20 வருடம்.. அசைக்க முடியாத வளர்ச்சி.. முகேஷ் அம்பானி சாதித்தது என்ன..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெக்ஸ்டைல் டூ டெலிகாம் ஆயில் டூ நியூ எனர்ஜி எனப் பல துறையில் இந்தியா முழுவதும் வர்த்தகம் செய்து வரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக முகேஷ் அம்பானி தலைமையேற்று 20 ஆண்டுகள் முழுமையாக நிறைவடைந்துள்ளது.

2002 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முகேஷ் அம்பானியின் தந்தையும் ரிலையன்ஸ் குழுமத்தின் நிறுவனருமான திருபாய் அம்பானியின் மரணத்திற்குப் பிறகு தனது இளைய சகோதரர்ரான அனில் அம்பானி உடனான பெரும் பிரச்சனைகள், வாக்குவாதத்திற்குப் பின்பு அவர்களுடைய தாய் கோகிலாபென் அம்பானி தலைமையில் ரிலையன்ஸ் குழுமம் இரண்டாக உடைந்தது.

இதில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ஐ முகேஷ் அம்பானியும், அனில் திருபாய் அம்பானி குரூப்-ஐ அனில் அம்பானி கைப்பற்றினார்கள்.

சாமானியர்கள் எதையும் சாதிக்கலாம்.. சாதித்து காட்டிய திருபாய் அம்பானியின் வியப்பூட்டும் கதை..!சாமானியர்கள் எதையும் சாதிக்கலாம்.. சாதித்து காட்டிய திருபாய் அம்பானியின் வியப்பூட்டும் கதை..!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் முகேஷ் அம்பானி நிர்வாகத்தைக் கையில் எடுத்த 20 வருடத்தில் மாபெரும் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. 2002ல் இக் குழுமத்தின் சந்தை மதிப்பு வெறும் 41,989 கோடி ரூபாய் மட்டுமே. இந்த நிலையில் இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு கடந்த 20 ஆண்டுகளில் ஒவ்வொரு வருடமும் சராசரியாக 20.6 சதவீதம் வளர்ச்சி அடிப்படையில் மார்ச் 2022ல் 17,81,841 கோடி ரூபாய் அளவிற்கு வளர்ந்துள்ளது.

வருவாய்

வருவாய்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வருவாய் 2001-02 நிதியாண்டில் வெறும் 45,411 கோடி ரூபாயாக இருந்த நிலையில் 2021-22 நிதியாண்டில் 7,92,756 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் வருவாய் வளர்ச்சியில் வருடாந்திர அடிப்படையில் 15.4 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

வேகமான வளர்ச்சி

வேகமான வளர்ச்சி

இதேபோல் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் நிகர லாபம், ஏற்றுமதி, மொத்த சொத்துக்கள் மற்றும் நிகர மதிப்பு ஆகிய அனைத்தும் கடந்த 20 வருட முகேஷ் அம்பானி ஆட்சி காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அதிலும் முக்கியமாக முகேஷ் அம்பானி வாரிசுகள் நிர்வாகப் பொறுப்புக்கு வந்த பின்பு வேகமாக வளர்ச்சியை ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியம் பார்த்து வருகிறது.

நிகர லாபம்

நிகர லாபம்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிகர லாபம் 2001-02 நிதியாண்டில் ரூ. 3,280 கோடியிலிருந்து 2021-22 நிதியாண்டில் ரூ.67,845 கோடியாக உயர்ந்துள்ளது. மேலும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஏற்றுமதி 2001-02 நிதியாண்டில் 11,200 கோடி ரூபாயில் இருந்து 2021-22 நிதியாண்டில் 2,54,970 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

மொத்த சொத்து மதிப்பு

மொத்த சொத்து மதிப்பு

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் மொத்த சொத்து மதிப்பு மார்ச் 2002 இல் 48,987 கோடி ரூபாயிலிருந்து மார்ச் 2022 இல் ரூ 1,49,665 கோடியாக உயர்ந்துள்ளது. வருடாந்திர அடிப்படையில் 18.7 சதவீத அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது.

20 வருட வளர்ச்சி

20 வருட வளர்ச்சி

இந்தத் தாறுமாறான வளர்ச்சியின் மூலம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழும இந்த 20 வருடத்தில் முதலீட்டாளர்கள் சொத்து மதிப்பை சுமார் ரூ. 17.4 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு அதிகரித்துள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 87,000 கோடி ரூபாய்.

புதிய வர்த்தகங்கள்

புதிய வர்த்தகங்கள்

முகேஷ் அம்பானி-யின் தலைமையின் கீழ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமம் 2006 இல் ரிலையன்ஸ் ரீடைல் பிரிவையும், ரிலையன்ஸ் ஜியோ-வை 2016 இல் தொடங்கியது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் exploration and production வணிகம் 2002 இன் பிற்பகுதியில் முதல் ஹைட்ரோகார்பன் இருப்புக் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் உற்பத்தி 2009 இல் தொடங்கியது.

ரிலையன்ஸ் பவுண்டேஷன்

ரிலையன்ஸ் பவுண்டேஷன்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தொண்டு நிறுவனமான ரிலையன்ஸ் பவுண்டேஷன் 2010 இல் நிதா அம்பானியின் தலைமையில் துவங்கப்பட்டது. ரிலையன்ஸ் சமீபத்தில் ஆர்மானி, ஜிஏஎஸ் மற்றும் டீசல் போன்ற உலகளாவிய ஃபேஷன் பிராண்டுகளைக் கூட்டாணி வைத்தது.

கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு

கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு

கச்சா எண்ணெய் சுத்திகரிப்பை முக்கியமான வர்த்தகமாகக் கொண்டு இயங்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தை முகேஷ் அம்பானி மற்றும் அவரது வாரிசுகள் இணைந்து தற்போது டெலிகாம், டிஜிட்டல், ரீடைல், நியூ எனர்ஜி பிரிவில் வழிநடத்தி வருகிறது. லாப அளவில் O2C பிரிவு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தில் ஆதிக்கம் செலுத்தினாலும் விரைவில் இந்த நிலை மாறும். இதற்கு முகேஷ் அம்பானி வாரிசுகள் முக்கியப் பங்கு வகிப்பார்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Mukesh Ambani: Completed 20 years of successful legacy as Reliance Industries Chairman and MD

Mukesh Ambani: Completed 20 years of successful legacy as Reliance Industries Chairman and MD
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X