1 இல்ல, 2 இல்ல மொத்தம் 3.. ராஜ வாழ்க்கை வாழும் முகேஷ் அம்பானி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி, இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகச் சாம்ராஜ்ஜியமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்குத் தலைமை தாங்குவதில் மட்டுமல்ல ஆடம்பர வாழ்க்கை வாழ்வதிலும் புகழ்பெற்றவர்.

 

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானி அதி ஆடம்பரமான வாழ்க்கைக்குப் பெயர் பெற்றவர் என்பது அவருடை வீட்டை பார்த்தே சொல்லிவிடலாம். இவருடைய 'ஆன்டிலியா' எனப் பெயர் கொண்ட ஆடம்பர வீடு தான் உலகிலேயே மிகவும் அதிக மதிப்புடைய வீடு.

ஆனால் முகேஷ் அம்பானி-க்கு ஆடம்பர வீட்டை காட்டிலும் கார்கள் மீதான மோசம் மிகவும் அதிகம். எந்த ஆடம்பர கார் வந்தாலும் ஒன்றுக்கு மூன்றாக வாங்கும் வழக்கத்தைக் கொண்டவர்.

எப்போதும் BMW கார்களில் பயணமும் செய்யும் முகேஷ் அம்பானி சமீபத்தில் ரோல்ஸ் ராய்ஸ் மற்றும் பென்டலி போன்ற ஆடம்பர கார்களின் அதிகம் தென்படுகிறார். இந்நிலையில் முகேஷ் அம்பானி புதிதாக ஒரு காரை வாங்கியுள்ளார்.

முகேஷ் அம்பானி-யின் 600 ஏக்கர் மாந்தோப்பு.. ஆசியாவிலேயே இதுதான் டாப்பு..!முகேஷ் அம்பானி-யின் 600 ஏக்கர் மாந்தோப்பு.. ஆசியாவிலேயே இதுதான் டாப்பு..!

முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானியின் 27 மாடி கொண்ட ஆடம்பர ஆன்டிலியா வீட்டில் பல மாடி கார் பார்க்கிங் மட்டுமே, அதிலும் குறிப்பாக அவை அனைத்தும் முகேஷ் அம்பானிக்கும் அவரது மனைவி மற்றும் பிள்ளைகளுக்குப் பிடித்த ஆடம்பர கார்களுக்கானது மட்டுமே. மீத முள்ள கார்கள் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனங்கள் தொழிற்சாலைகளின் கார் பார்க்கிங்-ல் உள்ளது.

 பென்ட்லி பெண்டேகா

பென்ட்லி பெண்டேகா

இந்நிலையில் முகேஷ் அம்பானி சமீபத்தில் வெள்ளை நிற பென்ட்லி பெண்டேகா V8 கார்-ஐ புதிதாக வாங்கியுள்ளார். முகேஷ் அம்பானியிடம் ஏற்கனவே இரண்டு பென்ட்லி பெண்டேகா கார் இருக்கும் நிலையில் இது 3வது பென்ட்லி பெண்டேகா கார் என்பது குறிப்பிடத்தக்கது.

 3வது பென்ட்லி பெண்டேகா
 

3வது பென்ட்லி பெண்டேகா

முகேஷ் அம்பானி ஏற்கனவே பிரவுன் மற்றும் ரேசிங் கிரீன் கலரில் பென்ட்லி பெண்டேகா கார்களை வைத்துள்ள நிலையில் தற்போது வெள்ளை நிறத்தில் ஒரு காரை வாங்கியுள்ளார். புதிதாக வாங்கியுள்ள பென்ட்லி கார் 2020ல் அறிமுகம் செய்யப்பட்டு 2021 எடிஷன் காப் என்பது குறிப்பிடத்தக்கது.

4.10 கோடி ரூபாய் விலை

4.10 கோடி ரூபாய் விலை

முகேஷ் அம்பானி வாங்கிய பென்ட்லி பெண்டேகா வாங்கிய கார் டாப் எண்ட் மாடல் என்பதால் இதன் விலை 4.10 கோடி ரூபாய். இந்தக் கார் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 7.6 கிலோமீட்டர் மைலேஜ் அளிக்கக் கூடிய 3996சிசி திறன் அளிக்கும் சக்திவாய்ந்த இன்ஜின் கொண்ட கார்.

W12 பென்ட்லி பெண்டேகா கார்

W12 பென்ட்லி பெண்டேகா கார்

மேலும் முகேஷ் அம்பானியிடம் W12 இன்ஜின் கொண்ட பென்ட்லி பெண்டேகா கார் உள்ளது. இதில் என்ன ஸ்பெஷல் என்றால் இந்தியாவில் இருக்கும் ஒரேயொரு W12 கார் என்பதைத் தாண்டி இந்தக் காரில் 1 கோடி ரூபாய் மதிப்புடைய Breitling Mulliner Tourbillion வாட்ச் உள்ளது.

இந்தியாவிலேயே காஸ்ட்லியான எஸ்யூவி கார் வைத்திருக்கும் #முகேஷ்அம்பானி.. விலை என்ன தெரியுமா..?! #HBDஇந்தியாவிலேயே காஸ்ட்லியான எஸ்யூவி கார் வைத்திருக்கும் #முகேஷ்அம்பானி.. விலை என்ன தெரியுமா..?! #HBD

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Mukesh Ambani brought 3rd Bentley Bentayga V8 at 4.10 crore price; New addition in Ambani car collection

Mukesh Ambani brought 3rd Bentley Bentayga V8 at 4.10 crore price; New addition in Ambani car collection 1 இல்ல, 2 இல்ல மொத்தம் 3.. ராஜ வாழ்க்கை வாழும் முகேஷ் அம்பானி..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X