இந்தியாவின் முன்னணி தொழில் அதிபர்களில் ஒருவர் முகேஷ் அம்பானி என்பதும் அவருக்கு ஏற்கனவே மத்திய அரசு பாதுகாப்பு அளித்து உள்ளது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் தற்போது முகேஷ் அம்பானிக்கு மிரட்டல் விடுத்து இருப்பதாக செய்திகள் வெளியானதை அடுத்து கூடுதல் பாதுகாப்பு அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
உளவுத்துறை எச்சரிக்கை காரணமாக தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியுள்ளது.
மத்திய அரசின் பாதுகாப்பு
பிரபலமான தொழிலதிபர்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு உளவுத்துறை கொடுக்கும் தகவலின் அடிப்படையில் மத்திய அரசு பாதுகாப்பை வழங்கி வருகிறது என்பது தெரிந்ததே. எக்ஸ், ஒய், இசட், இசட் பிளஸ் மற்றும் கருப்பு பூனை என ஐந்து வகையான பாதுகாப்புகள் கொடுக்கப்பட்டு வருகிறது.
இசட் பிளஸ் பாதுகாப்பு
இந்த ஐந்து பிரிவுகளில் இசட் பிளஸ் பாதுகாப்பு தான் மிகவும் உயர்ந்த பாதுகாப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாதுகாப்பு பிரிவில் 10 கமாண்டோ படையினர் உள்பட 55 பேர் இருப்பார்கள் என்பதும் அவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்பட ஒரு சிலருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.
முகேஷ் அம்பானிக்கு இசட் பிளஸ்
இந்நிலையில் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும், இதனை அடுத்து உளவுத்துறை கொடுத்த தகவலின் அடிப்படையில் அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
அம்பானி இல்லத்திற்கு பாதுகாப்பு
ஏற்கனவே முகேஷ் அம்பானிக்கு இசட் பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அது இசட் பிளஸ் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மும்பையில் உள்ள முகேஷ் அம்பானியின் இல்லத்திற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வெடிகுண்டு கார்
கடந்த ஆண்டு முகேஷ் அம்பானியின் இல்லம் அருகே வெடிகுண்டு நிரப்பப்பட்ட கார் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து போலீசார் விசாரணை செய்ததில் வாஸ் என்பவர் உள்பட ஒரு சிலர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு பின்னரே அம்பானியின் இல்லத்திற்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அம்பானி இல்லம்
தொழிலதிபர் அம்பானிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது மட்டுமின்றி அவரது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications