ரூ. 500 கோடி முதலீடு.. அசராத முகேஷ் அம்பானி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகச் சாம்ராஜ்ஜியமாகத் திகழும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவர் நாட்டின் சிறந்த பிஸ்னஸ்மேன் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். கொரோனாவின் தாக்கத்தால் முதலீடு செய்ய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பயந்து இருக்கும் இந்தச் சூழ்நிலையில் சுமார் 500 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டா செய்துள்ளார் முகேஷ் அம்பானி.

Recommended Video

பணக்காரர்களை கதற விடும் கொரோனா! டிமிக்கி கொடுத்த Amazon
 

10 நாளில் 3.5 லட்சம் வாடிக்கையாளர் இழப்பு.. சோகத்தின் உச்சத்தில் பஜாஜ் பைனான்ஸ்..!10 நாளில் 3.5 லட்சம் வாடிக்கையாளர் இழப்பு.. சோகத்தின் உச்சத்தில் பஜாஜ் பைனான்ஸ்..!

சரியான முடிவு

சரியான முடிவு

இந்தியா முழுவதும் மக்கள் வீட்டிலேயே முடங்கியிருக்கும் இந்தச் சூழ்நிலையில் அனைத்து துறையும் மோசமான வர்த்தகச் சரிவை எதிர்கொண்டு இருக்கும் இந்தச் சூழ்நிலையில் ஆன்லைன் கல்வி சேவை அளிக்கும் நிறுவனங்கள் மட்டும் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்று வருகிறது.

இதைக் கவனித்த முகேஷ் அம்பானி இத்துறையில் சுமார் 500 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைச் செய்துள்ளார்.

 

Embibe

Embibe

2012ஆம் ஆண்டு Aditi Awasthi என்பவரால் உருவாக்கப்பட்ட இந்த Embibe நிறுவனம் செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் இயங்கும் ஆன்லைன் கல்வி சேவை நிறுவனமாக இயங்கி வருகிறது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இந்நிறுவனத்தில் ஏற்கனவே சுமார் 90 கோடி ரூபாயைப் பிப்ரவரி மாதத்தில் முதலீடு செய்திருந்தது.

 

73 சதவீத பங்குகள்
 

73 சதவீத பங்குகள்

இந்நிலையில் தற்போது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முன்கூட்டியே திட்டமிட்டபடி இந்நிறுவனத்தின் 73 சதவீத பங்குகளைக் கைப்பற்றிச் சுமார் 500 கோடி ரூபாய் முதலீடு செய்வதாக அறிவித்திருந்தது. இதைத் தான் தற்போது செய்துள்ளார் முகேஷ் அம்பானி.

ஏற்கனவே திட்டமிட்டு இருந்தாலும் ஆன்லைன் கல்வி சேவை பெரிய அளவில் நாட்டில் வளர்ச்சி அடையும் வேளையில் முகேஷ் அம்பானி முதலீடு செய்திருப்பது டபுள் குஷி தான்.

 

நிறுவன கைப்பற்றல்

நிறுவன கைப்பற்றல்

இதற்கிடையில் Embibe நிறுவனம் பிப்ரவரி 2020இல் தனது சக போட்டி நிறுவனமான ஆன்லைன்தயாரி நிறுவனத்தையும் டிசம்பர் 2019இல் பன்டூட் நிறுவனத்தையும் கைப்பற்றித் தனது வர்த்தகம் மற்றும் வாடிக்கையாளர் எண்ணிக்கையில் வலிமை சேர்த்தது.

கல்வி துறை

கல்வி துறை

கொரோனா பாதிப்பின் காரணமாக இந்தியாவில் அனைத்து பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில் மாணவர்களும், ஆசிரியர்களும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இதனால் ஆன்லைன் கல்வியின் தேவை தற்போது மக்கள் மத்தியில் அதிகமாகியுள்ளது.

இதன் எதிரொலியாகப் பள்ளிக் கல்வி பயிற்சி மற்றும் சேவை நிறுவனமாக Byju's நிறுவனத்தில் மார்ச் மாதம் மட்டும் சுமார் 60 லட்சம் மாணவர்கள் புதிதாக இணைந்துள்ளனர். இது போதாத முகேஷ் அம்பானி கல்வித் துறையில் முதலீடு செய்ய..

 

முகேஷ் அம்பானி

முகேஷ் அம்பானி

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்புக் கொரோனா தாக்கத்தால் ஏற்பட்ட வர்த்தகப் பாதிப்பின் எதிரொலியாகச் சுமார் 19 பில்லியன் டாலர் அளவிலான சொத்து மதிப்பு குறைந்து தற்போது வெறும் 48 பில்லியன் டாலர் மதிப்புடன் இருக்கிறார்.

இதன் காரணமாக ஹூரன் பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி தற்போது 8வது இடத்தில் இருந்து 17வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Mukesh Ambani – Reliance Industries invests ₹500 crore in edtech startup Embibe

Mukesh Ambani doubles his bet on edtech – Reliance Industries invests ₹500 crore in startup Embibe. Mukesh Ambani doubles his bet on edtech – Reliance Industries invests ₹500 crore in startup Embibe.These funds come in right after Reliance’s ₹90 crore investment in the febuary
Story first published: Wednesday, April 8, 2020, 7:00 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X