ஞாயிற்றுக்கிழமை இயங்கும் எஸ்பிஐ வங்கி கிளை.. நிஜமாவா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக விளங்கும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா-வின் மும்பையின் கோவண்டி வங்கி கிளை தனது வாராந்திர விடுமுறையை ஞாயிற்றுக்கிழமைகளில் இருந்து வெள்ளிக்கிழமை ஆக மாற்றியுள்ளது.

இந்த மாற்றத்தை டிசம்பர் 1 ஆம் தேதி முதல் அமலுக்குக் கொண்டு வருகிறது.

முக்கிய மைல்கல்லை எட்டிய எஸ்பிஐ.. 3வது மிகப்பெரிய வங்கியாக ஏற்றம்.. எப்படி தெரியுமா? முக்கிய மைல்கல்லை எட்டிய எஸ்பிஐ.. 3வது மிகப்பெரிய வங்கியாக ஏற்றம்.. எப்படி தெரியுமா?

மும்பை கோவண்டி வங்கி கிளை

மும்பை கோவண்டி வங்கி கிளை

மும்பையின் கோவண்டி வங்கி கிளை தனது வாராந்திர விடுமுறை குறித்த அறிவிப்பு இந்த வாரம் மும்பையில் உள்ள பிற கிளைகளுக்கும் அனுப்பப்பட்ட நிலையில் இந்தச் செய்தி தற்போது இந்தியா முழுவதும் பிரபலமாகியுள்ளது.

எஸ்பிஐ

எஸ்பிஐ

மும்பையின் வடகிழக்கு புறநகர்ப் பகுதியான கோவண்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள உள்ளூர் சிறுபான்மை மக்களுக்கு வசதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி டிசம்பர் 1 ஆம் தேதி முதல் எஸ்பிஐ கோவண்டி கிளை அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும், மாதத்தின் 2வது மற்றும் 4வது சனிக்கிழமைகளிலும் மூடப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 வெள்ளிக்கிழமை விடுமுறை

வெள்ளிக்கிழமை விடுமுறை

எஸ்பிஐ கோவண்டி கிளையின் ஞாயிறு முதல் வியாழன் வரை, வணிக நேரம் சாதாரணமாகவே இருக்கும். அதாவது தினமும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அனைத்து வங்கி சேவைகளும் இயங்கும் எனவும் இந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

எஸ்பிஐ மில்லினியம் கிளை

எஸ்பிஐ மில்லினியம் கிளை

இதேபோல் மும்பையின் தாதர் பகுதியில் உள்ள எஸ்பிஐ மில்லினியம் கிளை கூட எஸ்பிஐ கோவண்டி கிளையைப் போல் பின்பற்றும் என்று சிலர் கூறிய நிலையில் இக்கிளை அதிகாரிகள் செவ்வாயன்று அதை முற்றிலும் நிராகரித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை

ஞாயிற்றுக்கிழமை

மும்பை மற்றும் நாட்டின் வேறு சில பகுதிகளில் உள்ள வேறு சில வங்கிகளின் கிளைகளும் ஞாயிற்றுக்கிழமை பாதி நாள் வங்கிகள் இயங்கி வருகிறது. உள்ளூர் மக்களின் வசதிக்காக அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்கப்படுகிறது.

சமூக ஊடகங்கள்

சமூக ஊடகங்கள்

கோவண்டி எஸ்பிஐ கிளை நடவடிக்கையானது சமூக ஊடகங்களில் வெள்ளிக்கிழமை வங்கி கிளை மூடுவது குறித்து அதிகப்படியான எதிர்ப்புகளையும், விமர்சனங்களையும் எதிர்கொண்டது. ஆனால் உள்ளூர் மக்கள்தொகையின் கோரிக்கைகளைப் பூர்த்தி செய்வதற்காகச் சம்பந்தப்பட்ட பகுதிகளில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதைப் பலரும் வரவேற்றுள்ளனர்.

டிஜிட்டல் சேவை

டிஜிட்டல் சேவை

வங்கி சேவையில் அதிகமானவை டிஜிட்டல் சேவைகளாக மாறிவிட்ட நிலையில், பெரும்பாலான மக்கள் வங்கி கிளைக்குச் செல்வது பெரு நகரங்களில் குறைந்துள்ளது. இந்த நிலையில் வங்கி கிளை இருக்கும் பகுதியின் மக்கள் மற்றும் வர்த்தகத்திற்காக வங்கிக் செயல்பாடுகள் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் மாற்றுவது வழக்கம் தான்.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக இருக்கும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா சமீபத்தில் YONO-வில் ரியல் டைம் எக்ஸ்பிரஸ் கிரெடிட் (ஆர்டிஎக்ஸ்சி) என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்தது.

ரியல் டைம் எக்ஸ்பிரஸ் கிரெடிட்

ரியல் டைம் எக்ஸ்பிரஸ் கிரெடிட்

எஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளர்களாக இருக்கும் மத்திய மாநில அரசு ஊழியர்கள், பாதுகாப்புப் படை வீரர்கள் இனி தனிநபர் கடன்களுக்காக வங்கிகளுக்கு வர வேண்டிய அவசியம் இல்லை, மாத சம்பளம் பெறும் வாடிக்கையாளர்களுக்கு வேகமாகவும், உடனடியாகக் கடன் அளிக்க வேண்டும் என்பதற்காக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா முதன்மையான தனிநபர் கடன் திட்டமாக இதை உருவாக்கியுள்ளது. தெரிவித்துள்ளது.

பர்சனல் லோன்

பர்சனல் லோன்

எக்ஸ்பிரஸ் கிரெடிட் திட்டம் எஸ்பிஐ வங்கியின் பர்சனல் லோன் பிரிவின் டிஜிட்டல் அவதாரமாக விளங்குகிறது. எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் இப்போது வீட்டில் இருந்த பிடியே YONO செயலி வாயிலாக RTXC திட்டம் மூலம் முற்றிலும் காகிதமற்ற மற்றும் டிஜிட்டல் முறையின் கீழ் கடன் பெறலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Mumbai SBI Govandi bank branch works on sunday and weekly off on Friday

Mumbai SBI Govandi bank branch works on sunday and weekly off on Friday
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X