60% ஊழியர்களுக்கு விடுமுறை இல்லை.. ஜெட் ஏர்வேஸ் சிஇஓ விளக்கம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த ஜெட் ஏர்வேஸ் தற்போது தரையிறக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் இந்நிறுவனத்தை மீண்டும் இயக்க பல வகையில் முயற்சி செய்யப்பட்டு வரும் நிலையில், சில கடுமையான முடிவுகளையும் எடுக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டு உள்ளது.

சன் டிவி கலாநிதி மாறன் வாங்கிய பிரைவேட் ஜெட்.. விலை என்ன தெரியுமா..? சன் டிவி கலாநிதி மாறன் வாங்கிய பிரைவேட் ஜெட்.. விலை என்ன தெரியுமா..?

நரேஷ் கோயல்

நரேஷ் கோயல்

டிராவல் ஏஜென்சி நிறுவனத்தில் பணியாற்றி வந்த நரேஷ் கோயல் பல முன்னணி விமானச் சேவை நிறுவனத்தில் பணியாற்றி 1992ல் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தைத் துவங்கி 1995ல் முதல் முறையாக விமானச் சேவை இந்தியாவில் அளிக்கத் துவங்கினார்.

ஜெட் ஏர்வேஸ்

ஜெட் ஏர்வேஸ்

2016ல் இந்தியாவின் மிகப்பெரிய விமானச் சேவை நிறுவனமாக உயர்ந்து, ஆனால் 2019ல் திவாலாகி, விமானச் சேவைகளை மொத்தமாக முடக்கப்பட்டு, அனைத்து விமானங்களும் தரையிறக்கப்பட்டது. இந்த நிலையில் தான் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை ஜாலான்-கால்ராக் கூட்டமைப்பு மீண்டும் இயக்க முயற்சி செய்து வருகிறது.

60% ஊழியர்களுக்கு விடுமுறை
 

60% ஊழியர்களுக்கு விடுமுறை

இந்த முயற்சியின் ஒரு பகுதியாக மூத்த மேலாளர்கள் உட்பட 60 சதவீத ஊழியர்களைச் சம்பளம் இல்லாமல் நீண்ட விடுமுறையை அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், மீதமுள்ள 40 சதவீத ஊழியர்கள் தற்காலிக சம்பள குறைப்புடன் பணியாற்ற உள்ளதாக இன்று ஜெட் ஏர்வேஸ் தரப்பில் இருந்து தகவல் வெளியானது.

100% தவறான தகவல்

100% தவறான தகவல்

ஜெட் ஏர்வேஸின் தலைமை நிர்வாக அதிகாரி சஞ்சீவ் கபூர், ட்விட்டரில், ஜெட் ஏர்வேஸின் தற்போதைய ஊழியர்களில் 60% பேர், மூத்த நிர்வாகம் உட்பட, 3 மாதங்களாக ஊதியம் இல்லாமல் விடுப்பில் அனுப்பப்பட்டதாகக் கூறியுள்ள அறிக்கை "100% தவறான தகவல்" என்று குறிப்பிட்டுள்ளார்.

விதிமுறை மீறல் இல்லை

விதிமுறை மீறல் இல்லை

ஜலான் கால்ராக் கூட்டமைப்பு (ஜேகேசி) வெள்ளிக்கிழமை கூறியது படி, திவால் தீர்மானம் திட்டத்தின் எந்த விதிமுறைகளையும் மீறவில்லை மற்றும் பணப்புழக்கங்களை நிர்வகிப்பதற்கான கடினமான குறுகிய கால முடிவுகளை எடுக்கலாம் என தெரிவித்துள்ளது.

சிஇஓ சஞ்சீவ் கபூர்

இதில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் சிஇஓ-வாக இருக்கும் சஞ்சீவ் கபூர் கூடக் கணிசமான ஊதிய குறைப்பை ஏற்க ஒப்புக்கொண்டுள்ளதாக வெளியான தகவல்கள், இன்னும் நிறுவன தரப்பில் இருந்து உறுதி செய்யப்படவில்லை. மேலும்  சஞ்சீவ் கபூர் ட்விட்டரில் யாரும் நீக்கப்படவில்லை என்று டிவீட் செய்துள்ளார்.

ஜாலான்-கல்ராக் கூட்டமைப்பு

ஜாலான்-கல்ராக் கூட்டமைப்பு

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை மீட்டு எடுக்கும் முயற்சியில் இருக்கும் புதிய உரிமையாளரான ஜாலான்-கல்ராக் கூட்டமைப்பு, தேசிய நிறுவன சட்ட மேல்முறையீடு தீர்ப்பாயத்திடம் (NCLAT) ஜெட் ஏர்வேஸ் ஊழியர்களுக்கு வருங்கால வைப்பு நிதி மற்றும் கிராஜுவிட்டி 250 கோடி ரூபாய் நிலுவைத் தொகைக்குக் கூடுதல் பணத்தைச் செலுத்த இயலாது என்று கூறியுள்ளது. 

475 கோடி ரூபாய்

475 கோடி ரூபாய்

ஜாலான்-கல்ராக் கூட்டமைப்பு ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தைக் கையகப்படுத்தும் முயற்சியில் கடன் கொடுத்தவர்கள், பிற நிலுவைத் தொகை என அனைத்திற்கும் சேர்த்து 475 கோடி ரூபாய்க்கு மேல் எதையும் செலுத்த வேண்டியதில்லை என்றும் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்திடம் தெரிவித்துள்ளது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்காக 150 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டு உள்ளது எனவும் ஜாலான்-கல்ராக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

NCLT உத்தரவு

NCLT உத்தரவு

அக்டோபர் 21 ஆம் தேதி NCALT ஜாலான்-கல்ராக் கூட்டமைப்பு ஜெட் ஏர்வேஸ் ஊழியர்களுக்கு வருங்கால வைப்பு நிதி மற்றும் கிராஜுவிட்டி நிலுவைத் தொகையில் இருக்கும் நிலுவைத் தொகையைச் செலுத்தக் கோரி உத்தரவிட்டது. மே மாதம் All India Jet Airways' Officers and Staff Association தொடுத்த வழக்கின் காரணமாக இந்த உத்தரவு வெளியானது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Naresh Goyal Founded Jet Airways sends 60 percent of employees on leave without pay is '100% false info'says CEO

Jet Airways sends 60 percent of employees on leave without pay is '100% false info'says CEO
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X