உலகிலேயே மிகவும் காஸ்ட்லியான விவாகரத்து இதுதான்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகளவில் கிட்டத்தட்ட 40% முதல் 50% திருமணங்கள் விவாகரத்தில் முடிவடைகின்றன என ஒரு ஆய்வு கூறுகிறது. விவாகரத்து எந்த அளவிற்கு கசப்பானாதோ அதே அளவிற்கு மிகவும் காஸ்ட்லியானது கூட.

 

குறிப்பாக பெரும் தொழிலதிபர்கள், பிரபலங்கள், விளையாட்டு வீரர்களின் விவாகரத்தை கேட்டாலே ஆடிப்போகும் அளவிற்கு தொகை கொண்டு உள்ளது.

இந்நிலையில் உலகளவில் மிகவும் காஸ்ட்லியான விவாகரத்துகளை பற்றி தான் இப்போது பார்க்கப்போகிறோம்.

பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ்

பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ்

சமீபத்தில் பலரை அதிர்ச்சி அடைய வைத்த ஒரு ஜோடி என்றால் அது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைவர் பில் கேட்ஸ் மற்றும் மெலிண்டா கேட்ஸ் ஆகியோரின் விவாகரத்து தான். சுமார் 27 வருட திருமண வாழ்க்கையை இனியும் ஏற்றுக்கொள்ள முடியாது என வெளியேறிய மெலிண்டா கேட்ஸ் பெற்ற தொகை எவ்வளவு தெரியுமா..

வெயிட் பண்ணுங்கடைசியாக பார்ப்போம்.

 

பால் மெக்கார்ட்னி மற்றும் ஹீதர் மில்ஸ்

பால் மெக்கார்ட்னி மற்றும் ஹீதர் மில்ஸ்

கசப்பான நீதிமன்றப் விவாதத்தில் பீட்டில் இசை குழு பால் மெக்கார்ட்னி மற்றும் முன்னாள் மனைவி ஹீதர் மில்ஸ்-ஐ விவாகத்து செய்தார். 2008 இல் கிட்டத்தட்ட 25 மில்லியன் பவுண்டு (கிட்டத்தட்ட 50 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) பணத்திற்கு விவாகரத்து செய்தனர்.

 ஜேம்ஸ் கேமரூன் மற்றும் லிண்டா ஹாமில்டன்
 

ஜேம்ஸ் கேமரூன் மற்றும் லிண்டா ஹாமில்டன்

இயக்குனர் ஜேம்ஸ் கேமரூனும் நடிகை லிண்டா ஹாமில்டனும் 1999 இல் திருமணமான இரண்டு வருடங்களுக்குப் பிறகு விவாகரத்து செய்ய முடிவு செய்தனர். சுமார் 50 மில்லியன் அமெரிக்க டாலர் பணத்திற்கு விவாகரத்து செய்தனர்.

ஹாரிசன் ஃபோர்டு மற்றும் மெலிசா மதிசன்

ஹாரிசன் ஃபோர்டு மற்றும் மெலிசா மதிசன்

ஆக்ஷன் ஹீரோவான ஹாரிசன் ஃபோர்டு, திரைக்கதை எழுத்தாளர் மெலிசா மாத்திசனுடன் 18 ஆண்டுகள் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிய 2004 இல் விவாகரத்து செய்தனர். சுமார் 85 மில்லியன் அமெரிக்க டாலர் பணத்திற்கு விவாகரத்து செய்தனர்.

 மடோனா மற்றும் கை ரிச்சி

மடோனா மற்றும் கை ரிச்சி

மடோனாவும் இயக்குனர் கை ரிச்சியும் (Guy Ritchie) 2000 இல் திருமணம் செய்துகொண்டனர், எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு விவாகரத்து செய்தனர். விவாகரத்து தீர்வில் Guy Ritchie 92 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பெற்றதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

சில வழக்குகளில் ஆண்களும் பணத்தை பெறும் வாய்ப்பு இருக்கும்.

