தினமும் 300 மில்லியன் டாலர் மாயம்.. கதறும் முகேஷ் அம்பானி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் முகேஷ் அம்பாயின் சொத்து மதிப்பு யாரும் எதிர்பார்க்காத வகையில் கடந்த 2 மாதங்களாக தினமும் 300 மில்லியன் டாலர் அளவிலான சொத்து மதிப்பை இழந்து வருகிறார். இதன் மூலம் இவரது மொத்த சொத்து மதிப்பு 48 பில்லியன் டாலராக குறைந்துள்ளது.

Recommended Video

பணக்காரர்களை கதற விடும் கொரோனா! டிமிக்கி கொடுத்த Amazon

கொரோனாவின் தாக்கத்தால் இந்திய வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தியதன் விளைவாக தற்போது நாட்டின் முன்னணி பணக்காரர்களின் சொத்து மதிப்பு மளமளவென குறைந்துள்ளது.

முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி

ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தின் தலைவரான முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு கொரோனா தாக்கத்தால் ஏற்பட்ட வர்த்தக பாதிப்பின் எதிரொலியாக சுமார் 19 பில்லியன் டாலர் அளவிலான சொத்து மதிப்பு குறைந்து தற்போது வெறும் 48 பில்லியன் டாலர் மதிப்புடன் இருக்கிறார்.

இதன் காரணமாக ஹூரன் பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி தற்போது 8வது இடத்தில் இருந்து 17வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

கொரோனா

கொரோனா

சீனாவில் துவங்கிய கொரோனா தாக்கம் தற்போது உலக நாடுகள் அனைத்தையும் கடுமையாக தாக்கியுள்ளது. குறிப்பாக கொரோனா தாக்கம் வல்லரசு நாடுகள் மற்றும் பணக்கார நாடுகளை கடுமையாக தாக்கியுள்ளது என்றால் மிகையில்லை. சொல்லப்போனால் கொரோனா தாக்கம் அதிகமாக இருந்தால் அமெரிக்கா பொருளாதாரம் தற்போதைய அளவை விடவும் -11 சதவீதம் சரியும் என ஆய்வுகள் கூறுகிறது.

பொருளாதாரம்

பொருளாதாரம்

இப்படியிருக்கும் நிலையில் உலக நாடுகளின் வர்த்தகம், பொருளாதார வளர்ச்சி, முதலீடு என அனைத்தும் முடங்கியுள்ள காரணத்தால் அனைவரின் சொத்து மதிப்பும் கடுமையாக குறைந்துள்ளது.

முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 19 பில்லியன் டாலர் குறைந்துள்ள நிலையில் இந்தியாவின் பிற பணக்காரர்களின் சொத்து மதிப்பு எந்த அளவிற்கு குறைந்துள்ளது என்பதை இப்போது பார்ப்போம்.

பிற முக்கிய புள்ளிகள்

பிற முக்கிய புள்ளிகள்

முகேஷ் அம்பானிக்கு அடுத்ததாக கெளதம் அதானியின் சொத்து மதிப்பு 37 சதவீதம் அதாவது 6 பில்லியன் டாலர் குறைந்துள்ளது. இதேபோள் ஹெச்சிஎல் ஷிவ் நாடார் 5 பில்லியன் டாலர் சரிவும், கோட்டாக் மஹிந்திரா வங்கி தலைவர் உதய் கோட்டாக் 4 பில்லியன் டாலர் சரிவும் சந்தித்துள்ளனர்.

உலக பணக்காரர்கள்

உலக பணக்காரர்கள்

இந்த 3 மாத காலகட்டத்தில் பில் கேட்ஸ் 15.2 பில்லியன் டாலரும், பெர்னார்டு அர்னால்ட் 30.7 பில்லியன் டாலரும், வாரன் பபெட் 18.8 பில்லியன் டாலரும், மார்க் ஜூக்கர்பெர்க் 18.2 பில்லியன் டாலரும், லேரி எலிசன் 3.14 பில்லியன் டாலரும், ஸ்டீவ் பால்மர் 2.99 பில்லியன் டாலரும், லேரி பேஜ் 10.1 பில்லியன் டாலரும், அமான்சியோ ஆர்டிகோ 21.1 பில்லியன் டாலர் என உளகின் முன்னணி பணக்காரர்கள் எதிர்பார்க்காத அளவிற்குச் சொத்து மதிப்பு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளனர். ஆனால்..

2.35 பில்லியன் டாலர்

2.35 பில்லியன் டாலர்

ஆனால் ஜெப் பிசோஸ்-இன் சொத்து மதிப்பு மட்டும் இந்த 3 மாத காலத்தில் மொத்தமாக 5.9 பில்லியன் டாலர் வரையில் உயர்ந்து, கொரோனா தாக்கத்தால் 3.08 பில்லியன் டாலர் சரிந்ததுள்ளது.

இதனால் யாரும் கிடைக்காத பாக்கியத்தை போல் இவரது சொத்து மதிப்பு இக்காலகட்டத்தில் மட்டும் 2.35 பில்லியன் டாலர் உயர்ந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Mukesh Ambani lost to $48 billion networth in just 2 months

The net worth of India's richest man Mukesh Ambani dropped 28 per cent or $300 million a day for two months to $48 billion as on March 31 due to the massive correction in stock markets, a report said on Monday.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X