சிங்கப்பூர்-க்கு பறந்த முகேஷ் அம்பானி.. என்ன காரணம்..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆசியாவின் 2வது பெரும் பணக்காரராக இருக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி சமீபத்தில் டெலிகாம் மற்றும் ரீடைல் வர்த்தகத்தைத் தனது மூத்த பிள்ளைகளான ஆகாஷ் அம்பானி மற்றும் ஈஷா அம்பானியின் பொறுப்பில் விட்ட நிலையில் பல முக்கியமான மாற்றங்கள் நடந்து வருகிறது.

 

முகேஷ் அம்பானி குடும்பத்தில் நீண்ட காலமாகச் சொத்து பிரித்தல் குறித்துப் பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், இதன் முதல் படியாகப் பார்க்கப்படுவது வர்த்தகத்தைத் தனது 3 பிள்ளைகள் மத்தியில் பிரித்திருப்பது தான்.

இந்த நிலையில் அடுத்தகட்டமாக முகேஷ் அம்பானி மற்ற சொத்துக்களை முறையாக நிர்வாகம் செய்யவும், பிள்ளைகளுக்கு மத்தியில் பிரிக்கும் பணிகளைத் துவங்கியுள்ளார்.

இதற்காகச் சிங்கப்பூர்-க்குப் பறந்துள்ளார் முகேஷ் அம்பானி.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவரான முகேஷ் அம்பானி சிங்கப்பூரில் குடும்ப அலுவலகத்தை அமைக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தக் குடும்ப அலுவலகத்தை நிர்வாகம் செய்யவும் நடத்தவும் முகேஷ் அம்பானி சிறப்பு அதிகாரிகளைத் தேர்வு செய்துள்ளதாகவும், இது யார் என்பது மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

சிங்கப்பூர்

சிங்கப்பூர்

சிங்கப்பூரில் ஒரு நிறுவனத்தைத் துவங்க வேண்டும் என்றால் எந்தத் துறையில் துவங்கப்படுகிறது என்பதைக் குறிப்பிட வேண்டும், அப்படி முகேஷ் அம்பானி தனது குடும்ப அலுவலகத்தைச் சிங்கப்பூரில் நியமிக்கத் தேர்வு செய்த துறை ரியல் எஸ்டேட் எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத தகவல் வெளியாகியுள்ளது.

குடும்ப அலுவலகம்
 

குடும்ப அலுவலகம்

சமீபத்தில் ஹெட்ஜ் பண்ட் பில்லியனரான ரே ராடியோ, கூகுள் நிறுவனர் செர்ஜி பிரின் ஆகியோர் சிங்கப்பூரில் குடும்ப அலுவலகத்தை அமைத்த நிலையில் தற்போது முகேஷ் அம்பானி இப்பட்டியலில் சேர்ந்துள்ளார். மேலும் பல பணக்கார குடும்பங்கள் அதிகளவில் சிங்கப்பூரில் குடும்ப அலுவலகத்தை அமைத்து வருகிறது.

குறைவான வரி

குறைவான வரி

சிங்கப்பூரில் குறைவான வரி மற்றும் பாதுகாப்பு மிகவும் அதிகமாக இருக்கும் காரணத்தால் பணக்காரர்கள் தங்களது குடும்ப அலுவலகத்தைப் பிற நாடுகளைக் காட்டிலும் சிங்கப்பூரில் அமைக்க அதிகப்படியாக விரும்புகின்றனர். 2021 முடிவில் மட்டும் சுமார் 700 குடும்ப அலுவலகங்கள் சிங்கப்பூரில் உள்ளதாக மானிட்டரி அத்தாரிட்டி ஆப் சிங்கப்பூர் கணித்துள்ளது.

முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி

சிங்கப்பூரில் முகேஷ் அம்பானி தனது குடும்ப அலுவலகத்தை அமைப்பது மூலம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வர்த்தகத்தை உலக நாடுகளுக்குக் கொண்டு செல்வது மட்டும் அல்லாமல் இந்தியாவை விட்டு வெளிநாடுகளில் அதிகப்படியான சொத்துக்களை மிகவும் எளிதாக வாங்க முடியும்.

சர்வதேசமயமாக்கல்

சர்வதேசமயமாக்கல்

2021ல் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாகக் குழுவில் சவுதி ஆராம்கோ தலைவரை நியமிக்கும் போதே இது தான் சர்வதேசமயமாக்கலின் ஆரம்பம் என அறிவிக்கப்பட்டது. அடுத்த ஒரு வருடத்தில் இந்த அலுவலகம் முழுமையாக இயங்க உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Mukesh Ambani choose Singapore for new family office to bigger international plan

reliance industries head and Asia's second richest man Mukesh Ambani choose Singapore for new family office to bigger international plan
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X