பணி நீக்கம் என்பது ஒவ்வொருவர் வாழ்விலும் யாரும் அனுபவிக்க கூடாதா? ஒரு துரதிஷ்டவசமான சம்பவம் எனலாம். ஏனெனில் அதன் தாக்கத்தினை வெறும் வார்த்தைகளால் யாரும் விவரித்திட முடியாது. அதன் வலியினை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரியும்.
அந்த வலியினைத் தான் டெக் ஊழியர்கள் பலரும் அனுபவித்து வருகின்றனர். குறிப்பாக ட்விட்டர், மெட்டா, மைக்ரோசாப்ட், அமேசான் உள்ளிட்ட பல நிறுவன ஊழியர்களும் அனுபவித்து வருகின்றனர்.
துரதிஷ்டவசமான நாள்
அப்படி ஒரு துரதிஷ்டவசமான சம்பவம் தான் ராஜு கடம் என்பவருக்கும் நடந்துள்ளது. இது குறித்து அவரின் லிங்கிட் இன் பக்கத்தில், மனதை நெருக்கும் விதமாக ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
அதில் துரதிஷ்டவசமாக இன்று நான் ஒரு செய்தியினை பெற்றேன். அது மெட்டா நிறுவனத்தின் 11,000 பேர் பணி நீக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன்.
இது அழகான பயணம்
இந்த மோசமான செய்தியினைத் தான் இன்று நான் பெற்றேன். நான் மெட்டா நிறுவனத்தில் இணைந்ததில் இருந்து வலுவான செயல்திறனை கொடுத்துள்ளேன். இந்த அழகான பயணம் 9 மாதங்களுக்கு முன்பு தான் தொடங்கியது. ஆனால் வெறும் 9 மாதங்களில் எனது பயணம் முடிவடையும் என, நான் ஒரு போதும் நினைக்கவில்லை. அது திடீரென முடிவுக்கு வந்து விட்டது.
அது அருமையான நாட்கள்
நான் மெட்டாவில் பணியாற்றிய அந்த நாட்களை மிகவும் விரும்புகிறேன். அதனை மிகவும் ரசித்தேன். இது மிக அருமையான ஒரு நல்ல அனுபவம். நான் அந்த காலகட்டத்தில் அற்புதமான திறமையான நபர்களை சந்தித்தேன்.. நான் எனது வேலையை மிஸ் செய்கிறேன். நான் என்னால் முடிந்தவற்றை திறமையாக மெட்டாவில் செய்தேன்.
அனைவருக்கும் நன்றி
நான் எனது நண்பர்கள், என்னுடைய மேலாளர்கள், ஜெஃப்ரி சோன்கோ, மார்க் லம்போர்ட் மற்றும் ஜதீந்தர் சிங் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். பணி நீக்கம் செய்யப்பட்ட 11,000 பேரும் வலிமையான மனதுடன் இருங்கள்.
ஹெச் 1 பி விசா மூலம் பணி
நான் அமெரிக்காவில் ஹெச் 1 பி விசா மூலம் அமெரிக்காவில் வசித்து வருகின்றேன். நான் அமெரிக்காவில் இருந்து வெளியேறுவதற்காக நேரம் தொடங்கி விட்டது. எனது குழந்தைகளுடன் இங்கிருந்து வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். எனினும் வேலை தேடும் விதமாக மெட்டாமேட்ஸ் , இணைப்புகள் மற்றும் லிங்க்ட் இன் உள்ளிட்டவற்றின் மூலம் அணுகுகிறேன்.
வேலை கிடைக்காவிடில் US விட்டு வெளியேறனும்
எனக்கு சரியான நேரத்தில் வேலை கிடைக்காவிட்டால் நான் எனது குழந்தைகளுடன், அமெரிக்காவினை விட்டு வெளியேற வேண்டியிருக்கும். நான் 16 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வருகின்றேன். 2008, 2015, 2018 வீழ்ச்சியினை எல்லாம் கண்டேன். ஆனால் அந்த காலகட்டத்தில் நான் எனது வேலையினை இழக்கவில்லை.
என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்
எனது இரண்டு மகன்கள் அமெரிக்க குடிமக்கள். அவர்களின் வாழ்க்கை பாதிக்கப்படும். அமெரிக்காவில் வெற்றி பெற என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். எனக்கு அமெரிக்காவில் விரைவில் புதிய வேலை தேவை. என வேலை தேடுவதற்கு உதவுங்கள். லிங்க்ட் இன் பயனர்களுக்கும், மெட்டாமேட்ஸ் அனைவரின் ஆதரவுக்கும் நன்றி. விரைவில் நான் அனைவருக்கும் பதிலளிப்பேன் என்று கூறியுள்ளார்.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

மினி பாகிஸ்தான்? அடுத்தடுத்த சர்ச்சையில் TCS, டெக் மகேந்திரா! ஐடி நிறுவனங்களில் என்ன தான் நடக்கிறது?

அட்சய திருதியை தங்கம் விற்பனை: தள்ளுபடிகளை வாரி வழங்கும் நகை கடைகள்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

விஜய் -க்கு எம்.எல்.ஏ பதவியை தரப்போவது பெரம்பூரா? திருச்சி கிழக்கா? இது தான் கள நிலவரம்!!

ஸ்திரீ சக்தி SS 515 லாட்டரி: யாருக்கெல்லாம் அடித்தது ஜாக்பாட்!! முழு விவரம்



Click it and Unblock the Notifications