ரிலையன்ஸ் ஜியோ சேர்மன்: ஆகாஷ் அம்பானி சாதித்துள்ளது என்ன..? உண்மையில் தகுதியானவரா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரிலையன்ஸ் ஜியோ நிர்வாகம் ஆகாஷ் அம்பானி-யை சேர்மன் ஆக நியமிக்க அதன் நிர்வாகக் குழு ஒப்புதல் அளித்துள்ளதாகச் செவ்வாய்க்கிழமை ரிலையன்ஸ் ஜியோ அறிவித்தது.

 

இந்தத் திடீர் மாற்றம் முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் இயக்குநர் (director) பதவியை ஜூன் 27 ஆம் தேதி ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிலேயே வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் டெலிகாம் சேவை நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ-வின் தலைவராக ஆகாஷ் அம்பானி, முகேஷ் அம்பானியின் மூத்த மகன் என்பதைத் தாண்டி என்ன தகுதி உள்ளது.

Reliance Jio: சேர்மன் பதவியை ராஜினாமா செய்தார் முகேஷ் அம்பானி.. ஆகாஷ் அம்பானி ஆட்டம் ஆரம்பம்..!

ரிலையன்ஸ் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் முக்கிய வர்த்தகப் பிரிவான டெலிகாம் சேவை அளிக்கும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் துவக்க நாளில் இருந்து முகேஷ் அம்பானி-யும் அவரது மூத்த மகனான ஆகாஷ் அம்பானி தலைமையில் நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது.

இதனால் ஆகாஷ் அம்பானி இப்பிரிவு வர்த்தகத்தில் பிற அதிகாரிகளைக் காட்டிலும் அதிகப்படியான அனுபவம் கொண்டவராக உள்ளார்.

 

ஆகாஷ் அம்பானி

ஆகாஷ் அம்பானி

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் டிஜிட்டல் சேவை வளர்ச்சிப் பாதையில் முக்கியப் பங்கு வகித்த காரணத்திற்காகவும், ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் நிறுவனத்தின் சேர்மன் ஆக நியமிக்கப்பட்டு உள்ளார் ஆகாஷ் அம்பானி. இவருடைய பணிகளும் வெற்றியை தொடர்ந்து உயர் பதவிகள் அளிக்கப்படும் என ரிலையன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தொழில்நுட்பம்
 

தொழில்நுட்பம்

ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் நிறுவனத்தின் சேர்மன் ஆக நியமிக்கப்பட்டு உள்ள ஆகாஷ் அம்பானி தொடர்ந்தது கட்டிங் எட்ஜ் தொழில்நுட்பம் பயன்படுத்தி இன்னோவேஷன் மற்றும் டெக்னாலஜி எகோசிஸ்டத்தை உருவாக்க உள்ளது. மேலும் டிஜிட்டல் சேவையை மேம்படுத்த டேட்டா மற்றும் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த உள்ளார் ஆகாஷ் அம்பானி.

பட்டம்

பட்டம்

முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியின் மூத்த மகனான ஆகாஷ் அம்பானி 2014 ஆம் ஆண்டு அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் எக்னாமிக்ஸ் பிரிவில் பட்டம் பெற்றவர். ஆகாஷ் அம்பானி படிப்பை முடித்த கையோடு ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் பணியில் சேர்ந்தார்.

2016 ஜியோ துவக்கம்

2016 ஜியோ துவக்கம்

முகேஷ் அம்பானி மற்றும் ஆகாஷ் அம்பானி கூட்டணியில் முயற்சியில் தான் 2016ஆம் ஆண்டு இந்தியாவின் மிகவும் போட்டி மிகுந்த டெலிகாம் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம் செய்து 4ஜி சேவையில் பெரும் புரட்சியை உருவாக்கினர். தற்போது 5ஜி சேவையில் இதேபோன்ற மேஜிக்-ஐ உருவாக்கித் திட்டமிட்டு காத்திருக்கின்றனர்.

கன்ஸ்யூமர் ரீடைல்

கன்ஸ்யூமர் ரீடைல்

ஆகாஷ் ஆம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்கள் மற்றும் டெக் தளத்தைப் பயன்படுத்திக் கன்ஸ்யூமர் ரீடைல் வர்த்தகத்தைக் குறுகிய காலத்தில் மிகப்பெரிய வர்த்தகத்தை உருவாக்க முடிந்தது.

பிரம்மாண்டம்

பிரம்மாண்டம்

ரிலையன்ஸ் ஜியோ தற்போது டெலிகாம் சேவை மட்டும் அல்லாமல் ஈகாமர்ஸ், வர்த்தகச் சந்தைக்கான டிஜிட்டல் எகோசிஸ்டம், செயற்கை நுண்ணறிவு, பிளாக்செயின், டிஜிட்டல் கேமிங் எனப் பல துறையில் இயங்கி வருகிறது.

ஆகாஷ் அம்பானி தகுதியானவரா..?

ஆகாஷ் அம்பானி தகுதியானவரா..?

இது அனைத்தும் ஆகாஷ் அம்பானி முயற்சியில் தான் என்றால் மிகையில்லை.. இப்போ சொல்லுங்க ஆகாஷ் அம்பானி தகுதியானவரா..? இல்லையா..? மறக்காம பதிலை கமெண்ட் பண்ணுங்க.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Mukesh Ambani's son Akash Ambani is New Chairman of Reliance Jio: Know his biography

Mukesh Ambani's son Akash Ambani is New Chairman of Reliance Jio: Know his biography ரிலையன்ஸ் ஜியோ புதிய சேர்மன்.. ஆகாஷ் அம்பானி சாதித்துள்ளது என்ன.. உண்மையில் தகுதியானவரா..?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X