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் மற்றும் ஆமி இர்விங்

ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் மற்றும் ஆமி இர்விங்

இந்த ஜோடி திருமணமாகி நான்கு வருடங்கள் மட்டுமே ஆகியிருந்தாலும், இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் முதல் மனைவி, எமி இர்விங், அவரது சம்பாத்தியத்தில் பாதியுடன், அதாவது 100 மில்லியன் அமெரிக்க டாலர்களுடன் விவாகரத்து செய்தார்.

மைக்கேல் ஜோர்டான் மற்றும் ஜுவானிடா வனோய்

மைக்கேல் ஜோர்டான் மற்றும் ஜுவானிடா வனோய்

கூடைப்பந்து விளையாட்டில் பலரும் கடவுளாக மதிக்கப்படும் மைக்கேல் ஜோர்டான் மற்றும் ஜுவானிதா வனோய் இருவரும் 17 வருடங்கள் திருமணம் வாழ்வில் இருந்து வெளியேற முடிவு செய்து 2006 இல் விவாகரத்து செய்தனர்.

இந்த விவாகரத்தில் மைக்கேல் ஜோர்டன் சொத்து மதிப்பில் இருந்து 168 மில்லியன் அமெரிக்க டாலர்களைப் பெற்றார் ஜுவானிதா வனோய்.

 

கிரேக் மெக்காவ் மற்றும் வெண்டி மெக்காவ்

கிரேக் மெக்காவ் மற்றும் வெண்டி மெக்காவ்

செல்போன் சேவையில் முன்னோடியான McCaw Cellular நிறுவனத்தின் நிறுவனர் கிரெய்க் மெக்காவ் மற்றும் அவரது மனைவி வெண்டி ஆகியோர் 1996 இல் விவாகரத்து செய்தனர்.

திருமணமாகி 22 ஆண்டுகள் ஆன இந்த ஜோடி விவகரத்து செய்த போது வெண்டி 460 மில்லியன் அமெரிக்க டாலர்களைப் பெற்றார்.

 டைகர் வூட்ஸ் மற்றும் எலின் நோர்டெக்ரென்

டைகர் வூட்ஸ் மற்றும் எலின் நோர்டெக்ரென்

கோல்ஃப் சூப்பர் ஸ்டார் டைகர் உட்ஸ், 2010 இல் பல துரோகங்கள் வெளிச்சத்திற்கு வந்த பிறகு, அவரது மாடல் மனைவி எலின் நோர்டெகிரென்-க்கு குறைந்தபட்சம் 100 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அட்னான் கஷோகி மற்றும் சோரயா கஷோகி

அட்னான் கஷோகி மற்றும் சோரயா கஷோகி

சவூதி அரேபிய ஆயுத வியாபாரி அட்னான் கஷோகி 1974 இல் தம்பதிகள் பிரிந்தபோது அவரது மனைவி சோரயாவிற்கு விவாகரத்துக்கான தீர்வாக 875 மில்லியன் அமெரிக்க டாலர்களை செலுத்தினார்.

இந்த காலக்கட்டம் வரை அது தான் மிகப்பெரிய விவாகரத்து தீர்வாக இருந்தது.

ஸ்டீவ் மற்றும் எலைன் வின்

ஸ்டீவ் மற்றும் எலைன் வின்

Wynn Resorts Ltd. தலைவர் Steve Wynn இன் விவாகரத்து தீர்வின் ஒரு பகுதியாக, அவர் தனது முன்னாள் மனைவி Elaine-க்கு நிறுவனத்தில் உள்ள தனது பங்குகளில் பாதியை கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதன் மதிப்பு அப்போது 741 மில்லியன் டாலராகும்.

பெர்னி எக்லெஸ்டோன் மற்றும் ஸ்லாவிகா எக்லெஸ்டோன்

பெர்னி எக்லெஸ்டோன் மற்றும் ஸ்லாவிகா எக்லெஸ்டோன்

ஃபார்முலா ஒன் தலைமை நிர்வாக அதிகாரி பெர்னி எக்லெஸ்டோன் தனது இரண்டாவது மனைவியான ஸ்லாவிகா-வை ( Slavica) 2009 இல் விவாகரத்து செய்தார். இந்த ஜோடி சுமாப் 24 ஆண்டுகள் திருமணம் செய்து கொண்டார். இவர்களது விவாகரத்தில் ஸ்லாவிகா 1.2 பில்லியன் டாலர் பெற்றுள்ளார்.

