27500 பேருக்கு வேலைவாய்ப்பு.. மிந்திரா அதிரடி அறிவிப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் அடுத்தடுத்து ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வரும் நிலையில், நாட்டின் முன்னணி ஆன்லைன் ஆடை விற்பனை நிறுவனமான மிந்திரா சீசன் விற்பனைக்காகத் தற்காலிகமாகச் சுமார் பல ஆயிரம் ஊழியர்களைப் பணியில் அமர்த்த உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே உணவு டெலிவரி மற்றும் பிற ஆன்லைன் சேவை நிறுவனங்களில் போதுமான ஊழியர்கள் இல்லாமல் பல முன்னணி நிறுவனங்கள் வர்த்தகத்தை இழந்து வருகிறது.

இந்நிலையில் மிந்திரா-வின் இந்தத் திட்டத்தைச் சாத்தியப்படுத்துவது என்பது பெரும் சவால் தான்.

திடீரென ராணுவத்தை பலப்படுத்தும் பாகிஸ்தான்.. நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க முடிவு..?! திடீரென ராணுவத்தை பலப்படுத்தும் பாகிஸ்தான்.. நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க முடிவு..?!

மிந்திரா

மிந்திரா

பிளிப்கார்ட் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஆன்லைன் பேஷன் மற்றும் பியூட்டி பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனமான மிந்திரா தனது 16வது என்ட் ஆப் ரீசன் சேல் என்ற அதிரடி தள்ளுபடி விற்பனையை வருகிற ஜூன் 11ஆம் தேதி துவங்கி 6 நாள் நடத்த உள்ளது.

27500 தற்காலிக ஊழியர்கள்

27500 தற்காலிக ஊழியர்கள்

இந்த மாபெரும் விற்பனையைத் திறம்படச் செய்து முடிக்கத் தற்காலிக ஊழியர்கள் அதிகளவில் தேவைப்படுகின்றனர். இதற்காக டெலிவரி, வேர்ஹவுஸ், வாடிக்கையாளர் சேவை எனப் பல பிரிவுகளில் கூடுதலாக 27500 தற்காலிக ஊழியர்களைப் பணியில் அமர்த்த முடிவு செய்துள்ளது.

பெண்களுக்குத் தனி ஒதுக்கீடு

பெண்களுக்குத் தனி ஒதுக்கீடு

தற்போது மிந்திரா அறிவித்துள்ள 27500 தற்காலிக வேலைவாய்ப்பில் 2000 பெண்கள், 300 உடன் ஊனமுற்றோர்-க்கு வேர்ஹவுஸ் அதாவது பொருட்கள் பாதுகாக்கப்படும் கிடங்குகளில் பணியில் அமர்த்த முன்கூட்டியே திட்டமிட்டுத் தனிப்பட்ட முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக மிந்திரா சிஇஓ நந்திதா சின்ஹா தெரிவித்துள்ளார்.

இரண்டு மடங்கு அதிகம்

இரண்டு மடங்கு அதிகம்

மிந்திரா நிறுவனம் கடந்த ஆண்டுச் செப்டம்பர் மாதம் நடத்திய தள்ளுபடி விற்பனையில் சுமார் 11,000 பேரை தற்காலிக பணியில் அமர்த்தியது குறிப்பிடத்தக்கது. இந்த முறை எண்ணிக்கை இரண்டு மடங்கிற்கு அதிகமாகியுள்ளது.

பெங்களூரு, மும்பை, டெல்லி

பெங்களூரு, மும்பை, டெல்லி

பெங்களூரு, மும்பை, டெல்லி மற்றும் கொல்கத்தா ஆகிய முக்கிய மையங்களில் பேகேஜ்களை வரிசைப்படுத்துதல், தரப்படுத்துதல் மற்றும் பேக்கிங் செய்தல் போன்ற செயல்பாடுகளில் கூடுதல் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்

டெலிவரி, வாடிக்கையாளர் சேவை

டெலிவரி, வாடிக்கையாளர் சேவை

இதேபோல் டெலிவரி பணிகளுக்காக மட்டுமே 4,000 தற்காலிக ஊழியர்களையும், வாடிக்கையாளர் சேவையில் 1400 பேரையும் நியமிக்க உள்ளதாக மிந்திரா சிஇஓ நந்திதா சின்ஹா தெரிவித்துள்ளார். மேலும் 5000 புதிய சிறு மற்றும் நடுத்தர விற்பனையாளர்கள் இந்த விற்பனையில் சேர உள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Myntra creating 27,500 temporary jobs for june 11 End of Reason Sale

Myntra creating 27,500 temporary jobs for june 11 End of Reason Sale 27500 பேருக்கு வேலைவாய்ப்பு.. மிந்திரா அதிரடி அறிவிப்பு..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X