ரிலையன்ஸ்-ஆரம்கோ டீல்-க்குத் தடை.. மத்திய அரசு அதிரடி தலையீடு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் மிகவும் குறைந்த காலத்தில் வேகமாக வளர்ந்து இன்று பல துறைகளில் கொடிகட்டிப் பறக்கும் முக்கியமான நிறுவனங்களில் முதன்மையாக இருப்பது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ். இந்நிறுவனத்தின் மிக முக்கிய வர்த்தகப் பிரிவாக இருக்கும் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தி திட்டங்களை அரசு நிலங்களில் ஒப்பந்தம் செய்து பிரிட்டிஷ் கேஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் நடத்தியது.

இந்நிலையில் இரு நிறுவனங்களும் உற்பத்தியில் முறைகேடு செய்துள்ளதாக 2010இல் வழக்குத் தொடரப்பட்ட நிலையில் தற்போது ஒப்பந்தம் முடியும் நிலையில், முறைகேடு செய்ததற்காக விதிக்கப்பட்ட அபராதம் செலுத்த உத்தரவிட்டுள்ளது. இல்லையெனில் ரிலையன்ஸ், சவுதி ஆராம்கோ நிறுவனத்துடன் செய்த ஒப்பந்தத்தை நிறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.

பிஎம்டி திட்டம்

பிஎம்டி திட்டம்

1994ஆம் ஆண்டுப் பன்னா-முக்த் மற்றும் தபதி ஆகிய இடங்களில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தி செய்வதற்காக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் பிரிட்டிஷ் கேஸ் நிறுவனங்கள் இணைந்து மத்திய அரசுடன் ஒப்பந்தம் செய்தது.

இத ஒப்பந்தம் சனிக்கிழமை முடிந்த நிலையில், 2010ஆம் ஆண்டு முதல் நிலுவையில் இருக்கும் முறைகேடு வழக்கு வெள்ளிக்கிழமை டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

 

டெல்லி உயர் நீதிமன்றம்

டெல்லி உயர் நீதிமன்றம்

பிஎம்டி ஒப்பந்த திட்டம் முடியும் நிலையில், முறைகேடான முறையில் உற்பத்தி செய்யப்பட்டதற்காக விதிக்கப்பட்ட 4.5 பில்லியன் டாலர் அபராத தொகையை இன்னும் செலுத்தாமல் நிலுவையில் இருக்கிறது. இந்தத் த1

இந்நிலையில் டெல்லி உயர் நீதிமன்றம் இரு நிறுவனங்களையும் தங்களது நிறுவன சொத்து மதிப்பையும் விபரத்தையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. இது மட்டும் அல்லாமல் அபராத தொகை செலுத்தும் வரையில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கு மற்றும் சொத்து விற்பனை திட்டங்களுக்கு அனுமதி அளிக்கத் தடை விதிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு கோரிக்கை வைத்துள்ளது.

 

பிப்ரவரி 6

பிப்ரவரி 6

இந்த வழக்கின் மறு விசாரணை வருகிறது, அதற்குள் இரு நிறுவனங்களும் தங்களது சொத்து விபரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும், மேலும் இந்த 4.5 பில்லியன் டாலர் அபராத தீர்ப்பைச் சர்வதேச நடுவர் நீதிமன்றம் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தொகைக்கான செக்யூரிட்டியை ரிலையன்ஸ் மற்றும் பிரிட்டிஷ் கேஸ் கொடுக்க வேண்டும் என்பதை மேற்கோள் காட்டி தான் தற்போது டெல்லி உயர் நீதிமன்றம் சொத்து விபரங்களைக் கோரியுள்ளது.

 

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

முகேஷ் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நாட்டின் மிகப்பெரிய நிறுவனமாக இருந்தாலும், இந்நிறுவனம் 2.88 லட்சம் கோடி ரூபாய் என்கிற மிகப்பெரிய டைம் பாம் மீது தான் அமர்ந்துள்ளது. இது எப்போதும் வேண்டுமானாலும் வெடிக்கும்.

இந்தப் பிரச்சனையைத் தீர்க்க வேண்டும் என்பதற்காகத் தான் ரிலையன்ஸ் 2019ஆம் ஆண்டுத் துவக்கம் முதல் தனது நிறுவன சொத்துக்களை விற்பனை செய்வதும், அடமானம் வைப்பும், பெரும் நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதுமாய்ப் பல வேலைகளைச் செய்து வருகிறது. இதற்கு ஈடாகப் புதிய வர்த்தகத்தின் வளர்ச்சிக்காகவும் அதிகளவில் முதலீடு செய்தும் வருகிறார் முகேஷ்.

 

முக்கியமான கேள்வி

முக்கியமான கேள்வி

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது கடன் தீர்ப்பதற்காகத் தொடர்ந்து சொத்துக்களையும் பங்குகளையும் விற்பனை செய்து வரும் நிலையில் 4.5 பில்லியன் டாலர் அபராதம் மற்றும் அதன் வட்டிக்கான உத்திரவாதம் என்ன என்பதற்காகத் தான் சொத்து விபரங்களைக் கோரியுள்ளது.

அப்படிப் பிரச்சனை ஏதும் இருந்தால் ரிலையன்ஸ் நிறுவனத்தின் அனைத்து பங்கு மற்றும் சொத்து விற்பனைக்குத் தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதில் ரிலையன்ஸ்-ஆராம்கோ-வின் 15 பில்லியன் டாலர் திட்டமும் அடக்கம்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Mukesh Ambani on Big Trouble: Reliance-Saudi Aramco deal may end sad

The government is trying to stop Reliance Industries from selling its assets including a plan to sell 20% stake in its refining and petrochemicals business to Saudi Aramco. The demand was made in a case against Reliance and British Gas in Delhi High Court. The government has sought to prevent them from selling assets, and honouring a $4.5-billion arbitration award.
Story first published: Monday, December 23, 2019, 9:42 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X