வெளிநாட்டு ஸ்னாக்ஸ் பிஸ்னஸ்-ல் இறங்கும் முகேஷ் அம்பானி.. Alan’s Bugles இந்தியாவில் அறிமுகம்..!!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முகேஷ் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் ரீடைல் வென்சர்ஸ் நிறுவனத்தின் FMCG கிளை நிறுவனமான ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் ப்ராடெக்ட்ஸ் லிமிடெட் பல புதிய வர்த்தகத்தில் இறங்கி வரும் வேளையில் தற்போது வெளிநாட்டு ஸ்னாக்ஸ்-ஐ இந்தியாவுக்கு கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளது. இது ரீடைல் சந்சையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் கணிக்கப்பட்டு உள்ளது.

ரிலையன்ஸ் ரீடைல் ஏற்கனவே snac tac என்னும் பிராண்டின் கீழ் இந்திய இனிப்பு, நொருக்கு தீனி முதல் நூடில்ஸ், பாஸ்தா, சேமியா, சூப் வரையில் அனைத்தையும் விற்பனை செய்து வருகிறது. ஆனால் முகேஷ் அம்பானி நினைத்த அளவுக்கு இதில் வர்த்தகத்தை பிடிக்க முடியவில்லை. இதற்காக இளம் தலைமுறையினரை கவரும் வகையில் வெளிநாட்டு ஸ்னாக்ஸ் வகையை இந்தியாவுக்கு கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளது.

வெளிநாட்டு ஸ்னாக்ஸ் பிஸ்னஸ்-ல் இறங்கும் முகேஷ் அம்பானி.. Alan’s Bugles இந்தியாவில் அறிமுகம்..!!

ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் ப்ராடெக்ட்ஸ் லிமிடெட் இன்று வெளியிட்ட அறிவிப்பில் வெஸ்டர்ன் ஸ்னாக்ஸ் பிரிவில் இந்தியாவில் முதல் முறையாக Alan's Bugles அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இது வெளிநாடுகளில் மிகவும் பிரபலமாக இருக்கும் வேளையில் இந்தியாவில் கொண்டு வர திட்டமிட்டு உள்ளது. இது பெப்சி நிறுவனத்தின் ஸ்னாக்ஸ் வர்த்தகத்திற்கு போடியாக ரிலையன்ஸ் Alan's Bugles அறிமுகம் செய்ய உள்ளது.

 ரிலையன்ஸ்-க்கே இந்த நிலையா..? 1000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் ஈஷா அம்பானி..! ரிலையன்ஸ்-க்கே இந்த நிலையா..? 1000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் ஈஷா அம்பானி..!

இதற்காக ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் ப்ராடெக்ட்ஸ் லிமிடெட், 50 வருடங்களாக இயங்கி வரும் ஜெனரல் மில்ஸ் நிறுவனத்துடன் கூட்டணி சேர்ந்து பிரிட்டன், அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளில் கிடைக்கும் Alan's Bugles-ஐ இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இதுக்குறித்து ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் தனது அறிக்கையில், இதுவரையிஸ் இந்திய ஸ்னாக்ஸ் பிரிவில் வர்த்தகம் செய்த நிலையில் western snacks பிரிவில் வர்த்தகம் செய்யப்பட உள்ளது.

வெளிநாட்டு ஸ்னாக்ஸ் பிஸ்னஸ்-ல் இறங்கும் முகேஷ் அம்பானி.. Alan’s Bugles இந்தியாவில் அறிமுகம்..!!

இந்திய சந்தைக்கு ஏற்றார் போல் சுவை மற்றும் விலையில் ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் Alan's Bugles-ஐ இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. துவக்க விலையாக 10 ரூபாயில் இருந்து இந்த பிரத்தியேக கார்ன் சிப்ஸ் வகைகளை அறிமுகம் செய்யப்பட உள்ளது. தரமான பொருட்களை மலிவான விலையில் மக்களுக்கு அளிக்கும் நோக்கத்துடன் Alan's Bugles-ஐ அறிமுகம் செய்ய உள்ளதாக ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் ப்ராடெக்ட்ஸ் லிமிடெட் தெரிவித்துள்ளது.

ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் ப்ராடெக்ட்ஸ் லிமிடெட் தனது உணவு பொருட்கள் பிராண்டான Independence-ஐ குஜராத்தில் இருந்து துவங்கியது, கேம்பா கோலா குளிர்பானத்தை ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இருந்து துவங்கியது. இந்த வகையில் Alan's Bugles-ஐ கேரளாவில் இருந்து துவங்குகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Mukesh ambani's Reliance Consumer launching Alan’s Bugles in India compete with pepsi co snacks business

Mukesh ambani's Reliance Consumer launching Alan’s Bugles in India compete with pepsi co snacks business
Story first published: Friday, May 26, 2023, 17:35 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X