகிறது. இது நிறுவனங்களை தற்காலிக பணியாளர்களை கொண்டு பரிசோதனை செய்யத் தூண்டுகிறது.

இது தான் நல்லது?

இது தான் நல்லது?

நிரந்தர ஊழியர்களை கொண்ட நிறுவனத்தை, குறுகிய காலத்திற்கு ஊழியர்களை பணியமர்த்துவது பாதுகாப்பானது, புத்திசாலிதனமானது என நிபுணர்கள் கருதுகின்றனர். ஏனெனில் தற்போது பல பார்மேட்டுகள் உருவாகின்றன. இதனால் நிரந்தர ஊழியர்கள் அணியை ஓவர்லோட் செய்யாமல் இருப்பது நல்லது என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். .

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

More temporary staff in demand, lower permanent jobs

Job updates.. More temporary staff in demand, lower permanent jobs
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X