ஜூன் 2020 காலாண்டு GDP மதிப்பீடுகள் வரலாறு காணாத சரிவைக் காணலாம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்று மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகம் (Ministry of Statistics and Programme Implementation) ஏப்ரல் 2020 - ஜூன் 2020 வரையான கால கட்டத்துக்கான ஜிடிபி கணிப்புகளை வெளியிட இருக்கிறது.

இந்த ஜூன் 2020 காலாண்டில் கடந்த ஜூன் 2019 காலாண்டைவிட 16 - 25 சதவிகிதம், ஜிடிபி சரியலாம் என பொருளாதார வல்லுநர்கள் கணித்து இருக்கிறார்கள். இந்த சரிவு, இதுவரை இந்திய பொருளாதாரம் கண்டிராத வரலாறு காணாத சரிவு எனச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

ஜூன் 2020 காலாண்டு GDP மதிப்பீடுகள் வரலாறு காணாத சரிவைக் காணலாம்!

உண்மையில், கொரோன வைரஸ் பிரச்சனையாலும், அதனைத் தொடர்ந்து அறிவித்த லாக் டவுன்களாலும், இந்தியப் பொருளாதாரம் எவ்வளவு சரிந்து இருக்கிறது என்கிற சரியான விவரம், இன்று ஜிடிபி அறிக்கை வெளியான பின் தெரிய வரும்.

இந்த ஜூன் 2020 காலாண்டில், ஜி வி ஏ (gross value-added) கூட 19 - 25 சதவிகிதம் சரியலாம் எனக் கணிப்புகள் சொல்கின்றன.

இந்த ஜூன் 2020 காலாண்டுக்கான ஜிடிபி மதிப்பீடு, இந்திய தொழில் துறை உற்பத்தி (IIP), மாநில அரசாங்கங்கள் மற்றும் மத்திய அரசின் மாதாந்திர செலவீன கணக்குகள், விவசாய உற்பத்தி, போக்குவரத்துத் துறை, வங்கித் துறை, இன்சூரன்ஸ் துறை போன்றவைகளை அடிப்படையாகக் கொண்டு மதிப்பீடு செய்கிறார்களாம்.

இந்திய பொருளாதாரத்தின் ஜிடிபியில், உற்பத்தி, கட்டுமானம், வர்த்தகம், ஹோட்டல், தொலைத் தொடர்பு, போக்குவரத்து, தொலைத் தொடர்பு போன்ற துறைகள் 45 சதவிகிதம் பங்களிக்கின்றன. இந்த ஜூன் 2020 காலாண்டில் அதிகம் பாதிக்கப்பட்ட துறைகளாகவும் மேலே சொன்ன துறைகள் தான் இருக்கின்றன.

இக்ரா ரேட்டிங் நிறுவனத்தின் கணிப்புப் படி, இந்த லாக் டவுன் காலாண்டில், இந்தியாவின் ஜிடிபி மற்றும் ஜிவிஏ (அடிப்படை விலையில்) முந்தையை ஆண்டை விட இந்த ஆண்டில் 25 சதவிகிதம் சரியலாம் எனக் கணித்து இருக்கிறது.

IMF GDP: இந்திய ஜிடிபி 7% தாங்க வளரும்..! கணிப்பை குறைத்துக் கொண்ட IMF! IMF GDP: இந்திய ஜிடிபி 7% தாங்க வளரும்..! கணிப்பை குறைத்துக் கொண்ட IMF!

இந்தியா ரேட்டிங்ஸ் நிறுவனமும், இந்திய பொருளாதாரத்தின் இந்த ஜூன் 2020 காலாண்டு ஜிடிபி 17.03 சதவிகிதம் சரியலாம் எனக் கணித்து இருக்கிறது.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் முதன்மைப் பொருளாதார ஆலோசகர் செளம்ய காந்தி கோஷ், ஜூன் 2020 காலாண்டில் இந்தியாவின் ரியல் ஜிடிபி 16.5 சதவிகிதம் சரியலாம் எனச் சொல்லி இருக்கிறார்.

இந்தியாவின் ஏற்றுமதி, ஜூன் 2020 காலாண்டில் 36.3 % சரிந்து இருக்கிறது. இந்தியாவின் கன்ஸ்யூமர் டியூரபிள்ஸ் விற்பனை ஜூன் 2020 காலாண்டில் 67 சதவிகிதம் சரிந்து இருக்கிறது.
இந்தியாவின் ஆட்டோமொபைல் விற்பனை, ஜூன் 2020 காலாண்டில் 75.5 சதவிகிதம் சரிந்து இருக்கிறது.

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த லாக் டவுன் அறிவித்ததால், ஏப்ரல் 2020-ல், இந்தியாவில் சுமார் 23 சதவிகிதம் பேர் வேலை இல்லாமல் தடுமாறினார்கள். ஆனால் லாக் டவுன் தளர்த்தப்பட்டு மெல்ல, பொருளாதாரம் செயல்படத் தொடங்கிய பின், ஜூன் 2020 காலத்தில் வேலை இல்லா திண்டாட்டம் 11 சதவிகிதமாக சரிந்து இருக்கிறது. இருப்பினும் ஏப்ரல் - ஜூன் 2020 காலாண்டில், வேலை இல்லா திண்டாட்டம் 19.3 சதவிகிதமாக பதிவாகி இருக்கிறது.

கடந்த மார்ச் 2020 காலாண்டில் இந்திய பொருளாதாரத்தின் ஜிடிபி வளர்ச்சி 3.1 சதவிகிதமாக இருந்தது. இது கடந்த 44 காலாண்டுகளில் இல்லாத, மிகக் குறைவான ஜிடிபி வளர்ச்சி. 2019 - 20 நிதி ஆண்டுக்கான ஜிடிபி வளர்ச்சி 4.2 சதவிகிதமாக குறைந்து இருக்கிறது. இது கடந்த 2008 - 09 கால கட்டத்துக்குப் பின், இந்திய ஜிடிபி காணும் மிகக் குறைந்த வளர்ச்சி என்பது குறிப்பிடத்தகக்து.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

MOSPI is going to announce GDP estimates today GDP may shrink to historic low

The Ministry of Statistics and Program Implementation is going to announce the June 2020 GDP estimates today. GDP may shrink to historic low.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X