அம்பானி கொடுத்த என்டரி.. புலம்பி தள்ளும் டிஸ்ட்ரிபியூட்டர்கள்.. என்ன நடக்குது..?!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ரீடைல் FMCG துறையில் இறங்கிய நாள் முதல் இத்துறையில் போட்டி மிகவும் கடுமையாக அதிகரித்துள்ளது.

ரிலையன்ஸ் நேரடியாக ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஐடிசி, பெப்சி, கோகோ கோலா பிராண்ட்-கள் உடன் போட்டிப்போட்டு வரும் காரணத்தால் இத்துறையில் இருக்கும் டிஸ்ட்ரிபியூட்டர்களுக்கு பெரும் புதிய பிரச்சனை உருவாகியுள்ளது.

இந்தியாவின் FMCG துறை மிகவும் பெரியது என்பதால் அனைத்து நிறுவனங்களுக்கும் வாய்ப்பு உள்ளது என்ற காரணத்தாலேயே முகேஷ் அம்பானி ஒவ்வொரு பிரிவிலும் வர்த்தகத்தை துவங்க பல நிறுவனங்களை வாங்கி தற்போது பெரும் வர்த்தக படையை உருவாக்கியுள்ளது.

FMCG பிரிவு

FMCG பிரிவு

இந்த நிலையில் ரிலையன்ஸ் FMCG பிரிவில் யாருடைய சந்தையை பிடிக்கப்போகிறது என்பது பெரும் கேள்வியாக இருக்கும் நிலையில் அனைத்து FMCG நிறுவனங்களும் ரிலையன்ஸ்-க்கு போட்டியாக விலையை குறைத்து அல்லது பொருட்களின் எடையை குறைத்து போட்டிப்போட்டு வருகிறது.

போட்டி

போட்டி

இதுமட்டும் அல்லாமல் விலைவாசி உயர்வுக்கு மத்தியில் பல நிறுவனங்கள் வர்த்தகத்தை காப்பாற்றிக்கொள்ள தள்ளுபடிகளையும் அறிவித்து வருகிறது. இதில் அதிகம் பாதிக்கப்படுவது டிஸ்ட்ரிபியூட்டர்களின் மார்ஜின் அளவு தான்.

டிஸ்ட்ரிபியூட்டர்கள் பாதிப்பு

டிஸ்ட்ரிபியூட்டர்கள் பாதிப்பு

உதாரணமாக ரிலையன்ஸ் ரீடைல் சமீபத்தில் அறிமுகம் செய்த கேம்பா பிராண்ட் குளிர்பானங்கள் அனைத்து நாட்டின் முன்னணி குளிர்பான பிராண்டுகளை காட்டிலும் மிகவும் குறைவாகும். பெரிய நிறுவனங்களின் மத்தியிலான போட்டி மூலம் அறிவிக்கப்படும் குறைவான விற்பனை விலை மற்றும் தள்ளுபடி மூலம் நேரடியாக பாதிக்கப்படுவது இந்சியா முழுவதும் இருக்கும் டிஸ்ட்ரிபியூட்டர்கள் தான்.

வர்த்தகம், வருமானம்

வர்த்தகம், வருமானம்

All India Consumer Products Distributors Federation (AICPDF) அமைப்பின் கீழ் மட்டும் சுமார் 4 லட்சம் டிஸ்ட்ரிபியூட்டஸ் உள்ளனர். ரிலையன்ஸ் அடுத்தடுத்து பல பிரிவுகளில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யும் வேளையில் டிஸ்ட்ரிபியூட்டர்களின் வர்த்தகம், வருமானம் கடுமையாக பாதிக்கும். இந்தியாவில் பட்ஜெட் குடும்பங்கள் அதிகம் என்பதால் விலை குறைவான பொருட்கள் அனைத்திற்கும் பெரும் போட்டியிருக்கும்.

ரிலையன்ஸ் ரீடைல் FMCG

ரிலையன்ஸ் ரீடைல் FMCG

ரிலையன்ஸ் ரீடைல் FMCG பிரிவில் குறிப்பாக மக்கள் தினமும் வீட்டில் பயன்படுத்தும் பொருட்களை விற்பனை செய்ய Independence என்ற தனி பிராண்ட்-ஐ உருவாக்கியுள்ளது. இது போல் ஸ்னாக்ஸ் விற்பனைக்கு Snac Tac, உணவு பொருட்களுக்கு Good Life, ப்ரசனல் மற்றும் வீட்டு பராமரிப்பு பிரிவில் Puric, My Home, Enzo ஆகிய பிராண்டுகளையும் உருவாக்கியுள்ளது.

ஈஷா அம்பானி

ஈஷா அம்பானி

இதுதவிர நிறுவன கைப்பற்றல், பிரபல உணவு பொருட்கள் பிராண்ட்கள் உடன் நீண்ட கால ஒப்பந்தம் என பல முக்கியமான விஷயத்தை செய்து வருகிறது. இவை அனைத்தும் ஈஷா அம்பானி தலைமையின் கீழ் நடந்து வருகிறது, மேலும் ரிலையன்ஸ் ரீடைல்-ன் இந்த வேகம் தொடர்ந்தால் அடுத்த 5 வருடத்தில் பெறும் மாற்றத்தை இந்திய FMCG துறையில் பார்க்க முடியும் என்பது நிதர்சனமான உண்மை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Mukesh Ambani entry to FMCG sector bleeds distributors profit margin

Mukesh Ambani entry to FMCG sector bleeds distributors profit margin
Story first published: Friday, March 17, 2023, 11:30 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X