முகேஷ் அம்பானி-யின் DNA loop திட்டம்.. மாட்டிக்கிட்டா வெளியே வர முடியாது.. உஷார் மக்களே..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த டிஜிட்டல் உலகில் மக்களின் டேட்டா தான் மிகப்பெரிய வளம், பணம் ஈட்டும் முக்கியக் கருவியாக உள்ளது அனைவருக்கும் தெரியும்.

ஈகாமர்ஸ் தளத்தில் நீங்கள் தேடிய பொருளை கூகுள் பிற இணையதளத்தில் காட்டுவது முதல், சோமேட்டோ நேரத்திற்குத் தகுந்தார் போல் உங்களுக்குப் பிடித்தமான உணவுகளை suggest செய்வது வரையில் டேட்டா மட்டுமே.

இந்த டேட்டா-வை சரியாகப் பயன்படுத்தினால் எந்தொரு நிறுவனமும் அதிகப்படியான வர்த்தகம், வருவாய் பெற முடியும். இந்தப் பாதையில் உச்சக்கட்டம் தான் DNA loop, இதை அடையவே தற்போது முகேஷ் அம்பானி திட்டமிட்டு வருகிறார்.

உலகில் அதிகம் படித்த மக்கள் வசிக்கும் நாடுகள் எது.. இந்தியாவின் நிலை எப்படி? உலகில் அதிகம் படித்த மக்கள் வசிக்கும் நாடுகள் எது.. இந்தியாவின் நிலை எப்படி?

முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி 6 வருடத்திற்கு முன்பு டெலிகாம் நிறுவனத்தைத் துவங்கும் போது எப்படி டேட்டா-வை வளர்ந்து வரும் பொருளாதாரத்தில் விற்பனை செய்வது, எப்படி கையில் இருக்கும் டேட்டா-வை பணமாகவும், வர்த்தகமாகவும் மாற்றுவது என்பது போன்ற எந்த விதமான ஐடியாவும் இல்லாமல் முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் ஜியோ துவங்கினாலும் இன்று சரியான இடத்திற்கு வந்துள்ளார் என்றால் மிகையில்லை.

credit-scoring முறை

credit-scoring முறை

இதற்கான விடை தான் நிதியியல் சேவை, மக்களுக்கு எப்போதும் பணத்தின் தேவை இருக்கும். ஆனால் ஒருவருக்கு எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும்..? ஒருவருக்குப் பணத்தைக் கொடுக்கலாமா வேண்டாமா..? ஆகியவற்றை credit-scoring முறையை வைத்துக் கணக்கிடலாம். அப்படிக் கணக்கிட்டால் வங்கி மற்றும் நிதி சேவை பெறாத பல கோடி இந்திய மக்களுக்கு இத்தகைய சேவையைக் கொண்டு சேர்க்க முடியாது.

சீனா-வில் ஆன்ட் குரூப்

சீனா-வில் ஆன்ட் குரூப்

ஆனால் இத்தகைய தடைகளைச் சீனா-வில் ஆன்ட் குரூப், அர்ஜென்டினா-வில் MercadoLibre Inc ஆகியவை creditworthiness மூலம் சாதித்துக் காட்டியுள்ளது. பெரிய ஆன்லைன் வர்த்தகத் தளங்களில் வாங்குபவர்கள் மற்றும் விற்பனையாளர்களின் பரிவர்த்தனை தரவுகளிலிருந்து ஒருவரின் creditworthiness அளவீட்டைத் தயாரிக்க முடியும். இதன் அடிப்படையில் கடன் அளித்துப் பெரிய அளவிலான வர்த்தகத்தைப் பெற முடியும்.

ரிலையன்ஸ் ஜியோ, ரிலையன்ஸ் ரீடைல்

ரிலையன்ஸ் ஜியோ, ரிலையன்ஸ் ரீடைல்

முகேஷ் அம்பானியிடம் தற்போது ரிலையன்ஸ் ஜியோ என்ற டெலிகாம் நிறுவனமும், ரிலையன்ஸ் ரீடைல் (ஆப்லைன், ஆன்லைன்) வர்த்தக நிறுவனமும் உள்ளது. இந்த இரு நிறுவனங்களின் தரவுகளை வைத்துக்கொண்டு சரியான டிஜிட்டல் அனலிட்டிக்ஸ் தொழில்நுட்ப உதவியுடன் வாடிக்கையாளர், விற்பனையாளர்களுக்குக் கடன் அளிக்கும் வர்த்தகத் துறைக்குள் முகேஷ் அம்பானி நுழைய உள்ளார்.

DNA loop திட்டம்

DNA loop திட்டம்

வங்கிகளை மிஞ்சும் அளவிற்குச் சீனா-வில் ஆன்ட் குரூப் வளர்ந்தது என்றால் அதற்குக் காரணம் DNA loop. அதாவது data, network மற்றும் activity ஆகியவற்றை அடிப்படையில் டேட்டா திரட்டி அதைச் சரியான முறையில் ஆய்வு செய்து கடன் கொடுத்துத் தொடர்ந்து வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வது மூலம் வாடிக்கையாளர், விற்பனையாளர்கள் வெளியே செல்ல முடியாமல் தொடர்ந்து வர்த்தகம் செய்வார்கள். இது பின்டெக் நிறுவனங்களுக்குத் தான் லாபம்.

பின்டெக் நிறுவனம்

பின்டெக் நிறுவனம்

வெறும் பின்டெக் நிறுவனத்தை வைத்துக்கொண்டு இதை சாதிக்க முடியாது, ஆனால் ரிலையன்ஸ்-யிடம் டெலிகாம், ரீடைல் பிரிவில் மிகப்பெரிய நிறுவனமும் டேட்டாவும் உள்ளது. இதனால் முகேஷ் அம்பானி DNA loop திட்டத்தை எளிதாகச் செயல்படுத்திப் பெரிய அளவிலான வர்த்தக ஆதிக்கத்தை அடைய முடியும்.

உதாரணம்

உதாரணம்

உதாரணமாக ஒருவருக்கு ஆப்பிள் ஐபோன் வேண்டும் என வைத்துக்கொள்வோம். ஆப்பிள் ஐபோன் வாங்குபவருக்கு வங்கிகளை விடவும் குறைவான வட்டியில் கடன் கொடுத்தால் கட்டாயம் வாங்குவார். இதேநேரத்தில் விற்பனையாளர் பிரிவில் ஐபோன் விற்பனை செய்யும் ஒருவருக்குக் குறைந்த வட்டியில் கடன் கொடுக்கும் போது தொடர்ந்து அதிகளவிலான விற்பனையைக் கடன் கொடுக்கும் தளத்திலேயே செய்வார்.

லாபம் வர்த்தகம்

லாபம் வர்த்தகம்

இப்படி லட்சத்திற்கும் அதிகமாக விற்பனையாளர்கள், பல கோடி வாடிக்கையாளர்களுக்குக் கடன் கொடுக்கும் போதும் வசூல் செய்யும் போதும் பெரிய தொகையை லாபமாகக் கிடைப்பது மட்டும் அல்லாமல் தொடர்ந்து இதே தளத்தில் இருப்பார்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Mukesh Ambani entering into big game DNA loop; Entering with consumer and merchant lending business

Mukesh Ambani entering into big game DNA loop; Entering with consumer and merchant lending business
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X