முகேஷ் அம்பானியை நெருங்கும் அதானி.. ஜஸ்ட் மிஸ் தான்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் மாபெரும் பணக்காரர்களான முகேஷ் அம்பானியும், கெளதம் அதானியும் போட்டி போட்டுக் கொண்டு சொத்து மதிப்பில் முன்னேறி வருகின்றனர்.

 

அதிலும் கெளதம் அதானியின் சொத்து மதிப்பானது கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து மிக வேகமாக அதிகரித்து கொண்டு வருகின்றது.

7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. அகவிலைப்படி 3% உயர்த்த அரசு ஒப்புதல்..!

தற்போது முகேஷ் அம்பானி, கெளதம் அதானி ஆகிய இருவரின் சொத்து மதிப்பும் 100 பில்லியன் டாலர்களுக்கு மேலாக அதிகரித்துள்ளது.

 வேறுபாடு எவ்வளவு?

வேறுபாடு எவ்வளவு?

எனினும் சர்வதேச தரவரிசையில் ஒரே மாதிரியாக தான் இருந்து வருகின்றது. எனினும் இவ்விரு பில்லியனர்களுக்கும் இடையேயான வேறுபாடு என்பது தொடர்ந்து குறைந்து கொண்டே தான் வருகின்றது. தற்போது இருவருக்கும் இடையேயான வித்தியாசம் 200 மில்லியன் மட்டுமே குறைந்துள்ளது.

 உலகின் 10, 11வது பணக்காரர்கள்

உலகின் 10, 11வது பணக்காரர்கள்

மொத்தத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக தலைவர் முகேஷ் அம்பானி, அதானி குழுமத்தின் தலைவர் கெளதம் அதானியின் சொத்து மதிப்பு 100 பில்லியன் டாலர்களை தாண்டியுள்ளது. பில்லியனர்கள் லிஸ்டில் முகேஷ் அம்பானி உலகின் 10வது பணக்காரராகவும், கெளதம் அதானி 11வது இடத்திலும் உள்ளனர்.

சொத்து மதிப்பு?
 

சொத்து மதிப்பு?

மார்ச் 31 நிலவரப்படி அதானியின் சொத்து மதிப்பு 100.1 பில்லியன் டாலராகும். இதே அம்பானியின் சொத்து மதிப்பு 100.3 பில்லியன் டாலராகும்.இவர்கள் இருவருமே ஆசியாவில் மிக பெரிய பணக்காரர்கள். இதே ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் அறிக்கையின் படி, அம்பானியின் சொத்து மதிப்பு 99.8 பில்லியன் டாலராகும். இதே அதானியின் சொத்து மதிப்பு 95.5 பில்லியன் டாலராகும்.

அம்பானியை முந்திய அதானி?

அம்பானியை முந்திய அதானி?

கடந்த மாதம் அதானி, அம்பானியை முந்திக் கொண்டு ஆசியாவிலும், இந்தியாவிலும் முதல் பணக்காரர் என்ற இடத்தினை பிடித்தார்.

இந்த பணக்காரர்கள் பட்டியலில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மற்றும் டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் , அமேசான் நிறுவனத்தின் ஜெஃப் பெசோஸ், லூயிஸ் உய்ட்டன் குழுமத்தின் பெர்னார்ட் அர்னால்ட், மைக்ரோசாப்ட்டின் பில்கேட்ஸ், பெர்க்ஷயர் ஹாத்வேயின் வாரன் பஃபே, கூகுளின் லாரி எலிசனின் நிறுவனர் ஸ்டீவ் பால்மர் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

mukesh ambani and gautam adani are now crossed more than $100 billion - mark

mukesh ambani and gautam adani are now crossed more than $100 billion - mark/முகேஷ் அம்பானியை நெருங்கும் அதானி.. ஜஸ்ட் மிஸ் தான்..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X