Mukesh Ambani: பசங்களா.. இனி அப்பாவோட டார்கெட் 'இது'தான்.. டிஸ்டர்ப் பண்ணாதீங்க..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் 2வது மிகப்பெரிய பணக்காரராக இருக்கும் முகேஷ் அம்பானி முதல் இடத்தைப் பிடிக்கப் பல முயற்சிகள் எடுத்து வருவது மட்டும் அல்லாமல் உலகமே கிரீன் எனர்ஜிக்குப் பின்னால் ஓடிக்கொண்டு இருக்கிறது.

 

இந்த வேளையில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பை அடிப்படையாகக் கட்டமைக்கப்பட்ட தனது வர்த்தகச் சாம்ராஜ்ஜியத்தை எதிர்காலத்தில் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு சேர்க்கத் திட்டமிட்டு உள்ளார் முகேஷ் அம்பானி.

இந்த நிலையில் தான் முகேஷ் அம்பானி தனது வாரிசுகளுக்கு முக்கியமான விஷயத்தைக் கூறியுள்ளார்.

முகேஷ் அம்பானி புதிய முதலீடு.. பெப்சி, கோகோ கோலா அதிர்ச்சி..! முகேஷ் அம்பானி புதிய முதலீடு.. பெப்சி, கோகோ கோலா அதிர்ச்சி..!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமம் அடுத்தகட்டத்திற்கு வளர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காக முகேஷ் அம்பானி சில வருடங்களுக்கு முன்பாகவே கிரீன் எனர்ஜி துறையில் வர்த்தகத்தைத் துவங்கவும், பெரும் தொகையை முதலீடு செய்யவும் திட்டமிட்டு அதற்கான அறிவிப்பை நிறுவனத்தின் நிர்வாகக் குழு கூட்டத்திலும் தெரிவித்தார்.

கிரீன் எனர்ஜி

கிரீன் எனர்ஜி

கிரீன் எனர்ஜி என்பது ரிலையன்ஸ் குழுமத்திற்குப் புதியது என்பதால் முகேஷ் அம்பானி தனது முழுக் கவனத்தையும் இப்பிரிவில் செலுத்த வேண்டும் என்று முடிவு செய்தார். இதன் அடிப்படையில் தான் முகேஷ் அம்பானி சமீபகாலமாகத் தனது பொறுப்புகளைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்தார்.

ஆகாஷ் அம்பானி, ஈஷா அம்பானி
 

ஆகாஷ் அம்பானி, ஈஷா அம்பானி

இதைத் தொடர்ந்து ஜியோ-வில் ஆகாஷ் அம்பானிக்கு உயரிய நிர்வாகப் பொறுப்பு, ரீடைல் பிரிவில் ஈஷா அம்பானிக்கு உயரிய பிரிவு மட்டும் அல்லாமல் இவ்விரு நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாகக் குழுவில் முக்கிய அதிகாரிகளை முகேஷ் அம்பானி நியமித்து இதன் வளர்ச்சி பாதைகளையும், இலக்குகளையும் வகுத்துத் தனிப்பட்ட முறையில் இயங்கும் வகையில் மாற்றியுள்ளார்.

முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி

இதனால் 65 வயதான முகேஷ் அம்பானி தனது முழு கவனத்தையும் அடுத்த 15 ஆண்டுகளில் கட்டமைக்கப் போகும் 75 பில்லியன் டாலர் மதிப்பிலான கிளீன் எனர்ஜி வர்த்தகத்தைக் கட்டமைக்க உள்ளார். இதன் மூலம் முதலீட்டாளர்களுக்கு இனி தன்னுடைய டார்கெட் மொத்தமும் கிளீன் எனர்ஜி தான் எனத் தெரிவித்துள்ளார்.

குஜராத் ஜாம்நகர்

குஜராத் ஜாம்நகர்

1990களில் பல மாதம் கண்டைனர் பெட்டியில் தங்கி குஜராத்தில் இந்தியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு அலையைக் கட்டமைத்த நிலையில் தற்போது மீண்டும் ஸ்கிராச்-ல் இருந்து 75 பில்லியன் டாலர் மதிப்பிலான கிளீன் எனர்ஜி வர்த்தகத்தைக் கட்டமைக்க உள்ளார்.

அனந்த் அம்பானி

அனந்த் அம்பானி

அனந்த் அம்பானி தலைமையில் தற்போது குஜராத் ஜாம்நகரில் ஜிகா பேக்டரி கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் நிர்வாகம், வளர்ச்சி, சந்தைப்படுத்தல், வருமானம் ஈட்டுதல், விலை நிர்ணயம் போன்ற அனைத்து முடிவுகளை முகேஷ் அம்பானி எடுக்க உள்ளார்.

முகேஷ் அம்பானி வழிகாட்டல்

முகேஷ் அம்பானி வழிகாட்டல்

அனந்த் அம்பானி வயதில் மிகவும் சிறியவர் என்பதால் முகேஷ் அம்பானியின் வழிகாட்டல் அவருக்குக் கட்டாயம் தேவை, குறிப்பாகத் திருமணமாகி செட்டில் ஆகும் இந்த நேரத்தில் முகேஷ் அம்பானி களத்தில் இறங்குவது மிகவும் முக்கியமானதாக அனந்த் அம்பானி எதிர்காலத்திற்கு விளங்குகிறது.

நேரடி வழிகாட்டல்

நேரடி வழிகாட்டல்


அனந்த் அம்பானி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் பல நிறுவனத்தின் தலைவராக இருந்தாலும் முழுமையான நிர்வாகம், முகேஷ் அம்பானியின் நேரடி வழிகாட்டல் இதுவரையில் கிடைக்கவில்லை. இதனால் கிளீன் எனர்ஜி பிரிவை முகேஷ் அம்பானி, அனந்த் அம்பானி இணைந்து கட்டமைப்பது எதிர்காலத்தையும் உறுதி செய்யும் செயலாக உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Mukesh Ambani full concentration on $75 billion green energy; Isha and akash will takecare rest

Mukesh Ambani full concentration on $75 billion green energy; Isha and akash will takecare rest
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X