இந்தியாவை விட்டு வெளியேறும் முகேஷ் அம்பானி.. உண்மை என்ன..?!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் இருந்து பல பணக்காரர்கள் வெளிநாடுகளுக்குத் தங்களது வீட்டையும் அலுவலகத்தையும் மாற்றி வருகிறார்கள், இன்னும் சிலர் கடனை வாங்கிவிட்டு இந்தியாவை விட்டு தப்பித்து வெளிநாடுகளுக்கு ஓடிவிடுகின்றனர். இவ்விரண்டுக்கும் பல பேர் உதாரணமாகச் சொல்ல முடியும் இந்தியாவின் வேக்சின் கிங் எனக் கூறப்படும் ஆதார் பூனாவல்லா தனது வீட்டைப் பிரிட்டன் நாட்டுக்கு மாற்றினார்.

 

இந்த வரிசையில் தற்போது இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி தனது குடும்பத்துடன் வெளிநாட்டுக்குச் செல்கிறார் என்ற செய்தி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

 முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி தனது குடும்பத்துடன் உலகிலேயே மிகவும் காஸ்ட்லியான வீடான மும்பை ஆன்டாலியாவில் வசித்து வரும் நிலையில், தற்போது லண்டனில் வசிக்க உள்ளதாக மிட் டே பத்திரிக்கை தெரிவித்துள்ளது. இதற்குச் சான்றாகப் பல முக்கியமான விஷயங்களை முன்வைக்கப்படுகிறது.

 ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இந்தியாவில் பல லட்சம் கோடி ரூபாய் வர்த்தகத்தை வைத்துள்ள போதிலும் வருடத்தில் பாதி நேரம் மும்பையிலும், பாதி நேரம் லண்டனிலும் தங்க முடிவு செய்துள்ளார். சமீபத்தில் மும்பையில் தன் வீட்டில் மூலம் வெடிகுண்டு உடன் நிறுத்தப்பட்ட கார் சம்பவத்திற்குப் பின்பு முகேஷ் அம்பானியின் இந்த மன மாற்றம் ஏற்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

 அம்பானி குடும்பம்
 

அம்பானி குடும்பம்

இதேபோல் கொரோனா காலத்தில் அதிக நேரம் மும்பை ஆன்டிலியா வீட்டிலேயே தங்கியிருந்த காரணத்தாலும், High rise கட்டிடத்தில் தங்கியிருப்பது போர் அடிவிட்ட காரணத்தாலும் தரை தளத்தில் இருக்கும் வீட்டுக்குச் செல்ல அம்பானியின் குடும்பம் விரும்புவதாகவும் கூறப்படுகிறது. எது எப்படியிருந்தாலும் அம்பானி குடும்பம் இந்தியாவை விட்டு வெளியேறுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

 லண்டன் மாளிகை

லண்டன் மாளிகை

சமீபத்தில் முகேஷ் அம்பானி பிரிட்டன் நாட்டில் இருக்கும் பக்கிங்ஹாம்ஷயர் பகுதியில் 300 ஏக்கர் பரப்பளவில் இருக்கும் ஸ்டோன் பார்க்-ஐ 592 கோடி ரூபாய்க்கு வாங்கினார். இந்தக் கட்டிடத்தில் 49 பிரம்மாண்ட பெட்ரூம் உடன் பல வசதிகள் உள்ளது. இந்த வீட்டிற்குத் தான் தற்போது முகேஷ் அம்பானி தனது குடும்பத்துடன் செல்ல உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 300 ஏக்கர் வீடு

300 ஏக்கர் வீடு

மும்பையில் இருக்கும் ஆன்டிலியா வீட்டின் மொத்த அளவு 4 லட்சம் சதுரடி ஆனால் இது 300 ஏக்கர், அது High rise கட்டிடம் இது தரைதளம், இது இந்தியா அது லண்டன். பக்கிங்ஹாம்ஷயர் ஸ்டோன் பார்க் இதற்கு முன்பு ஆடம்பர ஹோட்டல் ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

