முகேஷ் அம்பானி அதிரடி.. அடுத்த டார்கெட் ரீடைல்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் மிகப்பெரிய சில்லறை விற்பனை சந்தையைப் பிடிக்க அமெரிக்க நிறுவனங்களான அமேசான் மற்றும் வால்மார்ட் ஒருபக்கம் போட்டிப் போட்டு வரும் நிலையில் ரிலையன்ஸ் இண்டர்ஸ்ட்ரீஸ் முகேஷ் அம்பானி ரீடைல் வர்த்தகத்தில் அடுத்தடுத்த அதிரடிகளைக் காட்டி வருகிறார்.

சமீபத்தில் ஆன்லைன் ரீடைல் வர்த்தகச் சேவையான ஜியோமார்ட் சேவையை அறிமுகம் செய்து அதைப் பேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்அப் உடன் இணைத்து இந்திய மக்களுக்கு ரீடைல் வர்த்தகத்தில் புதிய அனுபவத்தைக் கொடுத்து வருகிறது ரிலையன்ஸ் ரீடைல் வர்த்தகம்.

இந்நிலையில் ரிலையன்ஸ் ரீடைல் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யப் பிக் பஜார் ரீடைல் கடைகளின் தாய் நிறுவனமான பியூச்சர் குரூப் நிறுவனத்தில் குறிப்பிடத்தக்க அளவிலான பங்குகளை வாங்கப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் முகேஷ் அம்பானி.

அமெரிக்கா இந்தியாவுக்கு வைக்கும் பலே செக்.. ஜிஎஸ்பி திரும்ப வேண்டுமா? அப்படின்னா அதை செய்யுங்கள்!அமெரிக்கா இந்தியாவுக்கு வைக்கும் பலே செக்.. ஜிஎஸ்பி திரும்ப வேண்டுமா? அப்படின்னா அதை செய்யுங்கள்!

பியூச்சர் குரூப்

பியூச்சர் குரூப்

பிக் பஜார், நீல்கிரீஸ், Fbb, சென்டரல், பிராண்ட் பேக்டரி, ஹெரிடேஜ் பிரெஷ், 7Eleven எனப் பல முக்கிய ரீடைல் வர்த்தகங்களை வைத்திருக்கும் பியூச்சர் குரூப் நிறுவனத்தின் பங்குகளைத் தான் தற்போது ரிலையன்ஸ் ரீடைல் வாங்க முடிவு செய்துள்ள இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்தப் பங்கு கைப்பற்ற மூலம் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தின் ஆன்லைன் வர்த்தகக் கனவை விரைவில் எட்ட முடியும் என நம்பப்படுகிறது.

 

அமேசான், ரிலையன்ஸ்

அமேசான், ரிலையன்ஸ்

தற்போது ரிலையன்ஸ் ரீடைல் வர்த்தகம் வாங்கப் போகும் பியூச்சர் குரூப் நிறுவனத்தில் ஏற்கனவே அமேசான் முதலீடு செய்து கூட்டணி முறையில் வர்த்தகம் செய்து வருகிறது. இந்நிலையில் ரிலையன்ஸ்-இன் வருகை ஆன்லைன் மற்றும் ஆப்லைன் வர்த்தகத்தில் மிகப்பெரிய போட்டியை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.

பங்குச்சந்தை

பங்குச்சந்தை

பியூச்சர் குரூப் கீழ் இருக்கும் பல்வேறு நிறுவனங்களில் 5 நிறுவனங்கள் தேசிய பங்குச்சந்தையில் பட்டியிலிட்டப்பட்டுள்ளது. பியூச்சர் ரீடைல் லிமிடெட், பியூச்சர் கன்ஸ்யூமர் லிமிடெட், பியூச்சர் லைப்ஸ்டைல் பேஷன் லிமிடெட், பியூச்சர் எண்டர்பிரைசர்ஸ் லிமிடெட், பியூச்சர் சப்ளை செயின் சொல்யூஷன்ஸ் லிமிடெட் ஆகியவை ஆகும்.

தற்போது முகேஷ் அம்பானி இந்த நிறுவனங்களில் தான் முதலீடு செய்ய உள்ளார், ரிலையன்ஸ் பியூச்சர் குரூப் இடையிலான பேச்சுவார்த்தை நடக்கும் செய்தி வெளியான முதல் பியூச்சர் குரூப் நிறுவனங்கள் பங்குகள் அதிகளவிலான வளர்ச்சியை அடைந்து வருகிறது.

 

அமேசான் மற்றும் வால்மார்ட்

அமேசான் மற்றும் வால்மார்ட்

இந்திய ரீடைல் வர்த்தகச் சந்தையைப் பிடிக்க அமேசான் இந்தியாவில் இதுவரை 5.5 பில்லியன் டாலர் வரையில் முதலீடு செய்துள்ளது. அமெரிக்காவில் இருக்கும் போட்டி இந்தியாவிலும் வேண்டும் எனத் திட்டமிட்ட அமெரிக்காவின் முன்னணி ரீடைல் நிறுவனமான வால்மார்ட் இந்தியாவில் 16 பில்லியன் டாலர் முதலீட்டில் அமேசானின் சக போட்டி நிறுவனமான பிளிப்கார்ட் நிறுவனத்தை வாங்கியது.

இந்நிலையில் அமேசான் மற்றும் வால்மார்ட் நிறுவனங்களுக்குப் போட்டியாக ஜியோ தற்போது 16 பில்லியன் டாலருக்கு அதிகமான முதலீட்டைப் பெற்று இந்திய ரீடைல் சந்தையில் மிகப்பெரிய அளவில் இறங்க திட்டமிட்டுள்ளது.

 

அமேசான்

அமேசான்

பியூச்சர் குரூப்-இன் பியூச்சர் ரீடைல் வர்த்தகத்தின் 1.3 சதவீத பங்குகளை மறைமுகமாக பங்கு இருப்பாக அமேசான் வைத்துள்ளது, இந்நிலையில் பியூச்சர் கூப்பன்ல் லிமிடெட் நிறுவனத்தில் 49 சதவீத பங்குகளைத் தனது கட்டுப்பாட்டில் உள்ளது. ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனமும் தற்போது போட்டியில் இருக்கும் காரணத்தால் அமேசான் பியூச்சர் குரூப் நிறுவனத்தில் முதலீடு செய்து தனது பங்கு இருப்பு அளவை அதிகரிக்கக் கூடும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Mukesh Ambani nears deal to buy stake in some companies of Future Group

Reliance Industries Ltd. is closing in on a deal that would see it acquire stakes in some units of Future Group, people familiar with the matter said, a move that would bolster the e-commerce ambitions of the conglomerate and its billionaire Chairman Mukesh Ambani.
Story first published: Friday, June 19, 2020, 16:26 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X