ஹரோல்ட் ஹாம் மற்றும் சூ ஆன் ஹாம்

ஹரோல்ட் ஹாம் மற்றும் சூ ஆன் ஹாம்

திருமணமான 26 ஆண்டுகளுக்குப் பிறகு, கான்டினென்டல் ரிசோர்சஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், அமெரிக்காவின் முன்னணி கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு வர்த்தகரான ஹரோல்ட் ஹாம், அவரது முன்னாள் மனைவி சூ ஆன் ஆர்னாலுக்கு கிட்டத்தட்ட 1 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ரொக்கம் மற்றும் சொத்துக்களை செலுத்து உத்தரவிடப்பட்டது.

ரூபர்ட் முர்டோக் மற்றும் அன்னா முர்டோக்

ரூபர்ட் முர்டோக் மற்றும் அன்னா முர்டோக்

மீடியா துறையின் கிங் என போற்றப்படும் ரூபர்ட் முர்டோக் தனது மனைவி அன்னாவை 1.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் தொகை கொடுத்து விவாகரத்து செய்தார்.

இந்த ஜோடி 32 ஆண்டுகளுக்கு முன்பு திருமண வாழ்க்கையில் இருவ்து 1999 இல் விவாகத்து செய்தனர்.

 அலெக் மற்றும் ஜோஸ்லின் வைல்டன்ஸ்டீன்

அலெக் மற்றும் ஜோஸ்லின் வைல்டன்ஸ்டீன்

1999 ஆம் ஆண்டில் கலை வியாபாரி (Art Dealer) அலெக் வைல்டன்ஸ்டீன் இடமிருந்து ஜோஸ்லின் வைல்டன்ஸ்டீன்-ஐ விவாகரத்து செய்ததற்காக 2.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கொடுக்கப்பட்டது.

ஜெஃப் பெசோஸ் மற்றும் மெக்கென்சி ஸ்காட்

ஜெஃப் பெசோஸ் மற்றும் மெக்கென்சி ஸ்காட்

அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் மற்றும் மெக்கென்சி ஸ்காட்-ன் விவாகரத்து தான் உலகிலேயே மிகவும் காஸ்ட்லியான விவாகரத்தாக உள்ளது.

இந்த ஜோடி திருமணமாகி 25 ஆண்டுகள் ஆனா நிலையில் நான்கு குழந்தைகளை கொண்டு உள்ளனர். ஜெப் பெசோஸ்-ன் கல்லக்காதல் பெரும் சர்ச்சையாக மாறிய நிலையில் மெக்கென்சி ஸ்காட் விவாகரத்து செய்ய முடிவு செய்தார்.

ஜெஃப் பெசோஸ் மற்றும் மெக்கென்சி ஸ்காட் விவாகரத்தின் போது ஜெஃப் பெசோஸ் உலகின் மிகப்பெரிய பணக்காரர் ஆக இருந்தார். இவரின் விவாகரத்து மூலம் மெக்கென்சி ஸ்காட் 38 பில்லியன் டாலரை பெற்றார்.

 பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ்

பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ்

பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் விவாகரத்தின் விவரங்கள் முழுமையாக வெளியாகாத நிலையில் இருவரின் கூட்டு சொத்து மதிப்பாக 146 பில்லியன் டாலர் மதிப்பிடப்பட்டது.

சுமார் 27 வருட திருமண வாழ்க்கை என்பதால் இதில் கட்டாயம் 50 சதவீத தொகையை பெற்றுயிருக்க மெலிண்டா கேட்ஸ்-க்கு வாய்ப்பு உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Most expensive divorces of all time; Bill gates, jeff bezos gave huge price

Most expensive divorces of all time; Bill gates, jeff bezos gave huge price உலகிலேயே மிகவும் காஸ்ட்லியான விவாகரத்து இதுதான்..!
Story first published: Thursday, May 19, 2022, 22:58 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X