 பக்கிங்ஹாம்ஷயர் ஸ்டோன் பார்க்

பக்கிங்ஹாம்ஷயர் ஸ்டோன் பார்க்

சில வாரங்களுக்கு முன்பாகவே பக்கிங்ஹாம்ஷயர் ஸ்டோன் பார்க் கட்டிடத்தில் state-of-the-art மெடிக்கல் சேவை தளத்தை அமைக்கப்பட்டது, அதுமட்டும் அல்லாமல் மும்பை ஆன்டிலியா-வில் இருப்பது போல் பிரம்மாண்டமான கோவிலும் கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 தீபாவளி பண்டிகை

தீபாவளி பண்டிகை

பொதுவாக முகேஷ் அம்பானி தீபாவளி பண்டிகையைத் தனது குடும்ப உறுப்பினர்களோடு மும்பை ஆன்டிலியாவில் தான் கொண்டாடுவார், ஆனால் முதல் முறையாக முதல் வெளிநாட்டில் தீபாவளியை பக்கிங்ஹாம்ஷயர் ஸ்டோன் பார்க்-ல் கொண்டாடியுள்ளார் முகேஷ் அம்பானி.

 ஏப்ரல் மாதம் முதல்

ஏப்ரல் மாதம் முதல்

இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவல்கள் படி வருகிற ஏப்ரல் மாதத்தில் குடியேற உள்ளதாகத் தெரிகிறது. இதுகுறித்து எவ்விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ரிலையன்ஸ் மற்றும் முகேஷ் அம்பானி தரப்பில் இருந்து தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 மினி ஹாஸ்பிட்டல்

மினி ஹாஸ்பிட்டல்

பிரிட்டன் நாட்டில் மருத்துவச் சேவை சிறப்பாக இருக்கும் வேளையிலும் முகேஷ் அம்பானி தனது குடும்பத்திற்காகத் தனிப்பட்ட அதிநவீன வசதிகள் கொண்ட மினி ஹாஸ்பிட்டல் உருவாக்கியுள்ளார். ஸ்டோன் பார்க் சிட்டிக்குத் தொலைவில் இருக்கும் காரணத்தால் இந்த முடிவை எடுத்துள்ளார் முகேஷ் அம்பானி.

 கோவில் சிறப்புகள்

கோவில் சிறப்புகள்

இதேபோல் ஸ்டான் பார்க்-ல் புதிதாக கட்டப்பட்டு வரும் கோவிலுக்கு ராஜஸ்தானில் இருந்து வெள்ளை மார்பில் கற்களில் செய்யப்பட்ட விநாயகர், ராதா கிருஷ்ணா மற்றும் ஹனுமான் ஆகிய கடவுள்களின் சிலைகள் செய்யப்பட்டுப் பதிக்கப்பட உள்ளது.

 இரண்டு பூசாரிகள், மருத்துவர்

இரண்டு பூசாரிகள், மருத்துவர்

இதுமட்டும் அல்லாமல் இரண்டு பூசாரிகள் நிரந்தரமாக ஸ்டான் பார்க் கட்டிடத்தில் தங்க வைக்கவும் முடிவுகள் எடுக்கப்பட்டு உள்ளது. இதேபோல் மினி ஹாஸ்பிட்டல்-க்குத் தலைமை மருத்துவராகப் பிரிட்டன் நாட்டின் முன்னணி மருத்துவர் ஒருவரைத் தலைமை மருத்துவராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Mukesh Ambani And family shifting home from Mumbai antilia to London Stone Park

Mukesh Ambani And family shifting home from Mumbai antilia to London Stone Park. Mukesh Ambani made massice arrangements for home set up in Luxury hotel in Buckinghamshire Stoke Park for his family. From Mini hospital to large temple with marbel statue were step up. Is Mukesh Ambani Moving to UK | Mukesh Ambani Moving to London Reason| Mukesh Ambani Moved to London | Mukesh Ambani London House
Story first published: Friday, November 5, 2021, 12:03 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X