மார்கன் ஸ்டான்லியின் செம கணிப்பு.. ரெடியா இருங்க.. மிஸ் பண்ணிடாதீங்க..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த சில வர்த்தக அமர்வுகளாகவே இந்திய பங்கு சந்தைகள் தொடர்பு உச்சத்தினை தொட்டு வருகின்றன.

நாட்டின் பொருளாதாரம் கொரோனாவால் சீர்குலைந்துள்ளது. நிறுவனங்களின் உற்பத்தி விகிதம் குறைந்துள்ளது. செயல்பாடுகள் முடங்கியுள்ளன. ஆனால் இவற்றிற்கும் மத்தியிலும் இந்திய பங்கு சந்தைகள் புதிய உச்சத்தினை கண்டு வருகின்றது என்ற கேள்விகள் எழுந்து வருகின்றன.

ஆனால் மார்கன் ஸ்டான்லியோ இன்னும் புதிய உச்சத்தினை தொடலாம் என்று கணித்துள்ளது. அதனை பற்றித் தான் இந்த கட்டுரையில் பார்க்க உள்ளோம்.

மார்கன் ஸ்டான்லி – சென்செக்ஸ் இலக்கு
 

மார்கன் ஸ்டான்லி – சென்செக்ஸ் இலக்கு

முதலீட்டாளர்களை இன்னும் ஆச்சர்யபட வைக்கும் விதமாக மார்கன் ஸ்டான்லியின் அறிக்கை வந்துள்ளது. அதில் இந்திய சந்தைகள் கொரோனா வழக்குகள் குறைந்து வரும் நிலையில், சர்வதேச சந்தைகளின் எதிரொலியாக, இந்திய சந்தைகள் ஏற்றத்தினை கண்டு வருகின்றது. இதன் இலக்கு டிசம்பர் 2021ல் 50,000 தொடலாம் என்றும் கணித்துள்ளது.

சென்செக்ஸ் கணிப்பு

சென்செக்ஸ் கணிப்பு

முன்னதாக இந்த நிறுவனம் ஜூன் 2021ல் சென்செக்ஸின் இலக்கு 37,300 ஆக நிர்ணயித்திருந்தது கவனிக்கதக்கது. மார்கன் ஸ்டான், சென்செக்ஸில் ஓரு பங்கின் EPS விகிதம் 2021ம் நிதியாண்டில், 2022ம் நிதியாண்டு மற்றும் 2023ம் நிதியாண்டில் முறையே, 15% மற்றும் 10%, 9% ஏற்றம் காணலாம் என்றும் கணித்துள்ளது.

வளர்ச்சிக்கான குறிகாட்டிகள்

வளர்ச்சிக்கான குறிகாட்டிகள்

கொரோனா தொற்றுக்கள் உச்சத்தில் உள்ளன. எனினும் வளர்ச்சி குறித்தான குறிகாட்டிகள் வலுவாக உள்ளன. அதனை ஊக்குவிக்கும் விதமாக அரசாங்கத்தின் கொள்கை நடவடிக்கை எதிர்பார்ப்புகளும் உள்ளன. இந்திய நிறுவனங்கள் தொற்று நோய் மூலம் தங்களது செயல்பாடுகளை (உதாரணம் டிஜிட்டல் செயல்பாடு) அதிகரித்து வருகின்றன. இதனால் வளர்ச்சி விகிதம் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதெல்லாம் ஏற்றம் காணலாம்
 

இதெல்லாம் ஏற்றம் காணலாம்

கொரோனா வைரஸ் நிலையானது மேம்படும்போது, வளர்ச்சி மீட்பு நிலை மற்றும் சொத்து விலைகள் உலகளாவிய தூண்டுதலால் ஆதரிக்கப்படும். இதற்கிடையில் தான் உலகளாவிய தரவு நிறுவனம் சென்செக்ஸ் 50,000-ஐ தொடலாம் என்றும் கணித்துள்ளது. அதுமட்டும் அல்ல, மார்கன் ஸ்டான்லி ஸ்மால் கேப் மற்றும் மிட் கேப் குறியீடுகள் அடுத்தாண்டு நல்ல ஏற்றத்தினை காணலாம் என்றும் கூறியுள்ளது.

ஏற்றத்திற்கு காரணம்

ஏற்றத்திற்கு காரணம்

மேலும் உள்நாட்டு சுழற்சிகள் ஏற்றுமதியை விட அதிகமாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஏனெனில் நுகர்வு அதிகரித்து வருகின்றது என்றும் தனது அறிக்கையில் மார்கன் ஸ்டான்லி தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா

தடுப்பூசி, வலுவான இரண்டாம் காலாண்டு முடிவுகள், அமெரிக்கா தேர்தல் மற்றும் முக்கிய பொருளாதாரங்களில் உள்ள வளர்ச்சி, உலகளாவிய சந்தையின் ஏற்றத்திற்கு வழிவகுக்கும். இதன் காரணத்தினாலேயே கடந்த மார்ச் மாதம் குறைந்த

நிலையிலிருந்து, தற்போது ஏற்றம் கண்டு வருகின்றது. இது வரும் ஆண்டிலும் ஏற்றத்துக்கு வழிவகுக்கலாம்

இந்திய சந்தைகள் மீட்சி

இந்திய சந்தைகள் மீட்சி

கடந்த மார்ச் 23 அன்று இந்தியாவில் கொரோனா வழக்குகள் அதிகரித்ததாக பதிவு செய்யப்பட்ட நிலையில், முழு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. இதற்கிடையில் அந்த நேரத்தில் சென்செக்ஸ் மிகப்பெரிய இழப்பினை பதிவு செய்தது. ஆனால் மார்ச் 23-லிருந்து சென்செக்ஸ் 18,180 புள்ளிகளை மீட்டுள்ளது. இதுவே நிஃப்டி 5,255 புள்ளிகளை எட்டியுள்ளது.

முதலீட்டாளர்களுக்கு நல்ல சான்ஸ்

முதலீட்டாளர்களுக்கு நல்ல சான்ஸ்

இதே நவம்பரில் மட்டும் சென்செக்ஸ் 4,547 புள்ளிகள் ஏற்றம் கண்டுள்ளது. நிஃப்டியும் 1292 புள்ளிகள் அதிகரித்துள்ளது. சொல்லப்போனால் சமீபத்தியில் கடந்த சில அமர்வுகளில் புதிய உச்சத்தினை தொட்டு வருகின்றன. ஆக முதலீட்டாளர்களுக்கு ஒரு சான்ஸ் காத்துக் கொண்டுள்ளது எனலாம்.

முதலீட்டாளர்களுக்கு லாபம் கிடைக்கின்றது என்றால் அது மிக நல்ல விஷயம் தானே.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Morgan Stanley expects sensex will touch at 50,000 by next year end

Market update.. Morgan Stanley expects sensex will touch at 50,000 by next year end
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X