பயணத்த தவிருங்க.. வீட்டில் இருந்தே வேலை செய்யுங்க.. காரணம் இந்த கொரோனா.. ஐடி ஊழியர்களுக்கு அறிவுரை

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: தகவல் தொழில்நுட்ப துறையினை சேர்ந்த அமைப்பான நாஸ்காம் கோவிட் - 19 என்று அழைக்கப்படும் கொரோனா வைரஸின் அச்சுறுத்தலுக்கு மத்தியில், உலகளவில் அரசாங்கங்கள் மற்றும் கார்ப்பரேட்டுகள், குடிமக்கள் அக்கறை காட்ட வேண்டிய ஒரு முக்கிய விஷயம் என்று கூறியுள்ளது.

Recommended Video

கொரோனா பாதிப்புடன் பேருந்தில் பயணம் செய்த இளைஞர் | Bengaluru: Corona Affected guy travelled in Bus

இந்த பரவலை தவிர்க்கும் ஒரு பகுதியாக ஊழியர்கள், அத்தியாவசிய மற்ற பயணங்களை கட்டுபடுத்துமாறும் அது வலியுறுத்தியது.

மேலும் அத்தியாவசிய பயணங்களை மேற்கொள்ள ஒரு மூத்த தலைவரிடமிருந்து கட்டாயம் முன் ஒப்புதல் பெற வேண்டும் என்றும் நாஸ்காம் கூறியுள்ளது.

உறுதியுடன் உள்ளோம்

உறுதியுடன் உள்ளோம்

ஏனெனில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையை சமாளிக்க தேவையான முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ள நாஸ்காம் மற்றும் தொழில்நுட்ப துறை உறுதியுடன் உள்ளது. மேலும் நாஸ்காம் மற்றும் தொழில்நுட்ப துறை இது குறித்தான நடவடிக்கைகளை மேற்கொள்ள முழு உறுதியுடன் உள்ளன. வணிக தொடர்ச்சி மற்றும் பணியாளர் பாதுகாப்பு எங்களுக்கு ஒரு முக்கிய முன்னுரிமையாக உள்ளது.

வீட்டிலிருந்து பணி

வீட்டிலிருந்து பணி

வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கான வணிக தொடர்ச்சியை உறுதி செய்வதற்காக, இத்துறையில் சில தற்செயல் நடவடிக்கைகள் மற்றும் தொழில் நுட்பத்தை நிறுவனங்கள் மேம்படுத்துகிறது என்றும் நாஸ்காம் ஒர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் நிறுவனங்கள் வணிக தொடர்புகள், வாடிக்கையாளர்கள் சந்திப்பு, தொழிநுட்ப தீர்வுகள், ஆகியவற்றை ஆன்லைன் வழியாக விரிவாக பயன்படுத்துகின்றன. இதனால் பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணி புரிய முடியும் என்றும் நாஸ்காம் அறிவித்துள்ளது.

ஊழியர்களுக்கு எச்சரிக்கை

ஊழியர்களுக்கு எச்சரிக்கை

சற்று உடல் நிலை சரியில்லாத அல்லது வேலை செய்ய இயலாத அல்லது சந்தேகத்திற்கு இடமான அறிகுறிகளைக் காட்டும் ஊழியர்களை வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுடன் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் இந்த ஊழியர்கள் மற்ற ஊழியர்களுடன் உடல் ரீதியாக தொடர்பு கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

உணவுகள் கூட கண்கானிப்பு

உணவுகள் கூட கண்கானிப்பு

தேவைப்பட்டால் மட்டுமே அவர்கள் வீடுகளில் இருந்து வேலைக்கு இணைக்கப்படுவார்கள். மேலும் நிறுவனங்கள் பணியிட சுகாதாரத்தையும் மேம்படுத்துகின்றன. இது தவிர ஊழியர்களுக்கு வழங்கப்படும் உணவையும் திறம்பட கண்காணிக்கின்றன என்றும் நாஸ்காம் தெரிவித்துள்ளது. ஏனெனில் ஊழியர்களின் பாதுகாப்பு மிக முக்கியம் என்றும் நாஸ்காம் தெரிவித்துள்ளது.

இதுவரை வணிக தாக்கம் இல்லை

இதுவரை வணிக தாக்கம் இல்லை

மேலும் எங்கள் உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் அடிப்படையில் நாங்கள் உடனடியாக எந்த வணிக தாக்கத்தையும் காணவில்லை. இருப்பினும் மிக நெருக்கமாக நாங்கள் சூழ்நிலையை கண்கானித்து வருகிறோம். நாளுக்கு நாள் அதிகரிகரித்து வரும் கொரோனா தாக்கத்தினால் இதுவரை 75 நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ளது. இதன் மூலம் இதுவரை சுமார் 3,100 பேர் இறந்துள்ளனர். மேலும் 93,000 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

எங்கெல்லாம் பாதிப்பு

எங்கெல்லாம் பாதிப்பு

மேலும் தென் கொரியாவில் இப்போது கிட்டதட்ட 5,000 வழக்குகள் உள்ளதாகவும், இதே ஈரானில் 2,336 பேருக்கும் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. இதையடுத்து அமெரிக்காவில் 127 வழக்குகளும் பரவியுள்ளதாக கூறப்படுகிறது. ஆக கொரோனாவின் இந்த தீவிர தாக்கத்தினை கட்டும்படுத்து தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் மேற்கூறியவற்றை மேம்படுத்துங்கள் என்றும் நாஸ்காம் தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Nasscom says avoid no essential travel of employees, work from home

Nasscom said It people should avoid non essential travel, and work from home, use online tools
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X