Nandan Nilekani: பெங்களூரில் முக்கிய பகுதியில் புதிய வீடு.. விலை என்ன தெரியுமா..?!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்போசிஸ் இணை நிறுவனர், முக்கியக் கோடீஸ்வர தொழிலதிபர், நாட்டின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி எனப் பல பெயர்களில் பாராட்டப்படும் நந்தன் நிலேகனி பெங்களூரில் முக்கியமான பகுதியில் புதிய வீட்டை வாங்கியுள்ளார்.

இந்தியாவின் டெக் நகரமாகக் கருதப்படும் பெங்களூரின் ரியல் எஸ்டேட் வர்த்தகம் கடந்த மழை வெள்ளத்திற்குப் பின்பு மிகப்பெரிய அளவில் மாறியுள்ளது என்றால் மிகையல்ல.

பெரும் தொழிலதிபர்கள், பணக்காரர்கள் ஊருக்கு வெளியில் புதிய வீட்டை வாங்கும் நிலை மாறி தற்போது பெங்களூரின் மைய பகுதியில் அதிகத் தொகைக்கு வீட்டை வாங்கும் நிலை உருவாகியுள்ளது. இதில் இன்போசிஸ் இணை நிறுவனரான நந்தன் நிலேகனி-யும் ஒருவராக மாறியுள்ளார்.

முதல் முறையாக 10000 கோடி ரூபாய் லாபம்.. அசத்தும் டிசிஎஸ், வியக்கும் இன்போசிஸ்..! முதல் முறையாக 10000 கோடி ரூபாய் லாபம்.. அசத்தும் டிசிஎஸ், வியக்கும் இன்போசிஸ்..!

நந்தன் நிலேகனி

நந்தன் நிலேகனி


நந்தன் நிலேகனி-யின் குடும்ப டிரஸ்ட் அமைப்பான NRJN சமீபத்தில் பெங்களூரின் முக்கிய மற்றும் காஸ்ட்லியான பகுதிகளில் ஒன்றாக விளங்கும் கோரமங்களாவில் சுமார் 59 கோடி ரூபாய்க்கு புதிய வீட்டை வாங்கியுள்ளார்.

ஆடம்பர வீடுகள் விற்பனை

ஆடம்பர வீடுகள் விற்பனை

கடந்த 6 மாதத்தில் இந்தியாவின் பெரு நகரங்களில் ஆடம்பர வீடுகளின் விற்பனை தாறுமாறாக அதிகரித்துள்ளது. பல தொழிலதிபர்கள், பணக்காரர்கள், நிறுவனத் தலைவர்கள், பிரபலங்கள் எனப் பணம் படைத்த பலர் ஆடம்பர வீடுகளை வாங்கி வருகின்றனர்.

கோரமங்களா 3வது பிளாக்

கோரமங்களா 3வது பிளாக்

நந்தன் நிலேகனி-யின் NRJN குடும்ப டிரஸ்ட் கோரமங்களா 3வது பிளாக் பகுதியில் சுமார் 9600 சதுரடி நிலத்தில் 4200 சதுரடி பரப்பளவில் அமைந்துள்ள வீட்டை 59 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக ஆவணங்களைப் பார்த்த zapkey நிறுவனம் தெரிவித்துள்ளது.

முக்கியமான பகுதி

முக்கியமான பகுதி

கோரமங்களா 3வது பிளாக் பகுதியில் நாராயாண ஹெல்த் நிறுவனத்தின் தேவி பிரசாத் ஷெட்டி, பிளிப்கார்ட் நிறுவனர்களான சச்சின் பன்சால், பின்னி பன்சால் போன்ற பல நிறுவன தலைவர்களும், தொழிலதிபர்களும் உள்ளனர். இந்தப் பட்டியலில் தற்போது நந்தன் நிலேகனி சேர்ந்துள்ளார்.

டிமாண்ட்

டிமாண்ட்

இந்த வீட்டின் விற்பனை செப்டம்பர் 26, 2022ல் நடந்துள்ளது, ரிஜிஸ்டர் பத்திரத்தில் நந்தன் நிலேகனி மற்றும் ராஜாமோகன் கிருஷ்ணன் கையெழுத்திட்டு உள்ளனர். கோரமங்களாவில் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான நிலம் அல்லது வீடு மட்டுமே விற்பனைக்கு உள்ளதால் பெரு பணக்காரர்கள் மத்தியில் அதிகப்படியான டிமாண்ட் உள்ளது.

NRJN குடும்ப டிரஸ்ட்

NRJN குடும்ப டிரஸ்ட்

இதே பகுதியில் NRJN குடும்ப டிரஸ்ட் இந்த வருடம் ஏப்ரல் மாதம் சுமார் 58 கோடி ரூபாய்க்கு 9600 சதுரடி கொண்ட ஒரு சொத்தை வாங்கியது குறிப்பிடத்தக்கது. இந்தச் சொத்தின் மதிப்பு 58 கோடி ரூபாய். 2022ல் கோரமங்களா பகுதியில் மிகவும் காஸ்ட்லியான வர்த்தகம் இதுவாகத் தான் இருக்கும் என ரியல் எஸ்டேட் வல்லுனர்கள் கூறுகின்றனர்.

பெங்களூர்

பெங்களூர்

அப்படிப் பார்த்தால் 2022ல் பெங்களூரில் ஆடம்பர வீடுகளின் விலையில் கடந்த ஒரு வருடத்தில் பெரிய அளவிலான மாற்றங்கள் ஏற்படவில்லையா..? அல்லது மழை வெள்ளம் வளர்ச்சியைப் பாதித்துள்ளதா..?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Nandan Nilekani family trust buys 2nd house in Bengaluru Koramangala 3rd Block for Rs 59 crore

Nandan Nilekani family trust buys 2nd house in Bengaluru Koramangala 3rd Block for Rs 59 crore; In april NRJN family trust another property for 58 crore. Bengaluru Koramangala 3rd Block is place where Devi Prasad Shetty of Narayana Health and Flipkart founders Sachin Bansal and Binny Bansal ultra rich people lives.
Story first published: Tuesday, October 11, 2022, 12:41 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X