முகேஷ் அம்பானியின் மாஸ்டர் பிளான்.. லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களை கவர அதிரடி திட்டம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாட்டில் கொரோனா பரவி வரும் நிலையில், அனைத்து வகையான தொழில்துறையும் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளன.

 

ஆனால் இந்த நெருக்கடியான நேரத்திலும் கூட சில நிறுவனங்கள் பெரும் வளர்ச்சியினை கண்டுள்ளன.

அப்படி வளர்ச்சி கண்ட நிறுவனங்களில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், இந்த லாக்டவுன் காலத்திலும் 20 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை நிதியாக திரட்டியுள்ளது.

அமேசானுக்கு போட்டியாக உருவாகும் களம்

அமேசானுக்கு போட்டியாக உருவாகும் களம்

ஆசியாவின் பணக்காரரான முகேஷ் அம்பானி இப்போது ஷாப்பிங் களத்தில் இறங்கியுள்ளார். தற்போது பலத்த உள்ளூர் சலுகைகளை அளித்து விற்பனையை விரிவுபடுத்த திட்டமிட்டு வருவதாகவும் இதனை அறிந்தவர்கள் கூறியுள்ளனர். சொல்லப்போனால் முகேஷ் அம்பானி தனது ஈ-காமர்ஸ் தளத்தினை உருவாக்கி, அமேசான்.காம் இன்க் நிறுவனத்திற்கு எதிராக போட்டியிட முயன்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

இன்னும் பல பேச்சு வார்த்தைகள்

இன்னும் பல பேச்சு வார்த்தைகள்

அம்பானியின் எண்ணெய் வர்த்தகம், சில்லறை வர்த்தகம், தொலைத் தொடர்பு வர்த்தகத்தில் உள்ள, துறைகளின் கணிசமான பங்குகளை விற்பனை செய்து பெரும் முதலீடுகளை திரட்டியுள்ளார். இதற்கிடையில் இன்னும் பல கட்ட பேச்சு வார்த்தைகளும் நடந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதோடு Urban Ladder ஆன்லைன் பர்னிச்சர் விற்பனை, மற்றும் ஜிவாமே, ஒரு உள்ளாடை தயாரிப்பாளர் மற்றும் நெட்மேட்ஸ் மருந்து நிறுவனம் உள்ளடக்கிய பேச்சு வார்த்தைகள் இரகசியமாகவும் இருந்து வருகிறது.

போட்டியாளராக மாறும் ஜியோமார்ட்
 

போட்டியாளராக மாறும் ஜியோமார்ட்

63 வயதான ஒரு சில்லறை விற்பனையாளர் தனது விற்பனை தளத்தினை விரிவுபடுத்த முயல்கிறார். இது அமேசான் மற்றும் பல ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களுக்கும் ஒரு போட்டியாளராக ஜியோமார்ட் மாறலாம் என்றும் கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களில் பேஸ்புக் உள்ளிட்ட பல வெளிநாட்டு நிறுவனங்கள் ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோவில் முதலீடு செய்துள்ளன.

யாரெல்லாம் முதலீடு

யாரெல்லாம் முதலீடு

பேஸ்புக், ஜெனரல் அட்லாண்டிக், விஸ்டா ஈக்விட்டி பார்ட்னர்ஸ், அபுதாபியின் முபதாலா, சில்வர் லேக், பிஐஎஃப், இன்டெல் கேப்பிட்டல், தற்போது இந்த வரிசையில் குவால்காம் வென்சர்ஸ் நிறுவனமும் முதலீடு செய்ய உள்ளது. ஆக மொத்தத்தில் ஜியோவின் 25.24% பங்குகளை விற்பனை செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. அதன் மூலம் 1,18,318.45 கோடி ரூபாய் நிதியினையும் திரட்டியுள்ளது ஜியோ.

ரிலையன்ஸின் உரிமை பங்கு வெளியீடு

ரிலையன்ஸின் உரிமை பங்கு வெளியீடு

இத்தகைய முதலீடுகளுடன், ரிலையன்ஸ் நிறுவனம் உரிமை பங்கு வெளியீட்டின் மூலம் 53,124 கோடி ரூபாய் நிதியினை திரட்டியது. கடந்த மார்ச் நிலவரப்படி இந்த நிறுவனத்தின் கடன் மதிப்பு 1.61 டிரில்லியன் ரூபாயாக இருந்தது. இந்த நிலையில், ரிலையன்ஸ் நிறுவனம் முதலீடு மற்றும் உரிமை பங்கு வெளியீட்டு மூலம் திரட்டிய நிதியின் மூலம், தற்போது கடன் இல்லா நிறுவனமாகவும் மாறியுள்ளது. இந்த நிலையில் தான் ரிலையன்ஸ் நிறுவனம் இப்படி ஒரு அசுர வளர்ச்சியினை கண்டுள்ளது.

சில்லறை வர்த்தகத்தினை விரிவுபடுத்தல்

சில்லறை வர்த்தகத்தினை விரிவுபடுத்தல்

கடந்த ஆண்டின் பிற்பாதியில் அம்பானியின் தனது ஷாப்பிங் போர்ட்டல் ஜியோமாட்டினை வெளியிட்டார். இது இப்போது சுமார் 200 நகரங்கள் மற்றும் சிட்டிகளில் தனது சேவையினை வழங்கி வருகின்றது. கொரோனா வைரஸ் தொற்று நோய் விநியோகச் சங்கிலிகளை சீர்குலைத்து, வழக்கமான சில்லறை விற்பனையாளர்களிடமிருந்து விற்பனையை தணித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Mukesh ambani and amazon, flipkarts are chasing billion consumers

Reliance retail business.. Mukesh ambani and amazon, flipkarts are chasing billion consumers, particularly reliance plans to boost up business in retail sector.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X