இந்தியாவிலேயே காஸ்ட்லியான எஸ்யூவி கார் வைத்திருக்கும் #முகேஷ்அம்பானி.. விலை என்ன தெரியுமா..?! #HBD

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் ஆகவும், மிகப்பெரிய தொழிலதிபராகவும் விளங்கும் முகேஷ் அம்பானிக்கு ஆடம்பர கார்கள் மீது எப்போதுமே விருப்பம் அதிகம், இதனாலேயே தனது 27 மாடி சொகுசு வீட்டில் பல அடுக்குகளுக்குக் கார் பார்க்கிங் மட்டுமே வைத்துள்ளார். அந்த அளவிற்கு அதிகமான கார்களை வைத்துள்ளனர்.

 

முகேஷ் அம்பானி மட்டும் அல்லாமல் அவரது மகன்களும் கார் மீது அதிகம் ஆர்வம் காட்டுபவர்களாக இருக்கும் காரணத்தால், இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பாக டெஸ்லா காரை நேரடியாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்தது அம்பானி குடும்பம்.

இந்நிலையில் தற்போது அம்பானி வீட்டின் கார் பார்க்கிங்-ல் புதிதாக ஒரு ஆடம்பர கார் சேர்ந்துள்ளது. இந்தக் கார் தான் இந்தியாவிலேயே மிகவும் காஸ்ட்லியான எஸ்யூவி காராகும். ஏப்ரல் 19ஆம் தேதி இன்று முகேஷ் அம்பானி 65வது பிறந்தநாள்-ஐ கொண்டாடுகிறார்.

மேற்கத்திய நாடுகளுக்கு சரியான பதிலடி கொடுத்த இந்தியா.. !

முகேஷ் அம்பானி கார் கலெக்ஷன்

முகேஷ் அம்பானி கார் கலெக்ஷன்

மெக்லாரன், காடிலாக், பென்ட்லி, மெர்சிடிஸ்-மேபேக், புல்லட் நுழையாத Mercedes-Maybach S600 கார்டு, ஆஸ்டன் மார்ட்டின், இன்னும் பல முன்னணி பிராண்டுகளின் கார்களை வைத்துள்ள முகேஷ் அம்பானி, சமீபத்தில் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரை வாங்கியுள்ளார்.

3வது ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன்

3வது ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன்

ஏர்கனவே முகேஷ் அம்பானி குடும்பம் 2 ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் கார்களை வைத்துள்ள நிலையில் தற்போது 3வதாகப் புதிய ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரை வாங்கியுள்ளது. இந்தக் கார் தான் இந்தியாவிலேயே மிகவும் காஸ்ட்லியான காராக விளங்குகிறது.

விலை
 

விலை

முகேஷ் அம்பானி வாங்கியுள்ள ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரின் ஆரம்ப விலை 6.95 கோடி ரூபாய், சில குறிப்பட்ட சேவை நிறம் ஆகியவற்றுடன் இருக்கும் கார் 8.2 கோடி ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகிறது. இதே நேரத்தில் ரோல்ஸ் ராய்ஸ் தனது வாடிக்கையாளர் விருப்பத்தின் பெயரில் customise செய்கிறது, ஆனால் அதற்குக் கூடுதலாகப் பணத்தைக் கொடுக்க வேண்டும்.

ஸ்பெஷல் கலர்

ஸ்பெஷல் கலர்

அப்படி முகேஷ் அம்பானி customise செய்து வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காரின் மதிப்பு 13.14 கோடி ரூபாய், இந்தியாவில் இதுவரையில் இவ்வளவு மதிப்புடைய காரை யாரும் இதுவரை வாங்கவில்லை. இப்படி இந்தக் காரில் என்ன ஸ்பெஷல்.

13.14 கோடி ரூபாய்

13.14 கோடி ரூபாய்

முகேஷ் அம்பானி வாங்கியது அல்டரா ப்ரீமியம் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் கார், இந்தக் கார் Tuscan Sun நிறத்தில் இருக்க வேண்டும் என அம்பானி விரும்பிய காரணத்தால் ரோல்ஸ் ராய்ஸ் இதற்காகத் தனியாகப் பணியாற்றியுள்ளது. இதனாலேயே இந்தக் காரின் விலை 13.14 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

வரி

வரி

மேலும் இந்தக் கார் இந்தியாவிற்குக் கொண்டு வர 20 லட்சம் வரி மற்றும் 40000 ரூபாய் சாலை பாதுகாப்பு வரியை செலுத்தியுள்ளார். இது மட்டும் அல்லாமல் இந்தக் காரின் எண் 0001 ஆக இருக்க வேண்டும் என்று முகேஷ் அம்பானி விரும்பினார். பொதுவாக ஆடம்பர கார்களுக்கு VIP எண் பெற 4 லட்சம் செலவாகும்.

VIP எண்

VIP எண்

ஆனால் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் (RTO) 0001 எண் கொண்ட சீரியஸ் அனைத்தும் முடிவடைந்த நிலையில், புதிதாக ஒரு சீரியஸ் உருவாக்கப்பட்டு 0001 என்பதைப் பெற்றுள்ளார். இதற்காகச் சுமார் 12 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இணடஸ்ட்ரீஸ்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Mukesh Ambani buys India’s most expensive car, guess the car

Mukesh Ambani buys India’s most expensive car, guess the car இந்தியாவிலேயே காஸ்ட்லியான எஸ்யூவி கார் வைத்திருக்கும் முகேஷ் அம்பானி.. விலை என்ன தெரியுமா..?!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X