இந்திய ரீடைல் சந்தையின் கிங் எனச் செல்லமாக அழைக்கப்படும் டிமார்ட் நிறுவனத்தின் நிறுவனரும், மிகப்பெரிய பங்குச்சந்தை முதலீட்டாளருமான ராதாகிஷன் தமனி தனது வர்த்தகத்தை படிப்படியாக விரிவாக்கம் செய்து வரும் இதேவேளையில் அதிகப்படியான லாபத்தைப் பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் காரணத்தால் டிமார்ட் பிராண்டின் தாய் நிறுவனமான அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் பங்குகள் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது.
இந்த நிலையில் டிமார்ட் நிறுவனத்தின் நிறுவனர் ராதாகிஷன் தமனி இந்தியாவில் இதுவரையில் யாரும் வாங்கிடாத வகையில் அதிகப்படியான விலைக்கு ஒரு வீட்டை வாங்கியுள்ளார்.
ராதாகிஷன் தமனி மட்டும் அல்லாமல் 2021 முதல் இந்தியாவில் பல பணக்காரர்கள் தொழிலதிபர்கள் விலை உயர்ந்த வீட்டை வாங்கியுள்ளனர்.
ராதாகிஷன் தமனி
அவென்யூ சூப்பர்மார்ட்ஸின் (டிமார்ட்) நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ராதாகிஷன் தமனி ஏப்ரல் மாதம் இந்தியாவில் விலை உயர்ந்த வீட்டை வாங்கினார். மும்பையின் மலபார் ஹில் பகுதியில் அமைந்துள்ள இந்த வீடு கடந்த ஆண்டு ஏப்ரலில் ₹1,001 கோடிக்கு வாங்கப்பட்டது. 90 ஆண்டுகள் பழமையான இந்த வீடு 5,752 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ரவி மற்றும் நீல் ரஹேஜா
ரியல் எஸ்டேட் மேம்பாட்டு நிறுவனமான கே ரஹேஜா கார் ப்ரோமோட்டர்களான ரவி மற்றும் நீல் ரஹேஜா ஆகியோர் இந்தியாவில் இரண்டாவது விலையுயர்ந்த வீட்டை வாங்கியுள்ளனர். மும்பையின் ஆடம்பர பகுதியான வொர்லி பகுதியில் 66,811 சதுர அடியில் உள்ள மூன்று டூப்ளக்ஸ் அடுக்குமாடிக் குடியிருப்புகளை ₹427 கோடிக்கு ரவி மற்றும் நீல் ரஹேஜா குடும்பம் வாங்கியது.
ஜே.சி.சௌத்ரி
ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீஸின் நிர்வாக இயக்குநரும் நிறுவனருமான ஜே.சி.சௌத்ரி டெல்லியில் 150 கோடி ரூபாய்க்கு புதிய வீட்டை வாங்கினார். கடந்த ஆண்டு இந்தியாவில் விற்கப்பட்ட ஐந்தாவது விலை உயர்ந்த வீடு இதுவாகும்.
கிரிஸ் கோபாலகிருஷ்ணன்
இதேபோல் இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் கிரிஸ் கோபாலகிருஷ்ணன் கடந்த ஆண்டுப் பெங்களூருவில் 76 கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டை வாங்கினார்.
முக்கிய விற்பனை
இவர்களோடு ஜேகே பேப்பர்ஸ் நிறுவனம் டெல்லியில் 253 கோடி ரூபாய்க்கும், கன்ஷியம்பாய் தோலாகியா மும்பையில் 185 கோடி ரூபாய்க்கும், ஷைலேஷ் & நடாஷா டால்மியா மும்பையில் 125 கோடி ரூபாய்க்கும் சொந்த வீட்டை வாங்கியுள்ளனர்.
டாடா குழும சந்திரசேகரன்
டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் சந்திரசேகரன் இரண்டு மாதங்களுக்கு முன்பு மும்பையில் 98 கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டை வாங்கினார். இவரது வீட்டு முகேஷ் அம்பானி வீட்டிக்கு அருகில் அமைந்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ரிலையன்ஸ் ரீடைல்
ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தில் இயக்குநர் மனோஜ் மோடி, தனது குடும்பத்தினருடன் சேர்ந்து, கடந்த ஓராண்டில் ரூ.192 கோடி மதிப்புள்ள பல சொத்துக்களை வாங்கியுள்ளார்.
மனோஜ் மோடி குடும்பம்
அவரது மனைவி ஸ்மிதா மனோஜ் மோடி இந்த ஆண்டு ஜனவரியில் மலபார் ஹில்லில் 54.5 கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டையும், மனோஜ் மோடி 48.75 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தையும் வாங்கியுள்ளார். ஸ்மிதா மோடி மற்றும் அவரது மகள் பக்தி மோடி ஆகியோர் இணைந்து இந்த ஆண்டு மார்ச் மாதம் அதே பகுதியில் 89 கோடி ரூபாய்க்கு மற்றொரு வீட்டை வாங்கியுள்ளனர்.
சேத்தன் பகத்
இதேபோல் சமீபத்தில் எழுத்தாளர் சேத்தன் பகத் டெல்லியில் 11.6 கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை வாங்கினார். பம்பாய் மருத்துவமனையின் டாக்டர் அமிதா நேனேவும் மும்பையின் மலபார் ஹில் பகுதியில் 55 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை வாங்கினார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications