'அசுர' வளர்ச்சியில் முகேஷ் அம்பானி, கெளதம் அதானி.. எல்லாம் அவன் செயல்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த 2020ம் ஆண்டில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகமே முடங்கி போயிருந்த நிலையில் கூட உலக பணக்காரர்கள் மேலும் பல பில்லியன்களை சம்பாதித்துள்ளனர்.

 

இந்த லிஸ்டில் வழக்கம்போல 83 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் இந்திய பணக்காரராக, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி உள்ளார். இந்தியாவை ஆட்டிப்படைத்த கொரோனா பாதிப்பு நிறைந்த காலமான 2020ல் முகேஷ் அம்பானியின் மொத்த சொத்து மதிப்பு 24 சதவீத வளர்ச்சியினை கண்டுள்ளார்.

அதோடு ஹூருன் குளோபல் ரிச் லிஸ்ட் 2021ன் படி, உலகளவில் எட்டாவது இடத்தினை முகேஷ் அம்பானி பிடித்துள்ளார்.

கவுதம் அதானியின் சொத்து மதிப்பு

கவுதம் அதானியின் சொத்து மதிப்பு

இதே மற்றொரு தொழிலதிபரான குஜராத்தினை சேர்ந்த தொழிலதிபரான கவுதம் அதானியின் சொத்து மதிப்பானது 2020ம் ஆண்டில் 32 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இவரது சொத்து மதிப்பு கிட்டதட்ட இருமடங்கு அதிகமாகும். சர்வதேச அளவில் 20 இடங்கள் முன்னேறி 48 பணக்காரராகவும், இதே இந்தியாவில் இரண்டாவது பணக்கார இந்தியராகவும் முன்னேறியுள்ளார்.

இந்திய பொருளாதாரம் Vs சொத்து மதிப்பு

இந்திய பொருளாதாரம் Vs சொத்து மதிப்பு

இதே கெளதம் அதானியின் சகோதரர் வினோத்தின் சொத்து மதிப்பு 128 சதவீதம் அதிகரித்து 9.8 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இந்த அறிக்கையானது ஜனவரி 15 முதல் தனி நபர் அல்லது குடும்பச் செல்வங்களைத் தொகுத்துள்ளது. கொரோனாவின் காரணமாக இந்தியாவின் பொருளாதாரம் 7 சதவீதத்திற்கும் மேலாக வீழ்ச்சி காணலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த நேரத்தில் இவர்களின் சொத்துமதிப்பு கணிசமாக உயர்ந்துள்ளது.

ஏழைகள் மேலும் ஏழ்மையானர்கள்
 

ஏழைகள் மேலும் ஏழ்மையானர்கள்

கடந்த ஆண்டில் கொரோனாவின் காரணமாக லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. இதனால் ஏழை மக்கள் தங்களது வாழ்வாதரங்களை இழந்து தவித்து வருகின்றனர். இதனால் ஏழைகள் மேலும் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்திய பொருளாதாரம் சரிவினை கண்டு வரும் நிலையில், பில்லியனர்களின் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது, பாரம்பரிய தொழில்களின் வளர்ச்சியினை காட்டுகிறது.

அமெரிக்கா சீனாவினை வெல்லலாம்

அமெரிக்கா சீனாவினை வெல்லலாம்

அமெரிக்காவிலும் சீனாவிலும் தொழில் நுட்பத்தால் இயக்கப்படும் செல்வ உருவாக்கத்துடன் ஒப்பிடும்போது, இந்திய செல்வ உருவாக்கத்தின் சுழற்சி பாரம்பரிய தொழில்களால் உந்தப்படுகிறது. ஆனால் இந்த சொத்து மதிப்பானது தொழில் நுட்பத்தால் இயக்கப்படும் போது பில்லியனர்களின் எண்ணிக்கையை பொறுத்தவரையில் அமெரிக்காவை வெல்லக்கூடும் என்றும் இத்துறை சார்ந்த நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஷிவ் நாடாரின் சொத்து மதிப்பு

ஷிவ் நாடாரின் சொத்து மதிப்பு

இந்த பணக்காரர்கள் லிஸ்டில் ஹெச்சிஎல்-லின் ஷிவ் நாடாரின் சொத்து மதிப்பு 27 பில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. இவர் இந்தியாவின் மூன்றாவது பணக்காரர் ஆவார்.

இந்த காலகட்டத்தல் 55 இந்தியர்கள் புதிய பெரும் பணக்காரர்களாக மாறியுள்ளனர். இவர்களில் 40 பேர் இந்தியாவில் வசித்து வருவதாக இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Mukesh ambani, Gautam adani remarkable rise in wealth, India adds 40 billionaires

hurun global rich list 2021.. Mukesh ambani, Gautam adani remarkable rise in wealth, India adds 40 billionaires
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X