Mukesh Ambani: அடுத்த ரவுண்டுக்கு தயார்.. எத்தனாயிரம் கோடி முதலீடு தெரியுமா..?!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2021ல் அனைத்துத் தரப்பு மக்களாலும் அதிகம் கவனிக்கப்பட்ட நிறுவனம் என்றால் இது முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் தான்.

 

2020 கொரோனா தொற்றுக் காலத்தில் ரிலையன்ஸ் ரீடைல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்து சுமார் 1.5 லட்சம் கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை ஈர்த்த நிலையில் தற்போது இதை மேஜிக்-ஐ மீண்டும் உருவாக்க முடிவு செய்துள்ளார் முகேஷ் அம்பானி.

ஆனால் இந்த முறை ஒரு சிறிய மாற்றம்.. ஆனால் எதிர்பார்க்காத டிவிஸ்ட்..!

 ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமமாக விளங்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ன் தலைவரான முகேஷ் அம்பானி ஜூன் மாதம் நடந்த நிறுவனத்தின் கூட்டத்தில் கிளீன் எனர்ஜி துறையில் இறங்குவதாகவும், இதற்காக அடுத்த 3 வருடத்தில் 75,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்தார்.

 முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி

இந்த அறிவிப்பு முதலீட்டாளர்களுக்கு மட்டும் அல்லாமல் சாமானிய மக்களுக்கு ஷாக் கொடுத்தது, காரணம் ரிலையன்ஸ் சாம்ராஜ்ஜியத்தை மொத்தமாகக் கச்சா எண்ணெய் மீது கட்டமைத்த நிலையில், தற்போது அதற்குத் தலைகீழான கிளீன் எனர்ஜி துறையில் இறங்குவது தான்.

 கிளீன் எனர்ஜி வர்த்தகம்
 

கிளீன் எனர்ஜி வர்த்தகம்

ஆனால் முகேஷ் அம்பானி கிளீன் எனர்ஜி திட்டத்தை அறிவித்த சில வாரத்தில் 7 நிறுவனத்தைத் துவங்கி, இந்தியா மட்டும் அல்லாமல் உலக நாடுகளில் பல கிளீன் எனர்ஜி சார்ந்த நிறுவனத்தில் முதலீடு செய்து அசத்தி வருகிறது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்.

 3 முதலீட்டு நிறுவனங்கள்

3 முதலீட்டு நிறுவனங்கள்

இந்நிலையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் கிளீன் எனர்ஜி பிரிவு பங்குகளை வாங்க சிங்கப்பூர் நாட்டின் GIC ஹோல்டிங்க்ஸ், அபுதாபி இன்வெஸ்ட்மென்ட் அத்தாரிட்டி, ஐக்கிய அரபு நாட்டின் முபதாலா இன்வெஸ்ட்மென்ட்ஸ் ஆகிய 3 பெரும் முதலீட்டு நிறுவனங்கள் ஆர்வம் காட்டியுள்ளதாகவும், இதற்கான பேச்சுவார்த்தையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இறங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 நிறுவனங்கள் ஆர்வம்

நிறுவனங்கள் ஆர்வம்

இந்தியாவில் கிரீன் எனர்ஜி வர்த்தகம் தற்போது பெரிய அளவில் சூடுபிடித்துள்ள நிலையில் சிறு நிறுவனங்கள் முதல் பெரு நிறுவனங்கள் இத்துறையில் எப்படியாவது சிறிய அளவிலான வர்த்தகத்தையாவது பிடிக்க வேண்டும் என்று தீவிரமாக உள்ளது.

 மத்திய அரசு

மத்திய அரசு

இதேவேளையில் இந்திய அரசு கிளாஸ்கோ-வில் நடந்த COP26 மாநாட்டில் புதைபடிவமற்ற எரிபொருள் மூலம் 2030க்குள் 500 ஜிகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டும் என்ற முக்கியமான இலக்கை நிர்ணயம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இதனால் அரசு தரப்பில் இருந்தும் இந்திய கிளீன் எனர்ஜி துறைக்கு அதிகப்படியான ஆதரவு கிடைத்து வருகிறது.

 வெற்றி அடைய வாய்ப்பு

வெற்றி அடைய வாய்ப்பு

மேலும் GIC ஹோல்டிங்ஸ், அபுதாபி இன்வெஸ்ட்மென்ட் அத்தாரிட்டி, முபாதலா இன்வெஸ்ட்மென்ட் ஆகிய 3 நிறுவனங்களும் ஏற்கனவே இந்திய கிரீன் எனர்ஜி வர்த்தகப் பிரிவிலும், ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் நிறுவனத்திலும் முதலீடு செய்துள்ளதால் இந்த முதலீட்டுப் பேச்சுவார்த்தை எளிதாக வெற்றி அடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் பேச்சுவார்த்தை வெற்றி அடையும் பட்சத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்குப் பல ஆயிரம் கோடி முதலீடு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

 

 7 புதிய நிறுவனங்கள்

7 புதிய நிறுவனங்கள்

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஜூன் மாத அறிவிப்பு பின்பு கிளீன் எனர்ஜி பிரிவில் புதிதாக 7 நிறுவனங்களைத் துவங்கியுள்ளது.

  • Reliance New Energy Solar
  • Reliance New Solar Energy
  • Reliance New Energy Storage
  • Reliance Solar Projects
  • Reliance Storage
  • Reliance New Energy Carbon Fibre
  • Reliance New Energy Hydrogen Electrolysis

இந்த 7 நிறுவனத்திற்கும் தலா 3 தலைவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளது ரிலையன்ஸ் இண்டர்ஸ்ட்ரீஸ்.

 அனந்த் அம்பானி தலைமை

அனந்த் அம்பானி தலைமை

கிளீன் எனர்ஜி வர்த்தகப் பிரிவில் துவங்கப்பட்டு உள்ள இரு புதிய நிறுவனங்களான ரிலையன்ஸ் நியூ எனர்ஜி சோலார், ரிலையன்ஸ் நியூ சோலார் எனர்ஜி ஆகிய நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானியை நிர்வாகத் தலைவராக (Director) நியமிக்கப்பட்டு உள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Mukesh Ambani planning for Next round of investments in RIL's clean energy unit

Mukesh Ambani planning for Next round of investments in RIL's clean energy unit Mukesh Ambani: அடுத்த ரவுண்டுக்கு தயார்.. எத்தனாயிரம் கோடி முதலீடு தெரியுமா..?!
Story first published: Thursday, December 23, 2021, 13:10 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X